உங்களுக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதா? “எனது தேவன் லூசிபர்” எனச் சொன்ன நீங்கள், ஒன்று உங்கள் கூற்றை வாபஸ் பெறுங்கள், அல்லது என்னோடு விவாதத்திற்கு வராதீர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிவிட்டேன். அதன் பின்னரும் சற்றும் உணர்வின்றி ஏன் என்னோடு விவாதத்திற்கு வருகிறீர்கள்?
“இயேசுவை ஆராதிக்காத நான் கிறிஸ்தவனல்ல” என்றும், “எனது தேவன் லூசிபர்” என்றும் தவறான கூற்றுக்களை கூறிவிட்டீர்கள். உங்கள் பார்வையில் கிறிஸ்தவனல்லாதவனும் லூசிபரைத் தேவனாகக் கொண்டவனுமான என்னிடம் என்ன விவாதம் வேண்டிக்கிடக்கிறது? நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் உங்களுக்குப் பதில் சொல்லப்போவதில்லை.
என்னோடு விவாதிக்க விரும்பினால், “எனது தேவன் லூசிபர்” எனும் உங்கள் கூற்றை வாபஸ் பெறவும்.
-- Edited by anbu57 on Saturday 21st of January 2012 11:56:08 AM
//அந்த வார்த்தைகளின்படி சரியாக நடக்க ஆவியானவரின் வழி நடத்துதல் அவசியம் என்று நான் கருதுகிறேன்.//
சரி, உங்களிடம் ஒரு கேள்வி. ஒருவன் இயேசுவின் உபதேசங்களின்படி அப்படியே நடக்கவேண்டும் என மிகுந்த வாஞ்சைகொண்டு அதற்காக முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் முயற்சி செய்தால், அவன் அப்படி நடப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆவியானவர் வழி நடத்துவாரா, நடத்த மாட்டாரா?
//சரி, உங்களிடம் ஒரு கேள்வி. ஒருவன் இயேசுவின் உபதேசங்களின்படி அப்படியே நடக்கவேண்டும் என மிகுந்த வாஞ்சைகொண்டு அதற்காக முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் முயற்சி செய்தால், அவன் அப்படி நடப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆவியானவர் வழி நடத்துவாரா, நடத்த மாட்டாரா? //
ஆவியானவர் வழி நடத்தாமல் ஒருவன் அப்படி நினைக்ககூட முடியாது!!!
சகரியா 4:6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
//உங்களுக்கு எத்தனை தரம் சொன்னாலும் மண்டையில் ஏறாதா? “எனது தேவன் லூசிபர்” எனச் சொன்ன நீங்கள், ஒன்று உங்கள் கூற்றை வாபஸ் பெறுங்கள், அல்லது என்னோடு விவாதத்திற்கு வராதீர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிவிட்டேன். அதன் பின்னரும் சற்றும் சொரணையின்றி ஏன் என்னோடு விவாதத்திற்கு வருகிறீர்கள்?
“இயேசுவை ஆராதிக்காத நான் கிறிஸ்தவனல்ல” என்றும், “எனது தேவன் லூசிபர்” என்றும் முட்டாள்தனமான கூற்றுக்களை கூறிவிட்டீர்கள். உங்கள் பார்வையில் கிறிஸ்தவனல்லாதவனும் லூசிபரைத் தேவனாகக் கொண்டவனுமான என்னிடம் என்ன விவாதம் வேண்டிக்கிடக்கிறது? நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் உங்களுக்குப் பதில் சொல்லப்போவதில்லை.
என்னோடு விவாதிக்க விரும்பினால், “எனது தேவன் லூசிபர்” எனும் உங்கள் கூற்றை வாபஸ் பெறவும். //
கிறிஸ்துவை ஆராதிக்க சொல்லாத எந்த பிதாவும் லூசிபர் தான் என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை. அதே சமயத்தில் பொது விவாதங்களில் என்னுடைய தேவனுக்கு எதிராக யார் எழுதினாலும் நான் மறுபடியும் எழுதுவேன். நீங்கள் எனக்கு பதில் எழுத வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லையே!!
கிறிஸ்துவை ஆராதிக்க சொல்லாத எந்த பிதாவும் லூசிபர் தான் என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.
சகோ. ஜான் அவர்களே கொஞ்சம் பொறுமையாக எழுதுங்கள். தேவையற்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.கடினவார்த்தைகளை பயன்படுத்துவதால் யாரையும் யாரும் ஜெயித்துவிட முடியாது. மேலும் கடின வார்த்தைகள் மற்றும் நேரடி நியாயம் தீர்த்தல்கள் எதுவும் இந்த தளத்தில் அனுமதிக்கபட மாட்டாது. இது இறைவனின் நாமத்தை மகிமை மடுத்த மட்டுமே உள்ள தளம்.
அடுத்தவர்கள் விசுவாசத்துக்கு ஆதார வசனம் கேட்கும் நீங்கள், உங்களுடைய மேற்கண்ட கருத்துக்கு சரியான ஆதார வசனம் தரவேண்டும் இல்லையெனில் இந்த பதிவை நீக்கிவிடுங்கள்.
-- Edited by Nesan on Saturday 21st of January 2012 10:48:48 AM