இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பந்தைய சாலைக்கு வெளியே ஓடுகிறவர்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பந்தைய சாலைக்கு வெளியே ஓடுகிறவர்கள்!
Permalink  
 


நாங்கள் சுமார் ஐந்து வருடத்துக்கு முன்னர் ஒரு வீட்டில்  வாடகைக்கு  இருந்தபோது நாங்கள் இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு இந்து குடும்பம் இருந்தது. கணவன் மனைவி மற்றும் ஒரு மகன் என்று  இருந்த அந்த இந்து சகோதரி தன் கணவனுக்கு மிகுந்த கீழ்படிதல் உள்ளவராக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். கணவன் என்ன சொன்னாலும் கேட்டு அவரது விருப்பபடியே அவருக்கு ஏற்றார் போல் சகலத்தையும் செய்வார்கள். 
 
அதேபோல் இந்து குடும்பத்தை சார்ந்த என்னுடய நண்பன் ஒருவனின் மனைவியும் மிகுந்த கீழ்படிதல் உள்ளவர்கள். திருமணம்ஆகி சுமார் 15 ஆண்டுகள் ஆகியும் தன் கணவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட  பேசியோ அல்லது சற்று முறைத்தோகூட பார்த்தது கிடையாதாம். அவனுக்கு எது பிடிக்கும் எந்த பொருளை எங்கு எப்படி வைத்தால் என் நண்பன் விரும்புவான் என்பதைஎல்லாம் நிதாதித்து அவனுக்கு ஏற்றாற் போல்  சகலத்தையும் செய்யக்கூடியவர்.
 
இப்படியொரு கீழ்படிதலை பார்த்து மிகுந்த ஆச்சர்யம் அடைந்த நான், ஆண்டவரை அறியாத இவர்கள் எவ்வளவு கீழ்படிதல்  உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்டால்  எவ்வளவு மேன்மையாக இருக்கும் என்று நினைத்ததுண்டு   
 
ஆனால் இவர்களுக்கு நேர் எதிராக தன் கணவனுக்கு சற்றும் கீழ்படியாமல் நடந்து, எப்பொழுதும் சண்டை போட்டுகொண்டு, கணவன் என்ன பேசினாலும் எதிர்த்து பேசி, வீட்டில்உள்ள வேலைகளை  ஒழுங்காக செய்யாமல், குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காமல், அடிக்கடி  படுத்துக் கொண்டு அல்லது தாயின் வீட்டுக்கு ஓடிக்கொண்டு, ஏதாவது பொருட்களை வாங்கி தரும்படி கேட்டது பிடிவாதம்  பிடித்து கொண்டு, தன் கணவனுக்கு வேதனையை ஏற்ப்படுத்தும் பல கிறிஸ்த்தவ சகோதரிகளையும் நான்  பார்த்ததுண்டு. 
 
இப்படி பட்டவர்கள்  தங்கள் கணவனுக்கு எலும்புருக்கியாக இருந்து கொண்டு தானும் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறாமல் அவர்கள் கணவனையும்  முன்னேறாமல் தடுத்தல் செய்து போராடுவதை  பார்க்கமுடியும்.
 
இதுபோன்ற நிலைகளை அறிந்து நான் ஆண்டவரிடம்  பலமுறை  கண்ணீரோடு,  ஏன் ஆண்டவரே இப்படி? உம்மை அறிந்துகொண்ட ஸ்திரியைவிட உம்மை அறியாத பல ஸ்திரிகள் கீழ்படிதல் மற்றும் மென்மையான குணசாலிகளாக இருக்கிறார்களே! இப்படி ஏன் நடக்கிறது? என்று ஆதங்கத்தில் கேட்டதுண்டு!
 
ஆண்டவர் ஒருநாள் எனக்கு உணர்த்திய உண்மை என்னவெனில்!
 
பந்தைய சாலைக்கு வெளியில் ஓடும் ஒருவர் என்னதான் வேகமாக ஓடினாலும் அதில் பயனும் இல்லை. அவர்களை யாரும் கண்டுகொள்ள போவதும் இல்லை.  பந்தைய சாலைக்குள் வந்து பந்தயத்தில் கலந்து கொண்டால் மட்டுமே பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் வரை முறைகள் அமுலுக்கு வரும். அவர்கள் சோதிக்கபடுவார்கள் சரியான இலக்கில் சரியான நிலையில் செயல்படுகிறார்களா என்பது கண்காணிக்கப்படும்.
 
அதேபோல், கிறிஸ்த்தவதுக்கு வெளியே இருக்கும் ஒருவரை சாத்தான் கண்டுகொள்வதே இல்லை! அவர் எவ்வளவு நல்லவராக நடந்தாலும்
சரி, நடக்காமல் போனாலும் சரி அதைப்பற்றி சாத்தானுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு பந்தைய பொருளை அடையும் பந்தைய சாலைக்குள் ஒருவர் வந்தவுடன்  சாத்தானின் இரண்டுவிதமான தாகுதல்கள் அங்கு நடக்கிறது. 
 
1. கணவனின் வார்த்தைக்கு கீழ்பட்டு நடக்கும்படி வேதாகமம் திட்டமாக எச்சரிப்பதால் அதை எப்படியாவது மீறவைத்து வேத வார்த்தைக்கு கீழ்படியாமல் இருக்க தூண்டுகிறது.
 
2. ஏவாளை வைத்து ஆதாமை வீழ்த்திய்துபோல், திட மனதோடு ஓடிக்கொண்டிருக்கும் கணவனுக்கும் அடிக்கடி இடருதலை எற்ப்படுத்து அவரையும் எப்படியாவது கவிழ்த்துவிட போராடுகிறது. 
 
எனவேதான் பல கிறிஸ்த்தவ மகள்கள் போராட்டத்தின் உச்சியில் நின்று பாடுபடுகிறார்கள். எனவே மாற்றுமதத்தவர்களை விட  மேலானவர்கள் இல்லை என்று கூறவேண்டாம். சாத்தானுக்கு எதிராக தொடர்ந்து போராடிகொண்டிருக்கும் இவர்கள்தான் மேலானவர்கள் என்பதுபோல் உணர்த்தினார்.  
 
எனவே  ஆவிக்குரிய நிலையில் முன்னேறும் சகோதரர்கள் தங்கள் மனைவிகளால் வேதனை மற்றும் மனமடிவாகும் போது அவர்களை வெறுத்து ஒதுக்காமல், பெலவீனமான பாண்டமாகிய அவர்களுக்கு சத்துருவை எதிர்கொள்ள  தேவையான பெலத்தை கொடுக்கும்படி தேவனை நோக்கி மற்றாடி ஜெபித்தால் இந்த காரியத்தை நிச்சயம் மேற்கொள்ள முடியும் என்று நான்  கருதுகிறேன்!.  
  


-- Edited by SUNDAR on Tuesday 10th of January 2012 10:12:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மனுஷன் இந்த  உலகத்தில்  வாழும் காலம்வரை தேவன் யாரிடமும் பட்சபாதம் காட்டுவது இல்லை என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது.
 
ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
மத்தேயு 5:45  அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்கலாத்தியர் 2:6  தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
பிரசங்கி 9:2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; 
 
இந்த உலகத்தில் தேவன் எல்லோரையும் சமமாகவே  பாவித்தாலும் மனுஷன் மரித்த பிறகு அவனுடைய நிலை மாறுபடுகிறது. கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கென்று தனி மேன்மை உண்டு!  
 
மனம்திரும்பி கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்கள்  பரலோக ராஜ்ஜியம் என்னும் தனி ராஜ்யம் போகமுடியும்.   
 
மத்தேயு 3:2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். 
 
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
 
இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசமாய் இருப்பவனுக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கபட்டுள்ளது:
 
யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
 
கிறிஸ்த்துவை  ஏற்றுக்கொண்டு அவர் சபையினுள் இருப்பவர்கள் மரித்துடன் பாதாளம் என்னும் வேதனையுள்ள இடம் போகாமல் பரதீசு என்னும் இளைப்பாறும் இடத்துக்கு செல்வார்கள். ஏனெனில்  கிறிஸ்த்து வின் சபையை  பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்முடியாது  
 
மத்தேயு 16:18  இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
 
கிறிஸ்த்துவை  ஏற்றுக்கொண்டு ஜீவனுக்குபட்டு அவரது கிரியை கைகொள்ளும்  ஒருவராலேயே சாத்தானையும்  மரணத்தையும் ஜெயம்கொள்ள முடியும்
 
யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்
 
வெளி 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்
 
இயேசுவை ஏற்றுக்கொள்ளாத மற்ற எல்லோருமே என்னதான் சன்மார்க்கமாக வாழ்ந்தாலும் அவர்கள் பந்தைய  சாலையின் வெளியில் ஓடுகிரவர்களே.  
 
(நான் இங்கு எழுதும் எல்லா காரியமுமே உண்மையை  உணர்ந்து சரியாகவே எழுதுகிறேன். ஆனால் தங்களை அதிமேதாவிகள் என்று கருதும் கிறிஸ்த்தவ பரிசெயர்களுக்கு நான் கொடுக்கும் எந்த வசன ஆதாரமும் வசனமாகவே தெரியாது. நான் என்ன எழுதினாலும் அது கேலி கிண்டலாகே தெரியும் எனவே அவர்களுக்கு பதில் எழுதுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன்)     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard