இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
Permalink  
 


சகோ.நேசன் அவர்களே!

இயேசுவைக் குறித்தும் அவர் யாரென்பதைக் குறித்தும் வேதாகமம் பல வசனங்களில் தெளிவாகக் கூறியுள்ள போதிலும், இவ்விஷயத்தில் இன்னமும் விசுவாசிகளிடையே ஒரு ஒருமித்த கருத்து வராதிருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது. மாத்திரமல்ல, ஏதோ ஒரு சில வசனங்கள் சொல்வதை வைத்து, தாங்களாக ஒரு முடிவுக்கு வந்து, அதே முடிவை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும், அப்படி ஏற்காதவர்களை மேசியாவின் எதிரிகள் என்றும் சொல்கிற சில அதிமேதாவிகள் இருப்பதும் மிகமிக ஆச்சரியமாக உள்ளது.

உங்களுக்காக மட்டுமல்ல, இத்தளத்திற்கு வருகை புரிகிற அனைவருக்காகவும் இயேசுவைக் குறித்து வேதாகமம் சொல்லியுள்ள நேரடி வசனங்கள் சிலவற்றைத் தருகிறேன்.

லூக்கா 1:30 தேவதூதன் அவளை நோக்கி: ... 31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; .... என்றான்.

1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். ... என்றான்.

மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். ... என்றார்.

மத்தேயு 26:63 பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; ... என்றார்.

மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

மாற்கு 1:1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.

யோவான் 1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலர் 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; ..

9:19 ... சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, 20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

1 யோவான் 4:15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

5:5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

1 தீமோ. 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசித்து அறிக்கை செய்தால் போதுமென்றும், அப்படி அறிக்கை செய்பவன் அவரது நாமத்தினால் நித்தியஜீவனைப் பெறுவானென்றும் இவ்வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. இதற்கு மேலாக (ஜாண் எட்வர்ட், அற்புதராஜ், சில்சாம், ஜாண்12 போன்ற) எந்த மனிதனையும் திருப்திபடுத்துவதற்காக இயேசுவை தேவாதி தேவன் என்றோ அவரே ஒரே தேவன் என்றோ அவரே ஆராதனைக்குரியவர் என்றோ நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நேரடியான பல வசனங்களுக்கு முரண்பாடாக ஒருசில வசனங்கள் காணப்பட்டால், அந்த முரண்பாட்டிற்குக் காரணமென்ன என்பதை அறிந்து, தெளிவைப் பெறுவதுதான் உசிதமேயொழிய, ஏற்கனவே அறிந்த விஷயத்திற்கு முரண்பாடான ஒரு கருத்தைப் புரிந்துகொண்டு, அக்கருத்தை நிலைநாட்டுவதற்காக “திரித்துவம்” எனும் வினோதமான கோட்பாட்டை உருவாக்கி, அதை ஏற்காதவர்களை மட்டந்தட்டுவது உசிதமல்ல. ஆனால் இதுதான் இந்நாட்களில் நம் மத்தியில் வெகுவாக நடந்துகொண்டிருக்கிறது.

நான் உங்களை எவ்விதத்திலும் குறைசொல்லவில்லை சகோ.நேசன் அவர்களே!

1 தீமோ. 3:16-ன் அடிப்படையில் உங்கள் கேள்வி நியாயமானதே. உங்கள் கேள்விக்கான பதிலை அடுத்த பதிவில் தருகிறேன்.



-- Edited by anbu57 on Saturday 21st of January 2012 09:32:59 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களின் அனேக கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் எனக்கு பிடித்திருந்தாலும்  இயேசுவின் தேவத்துவம் பற்றிய கருத்திலும் ஆவியானவர் பற்றிய கருத்திலும் எனக்கும்  உடன்பாடு இல்லை.
 
இயேசுவின் தேவத்துவம்பற்றி ரகசியம் என்று சொல்லி பவுல்  சொல்லும் கீழ்கண்ட வசனங்களுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருவீர்கள் என்று அறிய ஆவலில் இருக்கிறேன்.
 
தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.I தீமோ  3:16 

இங்கு இறைவனே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று வேதம் சொல்கிறதே.
 
இன்னொண்ணு,  இயேசு கிறிஸ்த்துவின் இரத்தத்தை  தேவனின் சொந்த இரத்தம் என்று வேதம் சொல்ல காரணம் என்ன?   
  
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை அப் 20:28
 
இந்த வசனங்கள்  எல்லாம் இயேசுவும்  தேவனும்  வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக சொல்கிறதே. 
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

வேதாகமத்தின் மொழிபெயர்ப்புப்பிழையைக் குறித்து சொன்னாலே சிலருக்கு கடுங்கோபம் வந்துவிடுகிறது.

தவறான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவான தவறான பாரம்பரிய கொள்கையைத்தான் ஒத்துக்கொள்வேனேயொழிய, சரியான மொழிபெயர்ப்பின் அடைப்படையிலான சரியான கருத்தை ஒத்துக்கொள்ளமாட்டேன்” எனும் வறட்டுப்பிடிவாதம்தான் அநேகரிடம் காணப்படுகிறது.

இதனால்தான் மொழிபெயர்ப்பு சம்பந்தமான நவீன வசதிகள் நிறைந்த இக்காலத்தில்கூட, வேதாகமம் முழுவதையும் சரியாக மொழிபெயர்த்து அனைவரும் அதை ஏற்கும் நிலை நம்மிடையே உண்டாக முடியவில்லை.

இத்திரியில் சகோ.நேசன் காட்டின 1 தீமோ. 3:16-ன் கருத்துங்கூட, மொழிபெயர்ப்பு காரணமாகத்தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது.

1 Tim 3:16 Beyond all question, the mystery of godliness is great: He appeared in a body, was vindicated by the Spirit, was seen by angels, was preached among the nations, was believed on in the world, was taken up in glory. NIV

இதில் “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” எனும் வரிக்கு இணையான வரியுமில்லை, “தேவன்” எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தையும் இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, மூலபாஷையான கிரேக்கிலும் “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” எனும் வரிக்கு இணையான வரியுமில்லை, “தேவன்” எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தையும் இல்லை.

இவ்வசனத்தின் முதல் 3 வரிகளுக்கான கிரேக்க வார்த்தைகளை அப்படியே தருகிறேன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

kai (And), homologoumenos (without controversy), megas (great), esti (is), ho (the), ho (of), eusebeia (the gospel scheme or godliness or holiness), musterion (mystry),

hos (who or which or what or that), phaneroo (to render apparent), en (in), sarx (flesh),

dikioo (justified), en (in), pneuma (spirit)

அவர்/அது (who or which or what or that) எனப் பொருள்படும் “hos” எனும் வார்த்தையையும், தேவபக்தி எனப் பொருள்படும் “eusebeia” எனும் வார்த்தையையும் இணைத்து, “தேவன்” என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் வரியின் தமிழ் மொழிபெயர்ப்பில் தவறு எதுவுமில்லை. 

அடுத்த வரியில் “அவர் அல்லது அது” என மொழிபெயர்க்கப்படவேண்டிய வார்த்தையை “தேவன்” என மொழி பெயர்த்துள்ளனர். “தேவன்” என்றதும் பிதாவாகிய தேவனைத்தான் அவ்வார்த்தை குறிப்பதாக நாம் புரிந்துகொண்டதுதான் தவறுக்குக் காரணமானது. அவ்வரியை “அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்றோ, அல்லது “அது மாம்சத்தில் வெளிப்பட்டது” என்றோ மொழிபெயர்த்திருந்தால் இத்தவறு நேர்ந்திருக்காது.

ஆகிலும், இப்படித்தான் மொழிபெயர்க்க வேண்டும் என நான் கூறவில்லை. தவறாகப் புரிந்துகொள்ள ஏதுவில்லாதபடி, பொருத்தமாக மொழிபெயர்த்தால் போதுமானது.

பிதாவாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற கருத்தை இவ்வசனம் கூறவில்லை என்பதை சகோ.நேசனும் மற்ற சகோதரர்களும் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

அப்போஸ்தலர் 20:28 பற்றிய விளக்கத்தை அடுத்த பதிவில் தருகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

இவ்வசனத்தை வைத்து தேவனும் இயேசுவும் ஒருவரே எனும் முடிவுக்கு நீங்கள் வருவது ஆச்சரியம்தான் சகோ.நேசன் அவர்களே! உங்கள் கவனத்திற்காக ஒரு வசனம்:

1 கொரி. 12:27  நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

அப். 20:28-ஐ வைத்து தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே எனும் முடிவுக்கு வந்தால், 1 கொரி. 12:27ஐ வைத்து என்ன முடிவுக்கு வருவீர்கள்? கிறிஸ்துவும் நாம் அனைவரும் ஒருவரே என்ற முடிவுக்குத் தானே வரமுடியும்?

வேதாகமத்தின் பல வசனங்கள் சொல்லர்த்தப்படி கூறப்படவில்லை என்பது நாம் அறிந்ததே! அப். 20:28 மற்றும் 1 கொரி. 12:27 வசனங்களும் சொல்லர்த்தமாகக் கூறப்படவில்லை. இம்மாதிரி வசனங்களை சொல்லர்த்தப்படி நாம் புரிந்துகொண்டால், குழப்பமும் முரண்பாடும்தான் மிஞ்சும்.

நமது சொல் வழக்கில்கூட பல விஷயங்களை சொல்லர்த்தப்படி இல்லாமல் உருவக அடிப்படையில் நாம் பேசுவதுண்டு. உதாரணமாக, ஒருவர் தனது மகனைச் சுட்டிக்காட்டி: “இவன் உடம்பில் ஓடுவது என் இரத்தம்” எனச் சொல்வதுண்டு. இதனால் மகன் உடம்பில் ஓடுகிர இரத்தம் சொல்லர்த்தப்படியே தந்தையின் இரத்தம் ஆகிவிடுமா? நிச்சயம் ஆகாது.

பவுல் ஒரு வசனத்தில் இவ்வாறு சொல்கிறார்.

எபேசியர் 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். 29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.

தேவனுங்கூட, புருஷனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்கிறார். இப்படியெல்லாம் வசனம் சொல்வதால், புருஷனும் மனைவியும் ஒருவராகிவிட முடியுமா? புருஷன் மனைவிக்கு இடையேயான ஐக்கியத்தைக் காட்டும்வண்ணமாகத்தான் தேவனும் பவுலும் அவர்களை ஒரே மாம்சமாக சித்தரித்துக் காட்டுகின்றனர்.

அதேபோல்தான், தன் குமாரன் முழுக்க முழுக்க தனக்கு உடைமையானவன் என்பதைச் சொல்லும்வண்ணமாகத்தான், “தன் மகன் உடம்பில் ஓடுகிற இரத்தம் தனது இரத்தம்” என தந்தை சொல்கிறார்.

அதேவிதமாகத்தான், இயேசுவானவர் முழுக்க முழுக்க பிதாவின் உடைமையானவர் என்பதையும், இயேசு தமது இரத்தத்தை சிந்தி சபையைச் சம்பாதித்தது அவரது சுய சித்தத்தினால் அல்ல, பிதாவின் முழு சித்தத்தின்படியே என்பதையும் காட்டவே அப். 20:28-ல் பவுல் அவ்வாறு கூறுகிறார்.

வேதாகம அப்போஸ்தலர்கள் அனைவரும் இயேசுவின் தியாக பலியைப் பற்றி கூறும்போது, அதில் பிதாவின் பங்களிப்பையே மிகவும் முக்கியப்படுத்தி கூறினர். இயேசுவுங்கூட அப்படியே சொன்னார். இதற்கு ஆதாரமான பின்வரும் வசனங்களை சற்று படியுங்கள்.

யோவான் 3:16  தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

ஆனால் இன்றோ, பிதாவானவர் மறைக்கப்பட்டு, இயேசுவானவர் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார். உண்மையில், இயேசுவின் சித்தப்படியல்ல, பிதாவின் சித்தப்படியே இயேசு நம் பாவங்களுக்காகப் பலியானார்.

லூக்கா 22:41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

இவ்வசனத்திலிருந்து நாம் அறிவதென்ன? தேவனின் சித்தப்படித்தான் இயேசு நமக்காகப் பலியானாரேயொழிய, இயேசுவின் சுய சித்தப்படியல்ல. இயேசுவைப் பொறுத்தவரை அவர் பிதாவின் சித்தத்துக்கு தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தார்.

இயேசு தமது மரணபரியந்தம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவசித்தத்தை முழுமையாக நிறைவேற்றினார். எனவே இயேசு தமது இரத்தத்தினால் சம்பாதித்த சபை எனச் சொல்வதைவிட, தேவன் தமது சுய இரத்தத்தினால் சம்பாதித்த சபை எனச் சொல்வதுதான் அதிக பொருத்தமாயிருக்கும். இதைத்தான் பவுலும் கூறியுள்ளார். மற்றபடி, இயேசுவும் பிதாவும் ஒருவரே எனக் காட்டுவதற்காக பவுல் அப்படிச் சொல்லவில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.நேசன்:

//இந்த வசனங்கள்  எல்லாம் இயேசுவும்  தேவனும்  வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக சொல்கிறதே. //

இயேசு யார் எனும் கேள்விக்குப் பதிலாக வேதாகமம் தந்துள்ள ஏராளமான நேரடியான தெளிவான வசனங்களை சற்று படியுங்கள்.

இயேசுவும் தேவனும் வேறு வேறு அல்ல எனும் கூற்றுக்கு ஆதாரமாக நீங்கள் தந்துள்ள வசனங்களுக்கான எனது விளக்கங்களையும் படியுங்கள்.

இதன் பின்னரும் நீங்கள் //இயேசுவும்  தேவனும்  வேறு வேறு அல்ல// என்றுதான் சொல்லப் போகிறீர்களா சகோ.நேசன் அவர்களே?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//இயேசு தமது மரணபரியந்தம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவசித்தத்தை முழுமையாக நிறைவேற்றினார். எனவே இயேசு தமது இரத்தத்தினால் சம்பாதித்த சபை எனச் சொல்வதைவிட, தேவன் தமது சுய இரத்தத்தினால் சம்பாதித்த சபை எனச் சொல்வதுதான் அதிக பொருத்தமாயிருக்கும். இதைத்தான் பவுலும் கூறியுள்ளார். மற்றபடி, இயேசுவும் பிதாவும் ஒருவரே எனக் காட்டுவதற்காக பவுல் அப்படிச் சொல்லவில்லை.//

ஆமா இவர் காதுக்குள்ள வந்து பவுல் சொல்லிவிட்டு போனார்!

குழப்பத்தின் உச்சம்!! தேவன் என்ற வார்த்தை I தீமோ 3:16 ல் தேவன் என்ற வார்த்தை இல்லை என்பதற்கு பக்கம் பக்கமாய் எழுதுவார். இயேசு தேவன் என்று வருவதுபோல ஒரு வசனம் கொடுத்தால் சாத்தனும் தேவன்தான் என்று சொல்லுவார் (யாருக்கு என்றுதான் நமக்கு தெரியுமே!) அப்புறம் எதற்கு I தீமோ 3:16 குறித்து நீட்டி எழுதவேண்டும்? வேறு ஒரு சமயத்தில் சகரியா 12:10 காட்டி கிறிஸ்துவும் யெஹோவா என்று யாரோ எழுதியபோது, "யேகோவா குத்தப்பட்டாரா என்ன ஒரு தேவ துஷனம்!" என்று பொங்கி எழுந்தவர் இயேசுவின் ரத்தம் பிதாவின் ரத்தம் என்று பிதற்றும் நிலைமைக்கு வந்து இருக்கிறார்!!

சகரியா 12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

இயேசு கிறிஸ்து தேவனில்லை என்று தீர்ப்பு எழுதி விட்டு தான் இவர் வேதம் வாசிப்பார் ஆகையால் இயேசு கிறிஸ்துவே நான்தான் யேகோவா என்று சொன்னாலும் இவர் ஏற்று கொள்ளப்போவது இல்லை!!




-- Edited by John on Tuesday 24th of January 2012 12:50:40 AM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

சகரியா 12:10 க்கு இந்த பெரியவரிடம் நான் விளக்கம் கேட்டேனா? நல்ல காமடி செய்கிறார்!  biggrin கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் முழிக்கும் confuse போது நீ என்னை சாத்தான் furious என்று சொல்லிவிட்டாய் என்று கூப்பாடு போட்டு பதில் சொல்லுவதில் இருந்து தப்பித்து விடுவார் ஆனால் கேட்க்காத கேள்விக்கு தேவை இல்லாமல் வெட்டியாய் பதில் சொல்லுவார். கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை குறித்து ஓடிப்போகாமல் கடைசி வரை என்னோடு விவாதம் செய்ய இவர் தயாரா???

 
 

 



-- Edited by John on Tuesday 24th of January 2012 10:39:45 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

(மஞ்சள்)காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எனும் பழமொழிக்கு உதாரணமாகிப்போன ஜாண் எட்வர்ட்



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது எனும் வசனத்துக்கு உதாரணமாகிப் போன ஜாண் எட்வர்ட்



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard