இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரியவர்களுக்கு பொழுதுபோக்கு தேவையா???


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஆவிக்குரியவர்களுக்கு பொழுதுபோக்கு தேவையா???
Permalink  
 


JOHN12 WROTE:

______________________________________________________________

நண்பர்களுடன் இயல்பாய் உரைடாடும் பொது,கேலி,கிண்டல் என்பவை சகஜமானவைகளை போல தான் நமக்கு தோன்றுகின்றன.. வேதம் இவ்வாறான விவாதங்களை அனுமதிகின்றதா? தெரிந்தவர்கள் விளக்கவும்...

____________________________________________________________

நண்பர் ஜான் அவர்களே ஒரு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நான் பரிசுத்த ஆவியானவரால் இந்த காரியத்தினால் கடிந்து கொள்ளப்பட்டேன்

 

இந்த தலைப்பை நீங்கள் எழுதியை குறித்து ஆச்சரிய படுகின்றேன் உங்களை ஆவியானவர் தான் இந்த தலைப்பை எழுத வைத்தார் என்று நான் விசுவாசிக்கின்றேன்

 

நீங்கள் கூறியபடி நான் என் அலுவலகத்தில் கேலி கிண்டல் செய்து சிரித்து கொண்டு இருந்தேன் வெளியே வந்தஉடன் ஆவியானவர் நீங்கள் விளையாட்டு என்ற பெயரில் பல பொய்களை சொல்லிக்கொண்டு ரசித்து சிரித்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியபடுத்தினார் உண்மையாக யோசித்து பார்த்தால் அப்படி தான் IRUNTHATHU

 

எனவே கேலி கிண்டலை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.......



-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 29th of February 2012 04:38:30 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

 

நண்பர் எட்வின் அவர்களே..

கர்த்தர் பெரியவர்..

கர்த்தர் அனேக காரியங்களை தம் பிள்ளைகளாகிய நமக்கு உணர்த்துகிரவராகவே இருக்கிறார்..பிரம்மிக்க ஒன்றும் இல்லை, ஆவியானவரால் ஒருங்கினைக்கபட்டவர்களாய் இருப்போமானால் கிறிஸ்துவின் சரீரத்தில் என்றும் நிலைத்திருப்போம்..

பதிவின் தலைப்பை நன்கு வேதத்தின் படி ஆராய்ந்து வாயை அதன் படி பழக்குவிக்காமல் போனால்,தேவ ஆலயமான நம் சரீரம் தீட்டுப்படும்..ஆகவே வேதத்தில் உள்ள பொழுது போக்குகளும் அதன் முடிவுகளையும் ஆராயலாம்.

சினிமா,டிராமா,திரை பாடல்கள்,கிசகிசுக்கள்,கிரிக்கெட்,பழைய பாவங்களை குறித்த எண்ணங்கள்,இரட்டை அர்த்த பேச்சுக்கள் போன்றவை நம்மை புற ஜாதிகளின் முன் சாட்சிகளாக வாழ விடாது..அவைகள் பாதாளத்திற்கு இட்டு செல்லும் வழிகளே!!!

சகோதரர்கள் தங்களின் ஆலோசனைகளையும், வேதவிளக்கங்களையும் தரவும்..

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Wednesday 29th of February 2012 06:32:29 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

பொழுதுபோக்கு என்று சொன்னால் ஒரு நாள் பொழுதை எப்படி போக்குவது என்று எடுத்து கொள்ளலாம்.

எந்த ஒரு வேலையும் இல்லாதபோது என்ன செய்யலாம் இன்று எப்படி இந்த நாளை போக்குவது என்று நினைத்து எதாகிலும் ஒருவிதத்தில் நேரங்களையும் கடத்துவதுதான் என்று நினைக்கிறன்.

இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் எதையாகிலும் செய்து இந்த நேரத்தை தள்ளலாம் என்று நினைக்கும்போதுதான் அனேக தேவை இல்லாத காரியங்கள் நம் வாழ்க்கையில் நடக்கிறது.

உதரணாமாக...

II சாமுவேல் 11:1

மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

தாவிது தன் படை போரிடும் போது அவர் போருக்கு போகாமல் அரண்மனையில் சும்மா வெறுமையாய் உலாவி கொண்டிருந்ததால் தான் பத்சேபாளை காண நேர்ந்தது.

ஒருவேளை அவர் எதாகிலும் ஒரு காரியத்தில் ஈடுபட்டு இருந்தால் அந்த தேவை இல்லாத நேரத்தை அரண்மனையில் சும்மா உலாவி கொண்டு இருப்பாதை தவிர்த்து இருக்கலாம் , இதினிமித்தம் அனேக துன்பமான காரியங்கள் தவிர்த்து இருக்கலாம்.

2"ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.

மேல் கண்ட சம்பவத்தில் நடந்த காரியங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே....

ஒருவேளை வேதம் வாசித்து இருக்கலாம்.... அல்லது ஜெபித்து கொண்டு இருக்கலாம்..... அல்லது அவர்தான் சங்கீதங்கள் பாடுவதில் பேர்பெற்றவராயிற்றே..... எதாகிலும் ஒன்றை செய்து இருந்தால் அவருக்கு பொழுது நல்லபடியாக போய் இருக்கும்...ஆனால் நடந்ததோ வேறு.......


