இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


வேதாகம கிறிஸ்தவன் vs இன்றைய கிறிஸ்தவன் என்ற திரியில் சகோதரர் அன்பு அவர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள்! 
 
Bro. Anbu Wrote:
////பரலோகம் என்றால் என்ன, நித்திய ஜீவன் என்றால் என்ன, யாருக்குப் பரலோகம், யாருக்கு நித்திய ஜீவன் என்றெல்லாம் வேதத்தின்படி அறியாமல், இயேசுவை விசுவாசித்து ஏற்பது மட்டுமே மிகமிக அவசியமானது என்றும் அப்படிச் செய்தால் பரலோகம் நிச்சயம் என்றும் தங்கள் இஷ்டம்போல் சொல்லி அவற்றைப் பரப்பி வருகின்றனர்/////

மத் 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்
 
இவ்வாறு  பிரசங்கித்த ஆண்டவர் இயேசுவின் வாக்குத்தத்தம் 
 
I யோ 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
 
என்று வசனம் சொல்கிறது.  இங்கு  நித்திய ஜீவன் Vs பரலோகம்"  இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதை சற்று விளக்கினால் எல்லோரும்  அறிந்துகொள்ள எதுவாக இருக்குமே. 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Bro.NESAN Wrote:///இங்கு நித்திய ஜீவன் Vs பரலோகம்" இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதை சற்று விளக்கினால் எல்லோரும் அறிந்துகொள்ள எதுவாக இருக்குமே. ///
----------------------------------------------------------------------------------

பரலோகம் என்றால் என்ன??

பரலோகம்-வானம்

பரிசுத்த தேவனின்  வாசஸ்தலம்....

மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

தேவனுடைய சிங்காசனம்,

மத்தேயு 5:34 வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

பரலோகம் கர்த்தருடையது,

உபாகமம் 10:14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

பரிசுத்த ஸ்தலத்திற்கு ஒப்பானது..

யாத்திராகமம் 25:8 அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக


யாத்திராகமம் 25:9 நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.

பரலோகத்தில் காணப்படும் ராஜ்யம்-தேவனுடைய ராஜ்யம்.

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

பரலோகங்கள்-வானங்கள்,வானாதி வானங்கள்..

வெளி 12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.

பரிசுத்த சந்ததிக்காக ஆயதபடிருப்பது-பரலோகங்கள்..

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

பரலோகம்-நித்திய வீடு 

பிரசங்கி 12:5 .. மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்..

எந்த மனுஷனும் மாயையே..
சங்கீதம் 39:5 இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.

சங்கீதம் 39:11 அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.

பிரசங்கி 2:17 ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

பிரசங்கி 2:18 சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.

மேற்கூறிய வசனங்களில் மனிதன் மாயை என்றும் சூரியனுக்கு கீழான  கீழான மனிதன் பட்ட பிரயாசம் அனைத்தும் மாயை என சொள்ளபடிருக்க..நித்ய வீடு என்பது நிச்சயமாக பூலோகத்தில் உள்ளதோ அல்லது மனித பிரயாசத்தினால் உண்டானதாகவோ இருக்காது..

நித்தியவீடு என்பது கர்த்தர் நமக்கு ஆயத்த படுத்தி இருக்கும் பரலோகமே..

II கொரிந்தியர் 5:1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.


யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

சரி., மனிதன் நிலையில்லாதவனாக இருக்க அவன் நித்திய வீட்டிற்க்கு எவ்வாறு செல்ல இயலும்???....

மனிதன்  நித்தியவீட்டிற்கு செல்ல நித்திய ஜீவன் அவசியமாகிறது..

[தொடரும்.. ] 

 

=======================================================

 ஏசாயா 60:19 கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

 



-- Edited by JOHN12 on Wednesday 4th of January 2012 06:08:22 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


பின்வரும் வசனங்களில் இருந்து மரணம் என்பது நித்திரையாகவும்,மரித்த அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும்,சிலர் நித்திய அழிவிற்கும் விழித்து எழுவார்கள் என எதிர்காலத்தை குறிப்பதாகவும் உள்ளது..   
 
