இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிருஸ்துவை ஆராதிக்கலாமா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
இயேசு கிருஸ்துவை ஆராதிக்கலாமா?
Permalink  
 


இயேசு கிருஸ்துவை ஆராதிக்கலாமா?

இதை பார்க்கும் முன் முதலில் ஆராதனை என்றால் என்ன? என்று பார்க்க வேண்டும்.

ஆராதனை என்றால் அது சில சடங்குகள் சம்பந்தப்பட்ட விஷயம். இவை தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர்களால்  செய்யப்பட்ட ஒரு காரியம். இது யூதர்களுக்கு மட்டும் உரித்தானதாகும். அதன்படி இப்போது அவர்கள் கூட ஆராதனை செய்வதில்லை.

ஆக இப்போது ஆராதனை என்பதே இல்லை. கிருஸ்துவர்கள் இயேசு கிருஸ்துவை ஆராதிக்கலாமா? என்றால் யூதர்கள் ஆலயத்தில் செய்தது போல சில சடங்குகளை செய்யலாமா? என்றே அர்த்தம் வருகிறது.

இவ்வாறு இயேசு கிருஸ்துவை ஆராதிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்னில் கத்தோலிக்கர்களே. அவர்களே இயேசு கிருஸ்துவின் உருவத்திற்க்கு மெழுகுவர்த்தி ஏற்றுவது போன்ற சில சடங்குகளை செய்கின்றனர். இது சரியா? தவறா? என்பது வேறு விவாதமாகும்.  

புதிய ஏற்பாட்டில் கூறப்பட்ட ஆராதனை "புத்தியுள்ள ஆராதனை" என்பது மட்டுமே. மற்றபடி இயேசு கிருஸ்துவை தொழுவதை ஆராதனை என சிலர் தவறாக நினைத்து கொண்டு அதன்படி விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்களே இயேசு கிருஸ்துவை ஆராதனை செய்கிறார்களா? என்பறால் இல்லை என்பதே நாம் அறிவது.

இயேசு கிருஸ்துவின் மேல் பக்தி செலுத்துவதற்க்குரிய பல பாடல்களை இயற்றிய தேவ ஊழியர் பெர்க்மான்ஸ் அவர்கள் கூட,

பிதாவே ஆராதிக்கிறோம், இயேசுவே ஆர்ப்பரிக்கிறோம், ஆவியானவரே அன்பு செய்கிறோம். என வேத வசனங்களின் கருத்து மாறாமல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இயேசு கிருஸ்துவை தொழுது கொள்ளலாமா? என சரியாக விவாதிக்கும் போது, ஆராதனை பற்றின வசனங்களை மற்றவர்கள் சுட்டி காட்ட முடியாமல் போவதோடு, விவாதமும் சரியான திசையில் நோக்கி செல்ல வழி பிறக்கும்.

அதை விட்டு விட்டு, தவறான ஒரு கேள்வியை கேட்டு அதன் பேரில் ஒருவரை குற்றம் சாட்டுவது சரியான செயல் அல்ல. 



-- Edited by SANDOSH on Sunday 22nd of January 2012 12:47:58 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் சொல்வதுபோல் பழைய ஏற்ப்பட்டு முறைமையின்படி பார்த்தால், மத சம்பந்தமான சடங்குகளை செய்வதே இறைவனை ஆராதிப்பது என்றும் அவ்வாறு  ஆராதிப்பவர்கள் ஆசாரியர்கள் என்றும் சொல்லபட்டுள்ளது.
 
கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். உபா 10:8
 
அந்த ஆராதனை தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே உரியது என்றும் வேதம் சொல்கிறது.
 
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக் கொண்டே ஆணையிடுவாயாக.உபா 6:13 

 இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத் 4:10 
 
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.பிலி 3:3

ஆராதனை என்பது தேவனுக்குறியது மட்டுமே. இந்நிலையில் "தேவனாகிய கர்த்தரும்" "கர்த்தராகிய இயேசுவும்  ருவருக்குள் ஒருவர் என்பதை நிரூபிக்கும் வசனங்கள் மூலம்  மட்டுமே இயேசு ஆராதனைக்கு பாத்திரமானவர் என்பதை நிரூபிக்க முடியும் என்பது எனது கருத்து.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே! வாழ்த்துக்கள்!!

சுருக்கமாக, ஆராதனை குறித்த இன்றைய தவறான கண்ணோட்டத்தை எடுத்துரைத்துள்ளீர்கள். ஆகிலும் பெர்க்மான்ஸ் குறித்த தங்களது குறிப்பில் தவறு இருப்பதாகக் கருதுகிறேன்.

//இயேசு கிருஸ்துவின் மேல் பக்தி செலுத்துவதற்க்குரிய பல பாடல்களை இயற்றிய தேவ ஊழியர் பெர்க்மான்ஸ் அவர்கள் கூட,

பிதாவே ஆராதிக்கிறோம், இயேசுவே ஆர்ப்பரிக்கிறோம், ஆவியானவரே அன்பு செய்கிறோம். என வேத வசனங்களின் கருத்து மாறாமல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. //

இயேசுவுக்கு ஆராதனை என்ற கோட்பாட்டிற்கு மூல காரணரே இந்த பெர்க்மான்ஸ்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்தான் தனது பெரும்பாலான பாடல்களில் “இயேசுவுக்கு ஆராதனை” எனும் வரிகளை இணைத்தவர். உதாரணமாக பின்வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=P3vyWmJkpck

இதுபோல் நிறைய பாடல்கள் உண்டு. கத்தோலிக்க விசுவாசத்தில் மேரிக்கு ஆராதனை செய்த பழக்கமோ என்னவோ, மேரிக்குப் பதிலாக தற்போது இயேசுவுக்கு ஆராதனை என்கிறார். கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து வந்ததால்தான் அவரை அருட்தந்தை என பலரும் அழைக்கின்றனர்.

நானறிய சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் “இயேசுவுக்கு ஆராதனை” என்ற பேச்சு எங்குமே ஒலித்ததில்லை, குறிப்பாக CSI சபைகளில் நிச்சயம் ஒலித்ததில்லை. இந்த பெர்க்மான்ஸ் கத்தோலிக்கத்தை விட்டு வந்தபின்னர்தான் “இயேசுவுக்கு ஆராதனை” என்ற பேச்சு CSI சபை உட்பட எல்லா திரித்துவ சபைகளிலும் ஒலிக்கலாயிற்று.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard