வேதம் தேவனால் அருளப்பட்டது என்றும், அதில் உள்ள தீர்க்கதரிசன வசனங்கள் தேவ ஆவியால் உணர்த்தப்பட்டு, மனிதர்களால் எழுதப்பட்டது என வேதம் சொல்கிறது.
இதை வைத்து வேதம் முழுவதும் ஆவியானவரே எழுதனது போலவும், அதில் குறையேதும் இல்லை என்பதும் போலவும், அது திருத்தப்படவில்லை என்பது போலவும் சிலர் சொல்கின்றனர்.
ஆனால் வேதத்தில் தேவனுடைய வார்த்தைகள் தவிர, மனிதனுடைய வார்த்தைகளும், சாத்தானின் வார்த்தைகளும், வரலாறுகளும் கூட உள்ளன. அது மட்டுமல்லாது வேதம் மனிதர்களால் தொகுக்கப்பட்டது எனவும், அது எவ்வாறு, எப்போது தொகுக்கப்படது எனபது போன்ற விவரங்களும் இன்று ஒரு சிறு குழந்தை கூட அறியக்கூடிய வகையில் இன்டர்னெட்டில் காண கிடைக்கின்றன.
ஆரம்ப காலத்தில் பவுல் போன்றவர்கள் ஊழியம் செய்யும் போது பவுலின் நிருபங்கள் வேதத்தில் இல்லை. எழுதப் படிக்க தெரியாத அந்த காலத்தில் வாய் பேச்சின் வழியாகவும், அல்லது புதிய ஏற்பாடு என்னும் ஒரே புத்தகத்தின் வழியாகவும் கூட அனேகர் இரட்சிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.
ஆக நம்முடைய கையில் இப்போது இருக்கும் வேத புத்தகமானது, தேவனுடைய சித்தத்தின்படி, இப்போது இருக்கிறபடியே நமக்கு அருளப்பட்டு அதாவது கொடுக்கப்பட்டுள்ளது என்பதே நமது விசுவாசமாகும். இதிலும் சில மொழி பெயர்ப்பு தவறுகளும் உள்ளன. அதையும் இப்போது மூல வேதத்தை வைத்து சரியாக புரிந்து கொள்ளும்படிக்கு வசதிகள் வந்து விட்டன.
இவ்வாறு இருக்கும் போது, வேதம் என்னவோ தேவ ஆவியானவரால் நேரடியாக எழுதப்பட்டு, குறையில்லாமல் கொடுக்கப்பட்டது என்பது போல சொல்வதும், விவாத தளங்களில் இப்படி சொல்லி விட்டு இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரு, திருவென விழிப்பதும், லூக்கா ஆராய்ந்து எழுதினார் என்று சொல்வதும் எப்படி சரியாகும் என புரியவில்லை.
இதே கருத்தை சொல்லும் என்னுடையஒரு கட்டுரையை தழிழ் கிருத்துவ தளத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட போது அதை எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கி விட்டார்கள். இப்போது ஏறக்குறைய இதே கருத்தை ராஜ்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். இதை நீக்க மாட்டார்கள். ஏனெனில் இவர் அவர்களுக்கு பிடித்தமானவர். கிருஸ்துவ இஸ்லாம் விவாதங்களினால் என்ன பயன் என்றால் இது போன்ற உண்மைகளை கிருஸ்துவர்கள் ஏற்று கொள்ள வாய்ப்பாய் இருக்கிறது.
எதற்கு இவ்வாறு தவறான தகவல்களை சொல்லி சிலர் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் என புரியவில்லை. கத்தோலிகர்கள் பொதுவாக எந்த விவாத தளங்களிலும் அதிகமாக பங்கு பெறுவதில்லை. அவர்கள் தங்கள் கருத்து என்ன என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் வேதத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். இதோ அவர்களின் நேர்மையான கருத்து,
-- Edited by SANDOSH on Thursday 26th of January 2012 03:04:02 PM