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

யோபு 4:20 காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.

மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.


மேற்கூறிய வசனங்களில் இருந்து மரணம்,அழிவு என்பவைகள் முடிவு அல்ல என்பதும் நீதிமான்களுக்கு நித்திய ஜீவனும்,பாவிகளுக்கு நித்திய நிந்தையும் முடிவாக சொல்லபடுகிறது...


நித்தியஜீவன் என்பது இயேசுவே..

யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

யோவான் 6:51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.வழியும்

I யோவான் 1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

I யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

I யோவான் 5:11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ரோமர் 5:21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது..

யோவான் 12:25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

I தீமோத்தேயு 1:16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

நாம் நித்திய வீட்டிற்கு செல்லவேண்டுமானால் நித்தியஜீவனுக்கு தகுதிவுடையவர்களாக இருக்க இயேசுவை விசுவாசிக்க வேண்டும் அவ்வாறல்லாது வேறுகாரியம் இல்லை ...

 

----------------------------------------------------------------------------

 

I தீமோத்தேயு 6:12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

நாம் நித்திய வீட்டிற்கு செல்லவேண்டுமானால் நித்தியஜீவனுக்கு தகுதிவுடையவர்களாக இருக்க இயேசுவை விசுவாசிக்க வேண்டும் அவ்வாறல்லாது வேறுகாரியம் இல்லை ...

 


சகோ. ஜான்12 அவர்களே! மிக அருமையான சுவிசேஷ  பிரசங்கம் ஒன்றை பதிவிட்டுள்ளீர்கள். ஆகினும் என்னுடைய கேள்விக்கு பதில் எதுவென்று புரியவில்லை சகோதரரே.  சகோ. அன்பு அவர்களால் எழுதப்பட்டு நான் கேட்டுள்ள கேள்விக்கு  சுருக்கமான தங்கள் பதில் என்ன? 

 "பரலோகம் போவதற்கு நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும்" என்றாலும்   "நித்திய ஜீவனை பெற்றால் பரலோகம் போகலாம்" என்பதும் ஒரே கருத்துதானே?  
 
இந்த இரண்டு கருத்துப்படி பார்த்தாலும் இரண்டும் ஒன்றுபோல்தான் தெரிகிறது.  இந்நிலையில் "பரலோகம்  போகுதல்" நித்திய ஜீவனை சுதந்தரித்தல்   இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?   
 
அதாவது நித்திய ஜீவனை சுதந்தரித்தும் பரலோகம் போகமுடியாமல் போக வாய்ப்புண்டா?  அல்லது நித்திய  ஜீவன் இல்லாமல் பரலோகம் போக வாய்ப்புண்டா?   
 
நித்திய ஜீவனை பெற்றால் பாலோகம் போய்விடலாம் தானே. பின்னர்  இரண்டையும் தனித்தனியாக பிரித்து கூற காரணம் என்ன? என்பதே எனது கேள்வி.
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


சகோ.நேசன் அவர்களே!!!

Bro.Nesan///"பரலோகம் போவதற்கு நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும்" என்றாலும்   "நித்திய ஜீவனை பெற்றால் பரலோகம் போகலாம்" என்பதும் ஒரே கருத்துதானே? ///

ஒரே கருத்து தான் சகோதரரே..
 
இந்த இரண்டு கருத்துப்படி பார்த்தாலும் இரண்டும் ஒன்றுபோல்தான் தெரிகிறது.  இந்நிலையில் "பரலோகம்  போகுதல்" நித்திய ஜீவனை சுதந்தரித்தல்   இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?  


 நான் எழுதிய நிகழ்வுகளின் படிகளை தாங்கள்  கவனிக்கவில்லையா..

முதலாம் நிகழ்வு-நியாய தீர்ப்பு (அனைவருக்கும்)...

இரண்டாம் நிகழ்வு- நியாய தீர்ப்பின் பலனான நித்திய ஜீவன் மற்றும் நித்திய  நிந்தை...

மூன்றாம் நிகழ்வு-பரிசுத்தவான்கள் பரலோகத்திற்கு போகுதல் மற்றும் துன்மார்க்கர் நித்திய அழிவான அக்கினி கடலுக்கு தள்ளபடுதல்..

