இங்கு தேவன் போக அனுமதி கொடுத்துவிட்டு பின்பு அவன்மேல் ஏன் கோபாமானார்...
இந்த சம்பவத்தை புரிந்துகொள்ள, இதற்க்கு ஒப்புமையுள்ள என்னுடைய வாழ்வில் நடந்த சமபவம் ஒன்றை கூற விரும்புகிறேன்.
விநாயகர் சதுர்த்திக்கு எங்கள் அலுவலகத்தில் சாமி கும்பிட்டு பூஜை பொருட்களையும் தின்பண்டங்களையும் பகிர்ந்து எடுத்து சென்றார்கள். நான் பூஜையில் பங்கு பெறுவதும் இல்லை எந்த பொருளும் எடுத்து செல்வதும் இல்லை என்று சொல்லி திட்டமாக மறுத்துவிட்டதால், எனது டைரக்டர் "சுந்தர் பூஜை பொருட்களை எடுத்து செல்லமாட்டார் எனவே அவருக்கு அரை கிலோ நல்ல ஸ்வீட் வாங்கி கொடுத்து விடுங்கள் அவர் பிள்ளைகளுக்கு கொண்டுபோய் கொடுக்கட்டும்" என்று சொன்னார்கள்.
நானும் சந்தோஷத்தோடு சம்மதித்து ஸ்வீட்டை வாங்கி, பூஜைக்கு முன்னரே எடுத்து தனியே வைத்துவிட்டேன். இறுதியில் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் ஆண்டவர் என்னிடம் "இந்த ஸ்வீட்டை வீட்டுக்கு எடுத்துகொண்டு போகாதே" என்று பேசினார். காரணம் என்னவென்று வினவியபோது "உனக்கு எதற்க்காக இந்த ஸ்வீட்டை தருகிறார்கள் ஒரு இந்து சாமியின் சதுர்திக்குதானே? பொருளில் எந்த தவறும் இல்லை ஆனால அதை அவர்கள் கொடுக்கும் காரணம் தவறானது எனவே இதை எடுத்துபோகாதே" என்பதுபோல் பேசினார்.
அவரது வார்த்தைக்கு கீழ்படியும் எண்ணம் எனக்கு ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் அதை விட்டுபோக மனதேயில்லை. எனக்குள்ளேயே குழம்பினேன் "எல்லோரும் அவரவர் ஒரு பாக்கெட் பூஜை பண்டங்களை கொண்டு சொல்கிறார்கள், எனக்கு கொடுத்துள்ள இந்த இனிப்பு, பூஜை செய்ததும் இல்லை இப்படியிருக்க இதில் என்ன தவறு இருக்கிறது?" ஆண்டவர் ஏன் இப்படி சொல்கிறார், இது நிச்சயம் ஆண்டவர் சொல்லியிருக்க மாட்டார் என்று தீர்மாநித்துகொண்டு, மீண்டும் என் மனதில் "ஆண்டவரே இது டைரக்டர் அன்போடு கொடுத்தது அதைநான் எடுக்காமல் இங்கு விட்டு செல்வது அவர்களை அவமதிப்பது போலாகும் மேலும் இது பூஜை செய்ததும்கூட இல்லை எனவே இதை நான் எடுத்துபோகிறேன்" என்று பேசினேன்.
அப்பொழுது ஆண்டவர் "இதை எடுத்துபோ ஆனால் உன் வீட்டுக்கு கொண்டுபோகாதே" என்பதுபோல் பேசினார். சரி என்று எண்ணி ஸ்வீட்டை விடாமல் எடுத்துகொண்டு கிளம்பினேன். ஆனாலும் நான் வெளியே வந்ததும் எனது இரு சக்கர வாகனம் பழுதாகி போனது. அதை சரி செய்ய முயற்ச்சித்தேன் முடியவில்லை. பக்கத்தில் அதை சரிசெய்யும் கடை எதுவும் இல்லாமல் நீண்ட தூரம் அதை உருட்டிக் கொண்டே சென்றேன், அதிக மன கஷ்டத்துக் குள்ளனேன். ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு வண்டி சரி செய்யும் மனுஷனிடம் கொண்டு வண்டியை பார்க்க கொடுத்தால், ஒரு சிறய பழுதுக்கு அவர் பின்வீலை தனியே கழற்றி வைத்துவிட்டு, என்னிடம் கொஞ்சம் அட்வான்ஸ் பணம் வாங்கிகொண்டு எங்கோ போய்விட்டார். எனக்கு கிடைத்த அந்த ஸ்வீட்டை கையில் வைத்து கொண்டு நீண்ட நேரம் அங்கே நின்றிருந்த என்னிடம் ஆண்டவர் "இந்த ஸ்வீட்டை வண்டியை ரிப்பேர் பார்க்கும் மனுஷனிடம கொடுத்துவிடு" என்பது போல் பேசினார். அப்பொழுது தான் புரிந்தது எனக்கு அத்தனை துன்பத்துக்கும் காரணம் கையில் இருந்த ஸ்வீட்தான் என்பது.