நமக்கு வேதம் என்ன சொல்லுகிறது ....

எபேசியர் 5 : 16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

நாம் நாட்களையும் நேரங்களையும் எப்படி போக்க வேண்டும் என்று பார்த்து தேவையில்லாத காரியங்களை செய்யாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்கு கிடைக்கிற பொன்னான நேரமாக நினைத்து கர்த்தருக்கு ப்ரோயோஜனமானத்தை செய்வோம்....

ஏசாயா 48 : 17

இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

 



-- Edited by Stephen on Wednesday 29th of February 2012 09:23:17 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே,



     நம் வேதத்தின் அடிப்படையில்,பொழுதுபோக்கு கிறிஸ்துவர்களுக்கு அனுமதிக்கபட்டுள்ளதா?

நண்பர்களுடன் இயல்பாய் உரைடாடும் பொது,கேலி,கிண்டல் என்பவை சகஜமானவைகளை போல தான் நமக்கு தோன்றுகின்றன..

வேதம் இவ்வாறான விவாதங்களை அனுமதிகின்றதா?

தெரிந்தவர்கள் விளக்கவும்...



__________________


புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
RE: ஆவிக்குரியவர்களுக்கு பொழுதுபோக்கு தேவையா???
Permalink  
 


ideal mind is devils work shop

நாம் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடாதிருந்தால், சத்துரு நம்மை வஞ்சிக்க வாய்புகள் இருகிறது.... ஆகவே


சங்கீதம் 1:2= கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

__________________

 

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்மாற்கு:1:15

 



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
ஆவிக்குரியவர்களுக்கு பொழுதுபோக்கு தேவையா???
Permalink  
 


சகோதரர்களே,

இக்காலங்களில் பொழுது போக்கு தேவை இல்லை என கூறவே முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம்,.

பொழுது போக்கு நம்மை மீறி நம் மீது திணிக்கபட்டுகொண்டு தான் இருக்கிறது..இதை ஆராயும் பொது விபரீதம் புரியும்..

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நம்மில் அனேக ஆவிக்குரியவர்கள் சினிமாக்களை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் அறிவினை பெற்றிருப்பது இதனால் தான். ஒரு தொலைகாட்சியை பார்த்தால், தொடர்ந்து ஒரே படத்தினை குறித்த விளம்பரதினை போட்டு, போட்டு விளம்பரபடுத்தி மக்களிடம் திணித்தும் ,எதிர் பார்ப்பை ஏற்படுத்தியும் பணம் பார்த்து விடுகின்றனர்..

நம் கண் நேராய் பார்த்தாலும் சினிமா போஸ்டர்கள், கேட்க மனம் இருந்தாலும்,மனமில்லாவிட்டாலும் வீதிகளில்,வாகனங்களில்,பொது இடங்களில் ஒலிக்கும் திரை இசை பாடல்கள், தந்திரமாய் மாற்றி மாற்றி தோற்று பின் ஜெயித்து கூட்டத்தை குறைவில்லாமல் தன்னகத்தே பெற்றுள்ள ஓயாத கிரிக்கெட் விளையாட்டு..

ஓயாத சிரிப்பிற்கு காரன்ட்டி வழங்குவதாக கூறிக்கொண்டு வாலிபர்கள் மற்றும் பிள்ளைகளின் மனதில் புத்தியீனத்தை விதைக்கும் நகைச்சுவை சேனல்கள்..நடிகர்களை உலக தலைவர்களை போல் பிரமாண்டபடுத்தி காடும் வார பத்திரிக்கைகள், பெண்களை கவர எப்போதும் தங்க விலையின் காரியங்களையும்,நடிகர், நடிகைகளின் புது உறவுகளை முதல் பக்கத்தில் பதிக்கும் தரமற்ற தினபத்திரிகைகள்

எங்கு,எப்படி திரும்பினாலும் எப்படியாவது மக்கள் மனதில் விளம்பர குப்பைகளை கொட்டிவிடும் விளம்பர ஏஜென்சிகள்.

ஆகாத சம்பாசனைகளை பெருவாரியாக வழக்கும் சமூக இணையதளங்கள்,செல்போன் கம்பனிகள்,ரட்சிக்கபட்டவர்களுக்கு நண்பர்களாக உள்ள ரட்சிக்கபடாத உலகபிரகாரமான நண்பர்கள்,ராங் கால் தோழர்கள்,தீம் பார்க்குகள்,அரசு நடத்தும் பொழுதுபோக்கு கொட்டகைகள், மதுபான பார்கள்,ஆபாச தளங்கள்,மேல் தட்டில் அதிரும் பப்புகள் ,இப்படி எப்படியாவது நம் மீது பொழுது போக்கின் வலை விரிக்கப்பட்டு விடும்..

பகல் எல்லாம் கடினமாக உழைக்கும் சகோதரர்கள் கூட பொழுதுபோக்கு என கூறிகொண்டு மேற்கூறியவைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆகின்றார்கள்..

வேதம் கூறுகின்றது..எந்த ஒரு பட்சியின் முன்னிலும் வலையை விரிக்கிற காரியம் விருதா!!

நீதிமொழிகள் 1:17 எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

ஆனால் நம்மை போன்ற மனிதர்கள் தேடி சென்றே இம்மாதிரியான பொழுதுபோக்கு வலைகளில் விழுந்து விட வாய்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன..

நாம் ஆவிகுரியவர்களாய் இருந்தாலும் நம்மை சூழ்ந்தவர்களில் மிக அநேகர் அவ்வாறு இல்லை..ஆகவே நம்மை சுற்றி இருப்பவர்கள் ஒரு அரடையையோ,ஒரு நீண்ட நாள் நண்பர் ஒரு பொழுதுபோக்கை முன் வைக்கும்போது நாமும் விரும்பியோ,விரும்பாமலோ அங்கீகரிக்க வேண்டியதாகிறது..இவ்வாறாக அனேக இடரல்களுக்குள் ஆவிக்குரிய பிள்ளைகள் கடந்து போகவேண்டிய காரணத்தினால் தான் ஏசுவும் பின் வருமாறு தம்மை பின்பற்றும் சீடர்களுக்கு கூறுகிறார்..

மத்தேயு 10:16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.

இப்படியாய் ஒழுங்கற்று காணப்படும் உலகில்,எந்த வித போராட்டமும் இல்லாமல் நம்மை தேவனிடமாய் எடுத்துகொள்ள அவர் பிரியபடாமல்..பின்வருமாறு தான் நமக்காக பிதாவிடத்தில் வேண்டிகொள்கிறார்..

யோவான் 17:15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

ஆகவே வேதம் புகழும் அத்தேனே பட்டனதாரை போல நம்முடைய பொழுது போக்குகளை,ஓய்வு நேரங்களை, நற்கிரியை செய்பவர்களாக உலக கரைபடாமல் பயன்படுத்துவோம். அது தேவனுக்கு சித்தம்.

அப்போஸ்தலர் 17:21 அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Tuesday 20th of March 2012 11:30:49 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:
நாம் ஆவிகுரியவர்களாய் இருந்தாலும் நம்மை சூழ்ந்தவர்களில் மிக அநேகர் அவ்வாறு இல்லை..ஆகவே நம்மை சுற்றி இருப்பவர்கள் ஒரு அரடையையோ,ஒரு நீண்ட நாள் நண்பர் ஒரு பொழுதுபோக்கை முன் வைக்கும்போது நாமும் விரும்பியோ,விரும்பாமலோ அங்கீகரிக்க வேண்டியதாகிறது..இவ்வாறாக அனேக இடரல்களுக்குள் ஆவிக்குரிய பிள்ளைகள் கடந்து போகவேண்டிய காரணத்தினால் தான் ஏசுவும் பின் வருமாறு தம்மை பின்பற்றும் சீடர்களுக்கு கூறுகிறார்..

 


மிக அருமையான விளக்கங்கள் சகோ.  ஜான்  அவர்களே. பல உலக பிரகாரமானவர்களுக்கு ஆண்டவரை பற்றிய பேச்சுகூட பிடிப்பது  இல்லை அவர்கள் மனதும் எண்ணமும்  உலகத்தை நோக்கியே இருக்கிறது .  

எங்கு திரும்பினாலும் பாவம் நிறைந்துள்ள இந்த உலகத்தில் வாழும் நம்மால் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு பெரிய ஞானி போல வாழ்வது  முடியாத காரியம்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில  உலக அழுக்குகள் நம்மேல் திணிக்கப்படுகின்றன  என்பது ண்மை. அது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. 

இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், லூ- 17:1 
 
அதாவது சாலையில் வரும்பொழுது ஒரு சினிமா ஸ்டரை பார்ப்பது  தவிர்க்க முடியாத ஒன்றுதான் அது போல் பல நடைமுறை சிக்கல்கள் நமது வாழ்வில்  அன்றாடம்  நம்மை உலகத்துக்குள் தள்ள  முயற்சிப்பது சகஜம்.   
 
எனவே என்னுடைய எண்ணப்படி  பாவமான காரியங்கள் தவிர  எந்த ஒரு உலக காரியத்தாலும்  நாம் பிடிக்கபட்டு போய்விடாமல்  அதை நம்முடைய கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதே மேலானது  என்று எண்ணுகிறேன்.
 
ஒரு கிரிக்கெட்டாகட்டும், சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் எதுவாகட்டும் இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற நிலைக்கு நாம் சென்றுவிட கூடாது. தேவை என்றால் பார்க்கவும்  இடரலை  உண்டாக்கும் என்று தொன்ற்றுமாகில் விட்டுவிடும்  மனப்பக்குவமும் அவசியம்.
 
கர்த்தருக்கு பயந்து நடப்பவர்கள் இதை எல்லாம் சுலபமாக மேற்கொண்டு விடுவார்கள் என்றே நான் கருதுகிறேன்.
 
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் சங் 111:10
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.நீதி 14:27
     


-- Edited by Nesan on Tuesday 20th of March 2012 09:16:18 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard