இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கத்தோலிக்கரின் வேதாகமம்


இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
கத்தோலிக்கரின் வேதாகமம்
Permalink  
 


நண்பர்களே எமது வேதாகமத்திற்கும் கத்தோலிக்கரின் வேதாகமத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

உதாரணமாக

மொழிநடை..

எமது வேதாகமத்தில் கர்த்தர் என்று இருப்பது கத்தோலிக்கரின் வேதாகமத்தில் கடவுள் என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு மொழிபெயர்ப்பு மட்டுமன்றி சில புத்தகங்கள் கூட கூடுதலாக கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ளது.........

இவை ஏன்? என்பதே எனது கேள்வி....

இவை பலநுறு வருடங்களாக இருக்கின்றனவா????

தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்கிறேன்..

 



__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

johndanu wrote:

நண்பர்களே எமது வேதாகமத்திற்கும் கத்தோலிக்கரின் வேதாகமத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

சில புத்தகங்கள் கூட கூடுதலாக கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ளது.........

இவை ஏன்? என்பதே எனது கேள்வி....

தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்கிறேன்..


தங்களின் இந்த கேள்வி நியாயமானதே. நானும் கூட பலமுறை இந்த புத்தகங்கள் ஏன் காணாமல்போய்விட்டது என்று யோசித்தது உண்டு.  அதற்க்கு ஆண்டவர் எனக்கு தெரிவித்த உண்மை என்னவெனில். வழி தெரியாத  ஒருவருக்கு வழியை சொல்லும் நாம், பல இடங்களில்  சுற்றிக்கொண்டு வரும் வழியை சொல்லாமல் நேர்வழியைதான் காண்பிப்போம். அதுபோல் தேவனும்  "நித்தியஜீவனை"  அடைவதற்குண்டான நேர்வழியை தெரிவிக்கும் புத்தகங்களை மட்டும் சேர்த்துக் கொண்டு தேவையற்றவற்றை நீக்க அனுமதித்தார் என்பதே. 

ஒருவர்  சுற்றிசுற்றி அலைந்து நித்திய ஜீவனை அடைய விரும்பினால் எல்லா புத்தகத்தையும் தேடி கண்டுபிடித்து வாசிக்கலாம். நேர் வழியில் செல்ல விரும்பினால் இருக்கும் வேதாகமத்தை மட்டும் படித்தால் போதும் என்று கருதுகிறேன்.

ஆகினும் வேதாகமத்துடன் இருந்த சில புத்தகங்களை நீக்கிவிட்டு, இது மட்டும்தான் தேவ வார்த்தை மற்ற  இடங்களில் தேவன் போசவில்லை என்று சொல்லும் கருத்தை நான் ஏற்ப்பது இல்லை. 

 


-- Edited by SUNDAR on Monday 30th of January 2012 09:48:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

பழைய கேள்வியாயினும் சரியான பதிலை தருவதில் தவறிலையல்லவா?¨ ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாகத் திருச்சபை பழைய ஏற்பாட்டில் 46 நூல்களையும் வேதாகம நூல்களாகக் கருதி பயன்படுத்தியது. ஆனால் சீர்திருத்த இயக்கத்தின்போது மார்டின் லூத்தர் (1579) இதனை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கினார். முதலில் 2 மக்கபேயர் ஒரு விவிலிய நூல் அல்ல என்றார். பின்னர் தூய எரோணிமுசின் கருத்தைத் தனதாக்கிக்கொண்டு வேதாகமத் திருமுறையில் 39நூல்களே அடங்கும் என்று வாதாடினார். ஆனால் மற்ற ஏழு நூல்களையும் வாசித்துப் பயன்பெறலாம் என்றார். எனினும் அவை இறை ஏவுதல் பெற்ற வேதாகம நூல்கள் அல்ல என்று அறுதியிட்டுக் கூறினார்.

முதலில் சீர்திருத்தச் சபைகள் இந்த ஏழு நூல்களையும் பிற் சேர்க்கையாக விவிலியத்தில் வெளியிட்டன. ஆங்கில மொழியில் 1825 வரை இவற்றையும் இணைத்தே வேதாகமங்கள் வெளியிதப்பட்டன . கடந்த சில ஆண்டுகளாகத்தான் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் 39 நூல்களை மட்டும் பழைய ஏற்பாடாக வெளியிட்டு வருகின்றன. ஆனால் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பொது விவிலியங்கள் பல மொழிகளில் வரத் தொடங்கியுள்ளன. இவை 46 நூல்களையும் கொண்டுள்ளன. பொதுவாக 39 நூல்களை முதல் பகுதியாகவும் பிற 7 நூல்களை இரண்டாம் பகுதியாக

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard