இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..ஏன் என்றால் வசனம் பின்வருமாறு கூறுகிறது..
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
மேற்கொண்ட வசனத்தில் "ஏற்றுகொள்வீர்கள்" என நம் தேவன் கூறியுள்ளதால் உண்டான தாக்கம் என்னை அந்திகிறிஸ்துவின் காரியத்தை விவாதித்து அறிய ஏவிற்று..
விருப்பமுள்ள சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்தவைகளை பகிறுங்கள்.. தேவகிருபையின் துணையோடு அடையாளம் காண முயற்சிப்போம்....
-- Edited by JOHN12 on Saturday 21st of January 2012 11:32:00 AM
இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..
அன்பான சகோதரரே நிச்சயமாக நாம் அந்தி கிறிஸ்த்துவை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் அது பலருக்கு பயன்படும். இயேசுவை கிறிஸ்த்து அல்லது தேவனின் குமாரன் என்று ஏற்க்காதவர்கள்தான் "அந்தி கிறிஸ்த்து" என்று வேதாகமத்தில் சொல்லபட்டுள்ளது
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. யோ 2:22
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே I யோ 4:3
சகோ. ஜான்12 அவர்களே இந்த தொடுப்புகளில் சென்று பார்த்ததில் எனக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை தாங்கள் புரிந்துகொண்ட விஷயங்களை தமிழில் எழுதி பதிவிட்டால் தளத்துக்கு வரும் அன்பர்களுக்கு பனுள்ளதாக இருக்குமே.