உடனே அதை கொடுத்துவிட தீர்மானித்து அந்த மனுஷரிடம் கொடுத்துவிட்டேன். அவரும் வண்டியை சரிபார்த்துவிட்டேன் என்று சொல்லி தந்துவிட்டார். வாகனத்தை வாங்கிகொண்டு சிறிது தூரம் போனதும் மீண்டும் பழையமாதிரியே சத்தம் வண்டி ஓடாமல் பழுதடைந்து போனது. நான் மிகவும் நொந்து போனேன். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஒரு மின் விளக்கு வெளிச்சத்தில் வண்டியை நிறுத்தி அது ஏன் ஓடவில்லை என்று ஆராய்ந்தால், ஒரேஒரு சிறிய பிரச்சனைதான் அதை நானே உடனே சரிசெய்துவிட்டேன். அந்த சிறிய பளுதுக்கு அவன் ஏன் பின்வீலை கழற்றினான் என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை.
ஆக மொத்தம் இடையில் நடந்தது எல்லாமே ஒன்றுமேயில்லாத காரியம். ஒருவேளை அந்த ஸ்வீட்டை நான் தூக்கிவராமல் ஆண்டவரின் வார்த்தைப்படி. அலுவலகத்திலேயே யாருக்காவது கொடுத்து விட்டிருந்தால் எனக்கு எந்த துன்பமும் நேரிட்டிருக்காது. அனால் இப்பொழுதோ அனேக துன்பங்கள் மற்றும் பண இழப்பு எல்லாமே ஏற்ப்பட்டுபோனது.
தேவன் ஒரே ஒரு முறை சொன்னாலும், அவர் முன்னால் நடப்பது பின்னால் நடப்பது, நாலு வருடம் கழித்து நடப்பது நானூறு வருடம்கழித்து நடப்பது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் சொல்லுவார். அதை அப்படியே ஏற்க்க மறுத்து நமது சுய சிந்தனைகளை கலந்து காரியத்தை செய்தால், நமது விடாப்பிடி
ஆசையிநிமித்தம் சில நேரங்களில் தேவன் அதை அனுமதித்தாலும் அதன்மூலம் அவருக்கு கோபம் மூள்வது
நிச்சயம்.
ஏசாயா 55:8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீதிமொழிகள் 14:12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
-- Edited by SUNDAR on Saturday 3rd of March 2012 04:58:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பிலேயாம் ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசி. தேவனின் வார்த்தைகளை நேரடியாக கேட்கும் தகுதியை அவன் பெற்றிருந்தான். அவ்வளவு பெரிய மனுஷன் மீது ஆண்டவருக்கு ஏன் கோபம் மூண்டது என்பதை நாம் ஆராய்ந்து அறிவதன்மூலம் நாம் "ஆண்டவரை இவ்விதத்தில் கூட கோபபடுத்த முடியும்" என்ற உண்மையை அறிந்துகொள்ளலாம்.
வேதம் சொல்லும் சம்பவத்தின்படி பார்த்தால்:
இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க சொல்லி பிலேயாமை அழைக்க பாலாக் ஆட்களை அனுப்பியபோது அதைகுறித்து போதிய உண்மை அறியாத பிலேயாம், முதல்முறை தேவனிடம் சென்று அவர்களோடு போகலாமா என்று கேட்கிறான். அப்பொழுது
12"தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
இங்கு தேவனின் மன விருப்பமும் அதற்க்கான காரணமும் மிக தெளிவாக பிலேயாமுக்கு சொல்லப்பட்டு விட்டது.