இவைகள் அடுத்தடுத்த நிகழ்வுகளே..

வித்தியாசம் என்பது இவைகள் நிகழும் காலங்களே..

Bro.nesan///அதாவது நித்திய ஜீவனை சுதந்தரித்தும் பரலோகம் போகமுடியாமல் போக வாய்ப்புண்டா?  அல்லது நித்திய  ஜீவன் இல்லாமல் பரலோகம் போக வாய்ப்புண்டா? ////

அவ்வாறு சொல்வதற்கில்லை..இறுதிநாளின் நியாய தீர்ப்பிற்கு முன்பாகவே ஏனோக்கு,எலியா உள்ளிடோர் கர்த்தரால் எடுதுகொள்ளபட்டுளனரே!!!
 
Bro.nesan///நித்திய ஜீவனை பெற்றால் பாலோகம் போய்விடலாம் தானே. பின்னர்  இரண்டையும் தனித்தனியாக பிரித்து கூற காரணம் என்ன? என்பதே எனது கேள்வி.///

நித்திய ஜீவன்-கர்த்தர் வாகுததம் பண்ணினது- பரம அழைப்பின் பந்தய பொருள் .
 
பரலோகம் செல்லுதல்-அதில் உள்ள சிறிய பெரிய இடங்கள்,பதவிகள்,நாமங்கள்-கர்த்தரின் கடாட்சம்,கூலி,பிரதிபலன்,கடன்..

 

 



-- Edited by JOHN12 on Friday 6th of January 2012 12:28:19 AM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


Nesan wrote:
 I யோ 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
 
என்று வசனம் சொல்கிறது.  இங்கு  நித்திய ஜீவன் Vs பரலோகம்"  இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதை சற்று விளக்கினால் எல்லோரும்  அறிந்துகொள்ள எதுவாக இருக்குமே.  

சகோ. அன்பு அவர்களே  "நித்திய ஜீவன்" மற்றும் "பரலோகம் சேர்த்தல்" இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து சகோ. ஜான்12 அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள். அனேக வசனங்களை சுட்டி விளக்கம் கொடுத்திருந்தாலும்  அந்த விளக்கங்கள்மூலம் என்னால் ஒரு முழுமையான கருத்தை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த  தங்களின் நிலை என்னவென்பதை ஒரு சிறு விளக்கத்தோடு பதிவிட்டால்  புரிதலுக்கு  ஏதுவாக  அமையும்  என்று கருதுகிறேன்.

   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


சகோ.சுந்தர்:

//இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த  தங்களின் நிலை என்னவென்பதை ஒரு சிறு விளக்கத்தோடு பதிவிட்டால்  புரிதலுக்கு  ஏதுவாக  அமையும்  என்று கருதுகிறேன்.//

கிறிஸ்துவுடனேகூட இருந்து, அவரோடு ஆளுகை செய்யும் ஒரு பிரிவினரைக் குறித்து பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

2 தீமோ. 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;

1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

1 தெச. 4:16 கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

இவ்வசனங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கையில், கிறிஸ்துவின் வருகையின்போது மறுரூபமாக்கப்படுவோர், மற்றும் உயிர்த்தெழுவோர் ஆகியோர் கிறிஸ்துவோடு எப்பொழுதும் இருந்து அவரோடு ஆளுகையும் செய்வார்கள் என அறிகிறோம். இவர்களுக்குத்தான் பிதாவின் வீட்டில் (பரலோகத்தில்) வாசஸ்தலம் ஆயத்தம் பண்ணப்போவதாக யோவான் 14:2-ல் இயேசு கூறுகிறார். இவர்கள் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பதால், இவர்கள் மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் கிடையாது.

இப்பிரிவினரைத் தவிர மீதமுள்ளோரில், ஏற்கனவே துன்மார்க்கரெனத் தீர்மானிக்கப்பட்டவர்கள், நேரடியாக மரணத்திற்குத் தீர்க்கப்படும்படி, இறுதி நியாயத்தீர்ப்பின்போது உயிர்த்தெழுவார்கள் (வெளி. 20:11-13; மத்தேயு 25:31-46).

மற்றவர்கள், ஆயிர வருஷ அரசாட்சியில் உயிர்ப்பிக்கப்பட்டு, முதல் பிரிவினரான பரிசுத்தவான்களால் ஆளப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படும். அவர்கள் 2-ம் மரணத்திற்கு தீர்க்கப்படுவதும், தீர்க்கப்படாததும் அவர்கள் நீதியைக் கற்றுக்கொள்வதன் அடிப்படையில் தீர்மானமாகும்.

ஏசாயா 26:9 ... உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். 10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

நீதியைக் கற்றதன் அடிப்படையில் 2-ம் மரணத்திற்கு தீர்க்கப்படாதவர்கள், நீதிமான்கள் எனத் தீர்க்கப்பட்டு, நித்தியஜீவனைப் பெற்று இப்பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

சங்கீதம் 37: 29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.

மற்றவர்கள் மரணமடைவார்கள்.

ஆயிர வருட அரசாட்சியின் பிரஜையாகாமல், நேரடியாக மரணத்திற்குத் தீர்க்கப்படுவோர் யாரெனக் கேட்கலாம். எனது அனுமானத்தின்படி, இரக்கமில்லாதவர்கள், பிறரது தப்பிதங்களை மன்னிக்காதவர்கள், பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் செய்தவர்கள் மற்றும் மரணத்திற்கேதுவான பாவம் செய்தவர்கள் ஆகியோர் நேரடியாக 2-ம் மரணத்திற்குத் தீர்க்கப்படுவார்கள் எனக் கருதுகிறேன். என் கருத்துக்கு ஆதாரமான வசனங்கள்:

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 12:32 எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

1 யோவான் 5:16  மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

சுருக்கமாகச் சொல்வதென்றால், கிறிஸ்துவினிமித்தம் பாடுபட்டு நிந்திக்கப்பட்டு, இவ்வுலகத்தில் உபத்திரவங்களைச் சகித்தவர்கள் பரலோகம் செல்வார்கள்;

மத்தேயு 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;

மற்றவர்கள் அவர்களின் நீதி நியாய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு, அவர்களில் நீதிமான்கள் நித்தியஜீவனைப் பெறுவார்கள், அநீதிமான்கள் மரணமடைவார்கள்.

நீதிமான்கள் எல்லோருமே இவ்வுலகிலேயே இயேசுவை விசுவாசித்து ஏற்றவர்கள் எனச் சொல்லமுடியாது. ஒரு பிரிவினர் இவ்வுலகிலேயே இயேசுவை ஏற்றிருக்கலாம், மற்றவர்கள் 1000 வருட அரசாட்சியில் ஏற்றிருக்கலாம். எப்போதாக இருந்தாலும், இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாமல் யாரும் நித்தியஜீவனைப் பெறமுடியாது.



-- Edited by anbu57 on Saturday 14th of January 2012 06:47:10 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


பரலோகம் வேறு, பரலோக ராஜ்யம் என்பது வேறு.

இப்பூமியில் இதுவரை எத்தனையோ ராஜ்யங்கள் நடந்து/அழிந்து போயுள்ளன. பிரிட்டீஷ் ராஜ்யம், ரோம ராஜ்யம், கிரேக்க ராஜ்யம், முகலாய ராஜ்யம் என பல ராஜ்யங்கள் நடந்துள்ளன.

பிரிட்டீஷ் ராஜ்யம் என்பது பிரிட்டீஷைக் குறிப்பதல்ல. பிரிட்டீஷாரின் ஆட்சி நடப்பதையே “பிரிட்டீஷ் ராஜ்யம்” என்பது குறிக்கிறது. இந்தியாவிலுங்கூட பிரிட்டீஷ் ராஜ்யம் நடந்ததை நாம் அறிவோம்.

பிரிட்டீஷார் ஆளுகிற ராஜ்யம் பிரிட்டீஷ் ராஜ்யம் எனப்படுவதைப் போலவே, பரலோக தேவன் ஆளுகிற ராஜ்யம், “பரலோக ராஜ்யம்” எனப்படும். இது எப்போது நடைபெறும்? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.

1 கொரி. 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். .... பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

இயேசுவின் 1000 வருட அரசாட்சியின் முடிவின்போதுதான் சகல அதிகாரமும் வல்லமையும் பரிகரிக்கப்படும் என்பதற்கு பின்வரும் வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

வெளி. 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8 பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். 9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

11 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. 12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். 13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். 14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இவைகளெல்லாம் நிகழ்ந்த பின்னர்தான் 1 கொரி. 15:24 கூறுகிறபடி “தேவனும் பிதாவுமாயிருக்கிறவரிடம் இயேசு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்”. அப்போது பரலோக ராஜ்யம் இப்பூமியில் உண்டாகும். நித்திய ஜீவனைப் பெற்ற அனைவரும் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பார்கள்; கிறிஸ்துவுடன் 1000 வருட அரசாட்சியில் பங்கு பெற்ற பரிசுத்தவான்கள் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் வாசம் செய்வார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

anbu57 wrote:
சுருக்கமாகச் சொல்வதென்றால், கிறிஸ்துவினிமித்தம் பாடுபட்டு நிந்திக்கப்பட்டு, இவ்வுலகத்தில் உபத்திரவங்களைச் சகித்தவர்கள் பரலோகம் செல்வார்கள்;

மற்றவர்கள் அவர்களின் நீதி நியாய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு, அவர்களில் நீதிமான்கள் நித்தியஜீவனைப் பெறுவார்கள், அநீதிமான்கள் மரணமடைவார்கள்.


"அதாவது  நித்திய ஜீவனை  பெற்றவர்களிலும் ஒரு குரூப் பரலோகம் போகும் ஒரு குரூப்  பூமியில்  வாழும்.  பரலோகத்தில்  இருக்கும் குருப் ஆழுகை  செய்யும் பூமியில் இருக்கும் குரூப் ஆழுகை செய்யப்படும்"    

நல்ல அருமையான  விளக்கங்கள் சகோ. அன்பு  அவர்களே. நானும் பல தளங்களில் தேடி பார்த்து விட்டேன் இவ்வளவு விளக்கமாக யாரும்  எழுதியது போல் எனக்கு தெரியவில்லை. 
 
மிக்க நன்றி சகோதரரே.  
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
நித்திய ஜீவனை சுதந்தரித்தல் Vs பரலோகம் சேருதல் வேறுபாடு என்ன?
Permalink  
 


சகோதரர்களே...          

 

Bro.நேசன்///சுருக்கமாகச் சொல்வதென்றால், கிறிஸ்துவினிமித்தம் பாடுபட்டு நிந்திக்கப்பட்டு, இவ்வுலகத்தில் உபத்திரவங்களைச் சகித்தவர்கள் பரலோகம் செல்வார்கள்;
மற்றவர்கள் அவர்களின் நீதி நியாய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு, அவர்களில் நீதிமான்கள் நித்தியஜீவனைப் பெறுவார்கள், அநீதிமான்கள் மரணமடைவார்கள்.////


////"அதாவது  நித்திய ஜீவனை  பெற்றவர்களிலும் ஒரு குரூப் பரலோகம் போகும் ஒரு குரூப்  பூமியில்  வாழும்.  பரலோகத்தில்  இருக்கும் குருப் ஆழுகை  செய்யும் பூமியில் இருக்கும் குரூப் ஆழுகை செய்யப்படும்" ///


நீங்கள் சொல்வது போல் இருக்குமானால் பூமி அழிக்கப்பட்டு....புதிய பூமி,புதிய வானம் உருவாக்கப்படும் பொது இவைகளில் தங்கும் படி காணப்படும் பேர் எழுதப்பட்டவர்கள் யார்??

பூமியில் உள்ள பரிசுத்தவான்களின் குழுவா..வானத்தில் உள்ள குழுவா!?

வசனத்தின் படி விளக்குங்கள்..


வெளி 21 அதிகாரம்1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.


27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

-------------------------------------------------------------------------------

யோவான்13:16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.



-- Edited by JOHN12 on Wednesday 18th of January 2012 11:58:12 AM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard