எரேமியா 18:6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
-- Edited by JOHN12 on Monday 9th of January 2012 07:01:38 PM
தேவ சித்தத்தின் படியான குடும்பம் என்பது வேத வழக்கில் தனி குடும்பத்தையே குறிக்கிறது..பின் வரும் வசனம் இதையே கட்டுகிறது!!
மாற்கு 10:7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
இசைந்து வாழும் குடும்ப வாழ்வில் தகப்பனையையும்,தாயையும் விட்டு தனக்கான குடும்ப கட்டமைப்பை உருவாக்க புருஷனும்,ஸ்திரியும் தேவ கட்டளையை பெற்றார்கள்..
இதினிமித்தம் என்று எதினிமித்தம் வருகிறது என ஆராய்ந்தால் ..
நன்மை தீமை அறிகிற அறிவை பெற்ற நம் ஆதி பெற்றோர் முப்புரி நூல் போன்ற பலமான,தேவனை மையமாக கொண்ட குடும்ப அமைப்பை பாவத்தினால் இழந்து கர்த்தரான தகப்பனை பிரிந்ததினாலேயே!!
இதினால் கர்த்தரும் பின்வரும் தலைமுறையினர் பெற்றோர் இல்லாத குடும்ப அமைப்பை பெற கட்டளை தருகிறார்..(ஆசிர்வாதமா/சாபமா என தெரியவில்லை. ஆனால் தேவ கட்டளையை பின்பற்றுதல் ஆசிர்வாதத்தை பெற்று தரும் என நன்கு அறிவேன்!!)
வேதத்தின் பார்வையில்நமது குடும்பம் என்பது வேறு,தகப்பனின் குடும்பம் என்பது வேறு!!
ஆதியாகமம் 41:51 யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
யோசேப்பு தகப்பன் குடும்பத்தை தமது குடும்பத்தோடு இணைத்து கூறவில்லை..ஏன் என்றால் கர்த்தர் உருவாக்கிய குடும்பமாதிரி தனிகுடும்பமே!!
ஆதியாகமம் 30:30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
அதே போல் மாமனாரின் குடும்பமும்,மருமகனின் குடும்பமும் வேறு என்று மேல் உள்ள வசனத்தில் இருந்து அறியலாம்..
சகோ சுந்தர் ///நோவாவின் குடும்பம் காக்கபட்டபோது அவன் அவ்வாறுதான் இருந்தான். அதே முன்மாதிரியை நாம் பின்பற்றலாம்.
ஆதி 7: 7. ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்///
சகோதரரே!!
நோவாவின் குடும்பம் மற்றும் சந்ததியினர் ரட்சிக்கபட்டதர்க்கு அவர்கள் கூட்டு குடும்ப அமைப்பு காரணம் அல்ல!!
ஒரு நீதிமானை முன்னிட்டு தலைமுறையினருக்கும் இரங்கும் அன்பு பிதாவின் இரக்கம்.
லோத்துவின் காரியமும் இதற்க்கு உதாரணமல்லவா!!
இயேசுவின் தகப்பனான யோசேப்பின் குடும்பதை திருக்குடும்பம் என கத்தோலிக்கர்கள் வருணிக்கிரார்களே!! இது ஒரு தனி குடும்பமே!!
(மேலதிக கருத்துகள் இருந்தால் சகோதரர்கள் தெரிவிக்கவும்)
ஆதியாகமம் 41:51 யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
யோசேப்பு தகப்பன் குடும்பத்தை தமது குடும்பத்தோடு இணைத்து கூறவில்லை..
சகோதரர் அவர்களே யோசேப்பு திருமணம் செய்து பிள்ளைகள் பிறந்தபோதுதான்அவன் தன் தகப்பன் வீட்டைவிட்டு பிரிந்து வந்த வருத்தம் ஆறியதலேயே அவ்வாறு சொன்னான். அதன் மூலம் அவன் நீண்ட காலம் தன் தகப்பன்வீட்டை நினைத்து வருந்தி யிருக்கிறான் என்பதையே நாம் அறியமுடியும்.
ஆதியாகமம் 50:23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
கூட்டு குடும்பமாக இருந்தால் மட்டுமே இப்படி பேரப்பிள்ளைகள் தாத்தாவின் மடியில் வளர்வது சாத்தியம்.