"போகலாமா?" என்ற பிலேயாமின் கேள்விக்கு தேவனின் கட்டளை
"நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்;
அதற்க்கான காரணம்
அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இவ்வளவு தெளிவாக தேவன் சொன்ன பிறகு அங்கு மறு பேச்சுக்கே இடமில்லை. எனவே அதை ஏற்று பிலேயாமும் போகாமல் இருந்து விட்டாலும், அடுத்தநாள் பாலாக்கால் அனுப்பபட்ட பல கனவான்களை
பார்த்ததும் பிலேயாம் மனதில் மீண்டும் பாலாக்கிடம் போகவேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. அதக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில
நேரங்களில் சில மதிப்புக்குரியவர்களின் வார்த்தைகளை தட்ட முடியாமல் நாமும்கூட சில தவறான காரியங்களை செய்து விடுவதுண்டு. அத்தோடு பிலேயாமுக்கு பாலாக் தரப்போகும் மரியாதை மேலும், அவன் கொடுக்கும் கூலியின் மீதும் விருப்பம் இருந்திருக்க வேண்டும் எனவேதான் அவன் கூலிக்காக வஞ்சகம் செய்தான் என்று வேதம் சொல்கிறது.
யூதா 1:11இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி
பாலாக்கிடம் போனால் கிடைக்கபோகும் கூலி மற்றும் மரியாதயி நிமித்தம் பிலேயாமும் தடுமாறுகிறான். அப்பொழுது "தேவன் நேற்று போகவேண்டாம் என்று சொன்னார், ஒருவேளை இன்று இந்த கனவான்களை எல்லாம் பார்த்ததும் மனம் மாறியிருப்பார் எனவே இன்னொரு முறை அவரிடம் விசாரித்து பார்க்கலாம்" என்ற எண்ணம் அவனுக்குள் உண்டாகி இருக்கவேண்டும் எனவே இன்னொரு முறை தேவனிடம் கேட்டு பார்க்க தூண்டப்படுகிறான். போகவேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் அவனது இருதய ஆசைகளை அறிந்த தேவனும் அவனுக்கு போக அனுமதி கொடுத்ததோடு தான் சொல்வதை மட்டுமே சொல்லவேண்டும் என்று கட்டளையிடுகிறார். தேவனின் இந்த அனுமதியின் அடிப்படையில் பிலேயாம் புறப்படுகிறான். அப்பொழுது போக அனுமதி கொடுத்த அதே தேவனுக்கு அவன் மேல் கோபம் மூள்கிறது.
உலக நடப்பில் நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்:
என் மகன் ஒரு ஞாயிற்று கிழமை சபைக்கு போவதை தவிர்த்து விட்டு
ஏதாவது ஒரு நண்பன் வீட்டுக்குபோக ஆசைப்படுகிறான். முதலில் நான் திட்டமாக மறுக்கிறேன். அதற்குரிய காரணமாகிய சபைக்கு போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது தவறு, ஓய்வுநாள் தேவனுக்குரிய நாள் அதனால் போகவேண்டாம் என்று தடுக்கிறேன். அதை கேட்டு என் மகனும் அமைதியாக இருந்துவிடுகிறான்.
ஆனால் மறுநாள் அவனது நண்பனின் போன்வருகிறது. "நாம் படம் பார்க்கபோகலாம் அதை செய்யலாம் இதை செய்யலாம் உடனே புறப்பட்டு வா" என்று நண்பன் பேசுகிறான். அதை கெட்டது என்னுடய வார்த்தைகள் ஓரம் ஒதுக்கபட்டும் மீண்டும் எப்படியாவது தன் நண்பன் வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் உண்டாகிறது. உடனே மனதில் "நேற்று நம் தகப்பனார் ஏதோ தவறாக சொல்லி யிருக்கலாம அல்லது ஏதாவது கோபத்தில் இருந்திருக்கலாம் இன்று இன்னொருமுறை கேட்டு பார்க்கலாம்" என்று மீண்டும் வந்து அனுமதி கேட்கிறார்.
"அவன் போவது தவறு" என்பதை நேற்று அவ்வளவு தெளிவாக விளக்கி விட்டேன், அதை எல்லாம் மறந்துவிட்டு அவன் மீண்டும்வந்து அனுமதி கேட்கும்போது, அவனது இருதயத்தில் இருக்கும் ஆசை எனக்கு புரிகிறது. எனவே நான் அவனிடம் ஒரு சிறு வெறுப்போடு "உனக்கு போகத்தான் வேண்டும் என்றால் நீ போ, ஆனால் சினிமா தியேட்டர் போன்ற தவறான இடங்களுக்கு போகாதே" என்று சொல்லி விட்டு. அதற்க்கு மேல் அவன் ஆவியோடு போராட மனதில்லாமல், ஒரு ஒரத்தில் அமர்ந்து அவனது நடவடிக்கையை கவனிக்கிறேன். அவனும் நான் முதலில்எச்சரித்த எந்த காரியத்தையும் பற்றி சிந்திக்காமல், நம் தகப்பனாருக்கு நான் போவதில் உடன்பாடு இல்லை என்பதைபற்றியும் சற்றும் யோசிக்காமல் அவசரமாக புறப்பட்டு போகிறான். அப்பொழுது நாம் இவ்வளவு சொல்லியும் நமது பேச்சை கேட்காமல் புறபட்டு போகிறானே என்ற கோபம் எழுவது இயற்கையே.
இங்கு போக அனுமதித்தது நான்தான் என்றாலும் நாம் முழுமனதோடு அப்படி செய்யாமல் அவனுள் இருக்கும் ஆசையிநிமித்தமே அனுமதிக்கிறேன். ஆனால அவனோ என்னுடைய எச்சரிப்பு எதையும் பொருள்படுத்தாமல் தான் போவதிலேயே குறியாய் இருந்ததல எனக்கு கோபம் மூள்கிறது.
அதுபோல் சில சாதாரண மனுஷர்கள் செய்யும் பெரிய தப்பிதங்கள்கூட
தேவன்க்கு பெரிதாக தெரிவதில்லை! ஆனால் மோசே போல தேவனை அறிந்த மனுஷர்கள் செய்யும் சிறு சிறு தப்பிதங்களுக்கும் தேவனுக்கு கடும் கோபமூட்டிவிடும். பிலேயாமும், தேவனையும் அவர் சித்தங்களையும் முழுமையாக அறிந்தவன். தேவன் ஒருமுறை போக தடைசெய்யும் போதே அவன் அதை அப்படியே கேட்டு ஏற்றிருக்க வேண்டும். இன்னொருமுறை தேவனிடம் கேட்பதற்கு போயிருக்கவே கூடாது. ஆனால்அவனோ மீண்டும் தேவனிடம்சென்று விசாரிக்கிறான். அவன் இருதயம் பிலேயாமின் பொருளையும் கனத்தையும் நாடியே இருந்ததால் தேவன் அவன் ஆவியோடு போராட விரும்பாமல்
இரண்டாம்முறை அவனுக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கிடைத்ததும் தேவன் அவன் தேவன் என் தன்னை போகவேண்டாம் என்று சொல்லி முந்தைய நாள் போகவேண்டாம் தடுத்தார் அவரின் இருதய நோக்கம் என்ன போன்ற எந்த காரியத்தையும் அதற்க்கான காரணத்தையு சற்றும் பொருட்படுத்தாமல் அவன் போவதிலேயே குறியாக புறப்பட்டு போனதால் தேவனுக்கு கோபம் மூண்டது என்று கருதுகிறேன்.
மனுஷனுடைய இருதய வாஞ்சை மற்றும் பிடிவாத குனத்திநிமித்தம்
தேவன் சில காரியங்களை அவனுக்கு அனுமதிக்கிராறேயன்றி தேவன் அனுமதித்த எல்லாமே அவருக்கு விருப்பமானதுதான் என்று நாம் பொருள்கொண்டுவிட முடியாது!
உதாரணமாக ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று அலையும் அனேக கிறிஸ்த்தவர்களுக்கு தேவன் சில ஆசீர்வாதங்களை அள்ளி கொடுக்கலாம் ஆனால் அவைகள் எல்லாம் தேவனின் முழு இருதய விருப்பத்தோடு வழங்கபட்டது என்று சொல்லிவிட முடியாது.
அந்த ஆசீர்வாதமே ஓர்நாள் தேவனுக்கு கோபமூட்டும் நிலையை உண்டாக்கலாம்.
எனவே தேவ சித்தத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமும், சுய சித்தத்தை சாகடிப்பதில் பிரயாசமும் மிக மிக அவசியம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)