இன்றைக்கு அனேக சபைகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடனே ஒரு பாரம்பரிய லிமிடெட் கம்பெனி போல தொடர்ந்து வளராமல், தங்களது பழைய நிலையிலேயே நிலைகொண்டுள்ளன...
இதற்கு முழு காரணம் மனிதர்களை பிடிக்கும் வலைகள் சரியாக பழுதுபார்க்கப்பட்டு அலசபடுவதில்லை,மனித கற்பனைகளுக்கு இடம் அளிக்கப்பட்டு தேவ வசனங்களுக்கு இடம் மறுக்கப்படும் தன்மை..
இதையே தான் நம் கர்த்தராகிய இயேசுவும் பின்வருமாறு கூறுகிறார்...
மத்தேயு 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
ஆகவே சுயத்தை ஆராய்ந்து ,பிடிக்கும் படி வலைகளை அலசுதல் அவசியமாகிறது..
ஒரு முறை சீமோன் இயேசுவை அறிகிறதற்கு முன், இரவு முழுதும் பிரயாசபட்டும் எந்த மீனும் அகப்படாமல் சகோதரர்களுடன் சோகமாய் வலையை பழுது பார்த்து அலசி கொண்டிருந்தான்.காரியம் தெளிவாய் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது
லூக்கா
5 அதிகாரம்1-10 வசனங்களை படியுங்கள்..
அறிவியலின் படி வெளிச்சம் மற்றும் வெப்பநிலை கடலின் மேற்பரப்பினில் இரவில் தான் குறைவாய் இருக்கும்.. அச்சமயங்களில் பெருமளவு மீன்கள் மேற்பரப்பிற்கு வரும். இதை அறிந்திருக்கிற மீனவர்கள் இரவில் படகை செலுத்தி மீன் பிடிப்பது வழக்கம்..
இம்மாதிரியான முறையை தான் நம் சீமோனும் பின்பற்றுகிறார்.அனால் பலன் இல்லை.. சோர்வுடன் தேவனின் பார்வையில் தன வலைகளில் ஏதேனும் கோளாறா என பழுதுபார்த்து அலசிகொண்டிருக்கிறார்.இதைபோல் மற்ற மீனவர்களும் அலசி கொண்டு தான் இருகின்றனர்.ஆனால் இயேசு தன படகில் தனக்கு இடம் தந்து படகை கடலில் சற்றே தள்ளி கீழ் படிந்த சீமொனுக்கும் அவன் படகில் இருந்தவர்க்கும் தான் அற்புதத்தை வழங்கினார்..
சோர்வுடன் காணப்பட்ட சீமோனை தேவன் மீண்டுமாய் ஆழ்கடலுக்கு சென்று வலையை வீசு என்றார்.அவன் தனக்கு இரவு நேரிட்ட அனுபவத்தை முன் வைத்தாலும்,இயேசுவின் போதகத்தை கண்டு அவர் மேல் நம்பிக்கை கொண்டு மீன் பிடிக்க சாதகம் குறைந்த நண்பகல் வேளையில் படகை ஆழ்கடல் நோக்கி செலுத்தினான்.. வலைகள் கிழியதக்கதாய் மீன்கள் அகபட்டவுடன் பேதுரு தன்னையும் அலசிப்பார்த்து பின்வருமாறு கூறுகிறார்.
லூக்கா 5:8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
ஏசுவோ அவனை நோக்கி தன்னை பின்சொல்ல கூறி மனிதர்களை பிடிக்கிறவனாக்கினார். இவைகளை பெற பேதுருவிற்கு தகுதி என காண்பது பின்வருபவைகளே.,
தேவனுக்கு தம்முடையவைகளில் இடம் தருதல்.
தம்முடைய காரியங்களை கபடு இல்லாமல் பகிர்தல்
வலைகளையும்,தன சுயத்தையும் அலசுதல்.
கட்டளையின் நுகத்தை சோர்விலும் சுமத்தல்.
இக்காரியத்தை அலசுகிற நாம்,மேற்கூறிய காரனங்களை நம் சபைகளிலும், வாழ்விலும்நடைமுறை படுத்தும் போது அதிகமான ஆசிர்வாதங்களையும்,ஆத்துமாக்களை ஆதாயமும் செய்துகொள்வோம்..
நீதிமொழிகள் 14:15 விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!!
இன்னும் தொடர்பான காரியங்களையும் ஆராய்வோம்..
தொடரும்....
-- Edited by JOHN12 on Wednesday 29th of February 2012 06:54:20 PM
மனிதர்களை பிடிக்கும்படி அழைப்பை பெற்றிருந்த சீமான் பேதுரு, கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்ததை அறியாமல் மீண்டும் தன்பழைய தொழிலாகிய மீன் படிக்கும் தொழிலுக்கு போனார்.
யோவான் ( 21 :3 )
சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
அப்போஸ்தலரான பேதுரு தாம் பெற்றிருந்த ஊழியத்தை மறந்து, தம்முடைய பழைய வாழ்க்கையின் காரியங்களுக்கு பின்வாங்க முற்படுகிறார்..
ஆனால் அவரை ஊழியத்திற்கு அழைத்த நம் தேவன் உண்மையுள்ளவர்.பின்வாங்கும் சமயத்தில் கர்த்தர் இடைபட்டார்.
யோவான் ( 21 :3 ) விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
யோவான் ( 21 :5 ) இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
பின்வாங்க முற்படுகிரவர்களை பிள்ளைகளே என அழைக்கும் நம் தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களில் ஒருவரையும் இழந்துவிடுபவர் அல்ல.
சிஷர்களின் நிலைமையை அவர்களுக்கு உணர்த்தி, தம்மை வெளிபடுத்த நம் இயேசுவானவர் செய்த அற்புதமானது ஏற்கனவே பேதுருவின் அழைப்பின் போது செய்யப்பட்ட அற்புதத்தை போன்றது ..பின் வரும் வசனங்களை பாருங்கள்..
யோவான் ( 21 :6)அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
இப்படி இரண்டாம் முறை அதே மாதிரியான அற்புதத்தை பேதுரு பார்த்திருந்தும்,அற்புதம் செய்தவர் இயேசு என்பதை யோவான் எனும் சீஷன் கூறி பேதுரு அறியும்படியாயிற்று.
ஆனால் கர்த்தரின் முன் தன்னை நிர்வாணி என்பதை உடனே அறிந்து தக்கதை செய்கிறார்.
யோவான் ( 21 :7) அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
இவ்வாறாக அங்கு கூடியிருந்த சிஷருக்கும்,பேதுருவிற்கும் தம்மை வெளிபடுத்தினார்.
பந்தியிருந்த பின்பு,இயேசு மூன்றுமுறை பேதுருவை நோக்கி என்னை நேசிகிறாயா என அதே வார்த்தைகளை கொண்டு கேட்டார்..
மூன்று முறை மறுதலித்து, வாழ்வானாலும்,சாவானாலும் உம்மை பின்பற்றுவேன் என கர்த்தரிடம் கூறிய கூற்றிற்கு மாறாக மனுஷருக்கு பயந்து,பின்வாங்கிய பேதுருவால் இரண்டு முறை சலனம் இல்லாமால் பின்வருமாறு பதில் கொடுக்க முடிந்தது..
யோவான் ( 21 :15,16) அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
மூன்றாம் முறை அதே கேள்வியை கர்த்தர் கேட்டபோது அவன் துக்கமடைந்ததாக வேதம் கூறுகிறது.இந்த துக்கம், தேவன் மூன்று முறை அவனை நோக்கி கேட்ட காரணத்தை காட்டியிருக்கும்.
தன உண்மையட்ட்ற தன்மையை உணர்ந்த அவன் ,உணர்வோடு அவன் கூறிய பதில் போதுமானதாக தேவ சந்நிதியில் கருதப்பட்டது.இயேசுவின் கேள்வி அத்துடன் முடிகிறது.மனிதர்களை பிடித்தவர் மேய்ப்பராக கர்த்தரால் உயர்த்தபடுகிறார்..
யோவான் ( 21 :17) மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களை பின்வாங்குபவர்களாக விடுகிறதில்லை.பின்மாற்றகாரர்களே பின்வாங்குகிறார்கள்.
ஊழியத்தில் பின்வாங்கும் படிக்கு அனேக சோதனை வரலாம்,பழைய வாழ்க்கை சிறப்பானது என நமக்கும் தோன்றலாம்.திராணிக்கு அதிகமான சோதனைகளை அனுமதிக்காத தேவன் உண்மையுள்ளவர்.பின்வான்காதபடிக்கு தம்முடையவர்களை காப்பார்.
தேவனே !!! வரபோகும் மோசமான காலங்களில் தேவனுக்காக நிற்பவர்களின் கூட்டமாய் நாங்கள் சோதனையிலும் உம்மை மகிமைபடுத்த கிருபை தாரும்..