மாற்கு 11:13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
மாற்கு 11:20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.
மாற்கு 11:21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
மாற்கு 13:28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
லூக்கா 13:6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
லூக்கா 13:7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
இந்த அத்திமரம் எதற்கு உதாரணமாய் சொல்லபடுகிறது.கர்த்தர் என் மேல் கூறிய அத்திமரத்தை சபித்தார்..அது அடையாளமாய் சொல்ல பட்ட வரும் காலத்தின் நிகழ்வா??
தெரிந்த சகோதரர்கள் விளக்கவும்..
மாற்கு 13:28அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்;
என தேவனும் கூறி உள்ளாரே!!!
கற்றுகொள்ளும் பட்சத்தில் நாம் ஒரு தேவ சித்தத்தையே செய்கிறோம்..
தாங்கள் சுட்டிய தளம் அனேக புதிய புரிதல்களை தந்தது..நன்றி..
ஆனாலும் சில கேள்விகளுக்கு இன்னும் விடை காண இயலவில்லை
1 )இயேசு சபித்தவுடம் அத்திமரம் பட்டுபோகாமல்,அவர் திரும்ப வரும்போது பட்டுபோய் இருக்க காரணம் என்ன..
2 )இயேசு ஏன் அதே வழியில் திரும்ப வேண்டும்..
3 )யாரையும் சபிக்கவேண்டம் என கூறிய இயேசு ஒரு மரத்தை ஏன் சபித்தார்..
மாற்கு 11:13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
வேதத்தில்,அத்திமரம் கனிதராமல் இருந்தது என கூறபடாமல்.. இயேசுவானவர் கனிகளை தேடின பொது கனிகளை காணவில்லை என கூறப்பட்டுள்ளதே!!
வெளி 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல,
கர்த்தர் சொன்ன அத்திமரம் கனிகொடுதிருந்தாலும்,பெருங்காற்றினால் கனிகளை இழந்திருக்க வாய்ப்பு உண்டே!!
முதலாம் வருகையின் போது அவர் சபித்த அத்திமரத்திற்கு அடையாளமான சபை,இரண்டாம் வருகையின்போது பட்டு போய் இருக்கும் என்பதன் அடையாளம் தான் இந்த பட்டுப்போன அத்திமரம் என கருதுகிறேன்..
JOHN12 wrote:முதலாம் வருகையின் போது அவர் சபித்த அத்திமரத்திற்கு அடையாளமான சபை, இரண்டாம் வருகையின்போது பட்டுபோய் இருக்கும் என்பதன் அடையாளம் தான் இந்த பட்டுப்போன அத்திமரம் என கருதுகிறேன்..
சகோதரரே தங்கள் ஒப்பீட்டில் பல அறிய உண்மைகளும் மிக ஆழ்ந்த கருத்துக்களும் அடங்கியிருப்பதை அறியமுடிகிறது. ஆகினும் கீழ்கண்ட வசனத்தையும் கருத்தில் எடுத்து, தங்கள் உவமையை பற்றிய விளக்கத்தை தெளிவாக தந்தால் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
'உடனே' என்பதன் கால அளவை நிதானிப்பது சிரமாய் தோன்றுகிறது சகோதரரே.. பின் வரும் வசனங்களை பாருங்கள்...
You Wrote////மத்தேயு 21:19அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார்; உடனேஅத்திமரம் பட்டுப்போயிற்று./'//
மாற்கு 11 அதிகாரம்
13. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:
17. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18. அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.
19. சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.
20. மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.