இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவர்களை கிறிஸ்த்துவுக்குள் நடத்துவது எப்படி?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இவர்களை கிறிஸ்த்துவுக்குள் நடத்துவது எப்படி?
Permalink  
 


எங்கள் பில்டிங்கில் இருக்கும் சில மனுஷர்களுக்கு எத்தனை முறைதான் ஆண்டவரை பற்றி எடுத்து  சொன்னாலும் அக்கறையோடு கேட்கும் அவர்கள் அவ்வார்த்தைகளை  ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விட்டுவிட்டு, அப்படியே தங்கள் பழை வாழ்க்கையே  வாழ்கின்றனர். ஆனால் பிரச்சனை துன்பம் என்று வரும்போது மட்டும் நம்மை நாடிவந்து "எனக்காக  ஜெபித்துகொள்ளுங்கள்" ன்று சொல்லும் அவர்கள்  அந்நேரம் நம்மோடு சபைக்குகூட வந்துவிடுகிறார்கள்  ஆனால் மற்றநேரங்களில் நம்மை கண்டுகொள்வதே
இல்லை. 
 
பிறருக்கு ஆண்டவரை பற்றி எடுத்து சொல்லி  அவர்கள் வீடுகளில் சென்று ஜெபிக்கும்  நமக்கும் அவர்களுக்கு வருவது போன்ற பல பிரச்சனைகள் வருவதால் சிலநேரங்களில் அவர்களுக்கு முன்னால்
நாம் தாழ்ந்து போககூடிய  நிலை கூட நமக்கு ஏற்ப்படுகிறது. அத்தோடு உலக நன்மைக்காக மாத்திரமே  இறைவனை தேடும் அவர்களும் எல்லோருக்கும் எல்லாமே வரத்தான் செய்கிறது பிறகு என்ன இருக்கிறது என்பதுபோன்ற ஒரு மன சோர்வுக்கு ஆளாகின்றனர்.
 
பிரசங்கி 9:3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்;    
 
பிரசங்கி 9:2எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
 
பிரசங்கி 9:3   
ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங் கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
.
இப்படி மறுமைக்குரியவைகளை சிறிதேனும் யோசிக்காமல் உலக காரியங்களை மட்டுமே  நோக்கமாக கொண்டு வாழும்  ஜனங்களை  கிறிஸ்த்துவுக்குள் நடத்தும்  யுக்தி  ஏதாவது  இருந்தால் சகோதரர்கள்  தெரிவிக்கலாம்.  
 


__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
RE: இவர்களை கிறிஸ்த்துவுக்குள் நடத்துவது எப்படி?
Permalink  
 


ஜெபம் எல்லாவற்றையும் செய்யும் ஏனெனில் ஜெபிக்கும் போது நாங்கள் கிரிகை செய்வதில்லை அது தேவனால் செய்யப்படும்.
தேவனால் கூடாத காரியம் ஏதேனும் உண்டோ???

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இவர்களை கிறிஸ்த்துவுக்குள் நடத்துவது எப்படி?
Permalink  
 


vanakam wrote:

ஜெபம் எல்லாவற்றையும் செய்யும் ஏனெனில் ஜெபிக்கும் போது நாங்கள் கிரிகை செய்வதில்லை அது தேவனால் செய்யப்படும்.
தேவனால் கூடாத காரியம் ஏதேனும் உண்டோ???


நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர் அவர்  சர்வ வல்லவர். அவரால்  கூடாதது எதுவும் இல்லை.  உண்மை  இவ்வாறு இருக்கையில், நாம் சிறிய காரியங்களுக்கும் பெரிய காரியங்களுக்கும், பக்கத்து  வீட்டு காரருக்கும். தமிழ் நாட்டுக்காகவும் இந்தியாவுகாகவும்  நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தனித்தனியே ஜெபம் எறேடுப்பதொடு  மட்டும் விடாமல், முக்கியமாக தேவனின் சித்தம்  இந்த பூமியில்  நிறைவேறட்டும் என்று எல்லோரும் ஏகமாக சேர்ந்து ஜெபிப்பது மிக மிக அவசியம்  

தேவனின் சித்தம் இந்த பூமியில் நிறைவேறினால்  போதுமே 
அது எல்லோருக்குமே சமாதானமான ஒரு முடிவாகவே இருக்குமே!
 
எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
 
எனவே நாம் எல்லோருமே ஏகமாக சேர்ந்து தேவனின் சித்தம் இந்த பூமியில் நிறைவேற ஜெபிபபோமாக!   
 
மத்தேயு 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக;  உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.


-- Edited by SUNDAR on Friday 16th of March 2012 08:52:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.நேசன் அவர்களே,

நீங்கள் கூறியது போன்ற ஆட்களை தேவனிடம் நடத்தும் காரியம் எளிதானதல்ல தான்.ஏனெனில் இவர்கள் விதை நிலத்தில் விதைக்க படாத விதையை போன்றவர்கள்.ஆனாலும் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை.இரட்சிப்பு தேவனுடையது என எழுதப்பட்டுள்ளதே!!

நான் அறிந்த படி, நீங்கள் குறிப்பிடும் சாராரை பின்வருமாறு பகுக்கலாம்.

  1. அப்பம் திண்பதற்காக(தேவைகளுக்காக) மாத்திரம் இயேசுவை நாடிவரும் வேசிகளின் மனநிலை உள்ளவர்கள்.
  2. அற்புதங்களை தேவனிடம் பெற்று அனுபவித்திருந்தாலும் பின்மாற்றம் அடையும் தேவ அன்பை உணராதிருக்கும் ஜனங்கள்.
  3. நம் தேவனை அறிந்திருந்தும், பாரம்பரியப்படி முரட்டாட்டமாக விக்கிரக ஆராதானையை விரும்பும் ஜனங்கள்.

இத்தகைய ஆத்துமாக்களை ஆதாய படுத்திக்கொள்ள நான் கூறக்கூடிய சில யுக்திகள்,

  1. இவர்களை தேவன் அண்டையில் நடத்த நம் வாழ்வு அதிகமான தேவ ஐக்கியம் உள்ள வாழ்வாக இருத்தல் வேண்டும்.
  2. இவர்கள் மேல் தேவ பொறுமையை நாடி நாம் முதலாவது ஜெபிக்க வேண்டும்.
  3. அனுதினமும் தேவ வரங்களை நாடி ஜெபிக்க வேண்டும்.அற்புத வரங்கள் இத்தகையபேதைகள் முன்பும் நம் தேவனை மகிமைப்படுத்தும்.ஞானத்தை போதிக்கும் வசனமும்,அறிவை உணர்த்தும் வசனமும்,தீர்க்கதரிசனவரங்களும் எப்போதும் இப்படியானாவர்களை கண்டிக்க, தேவனண்டையில் வழிநடத்த உதவும்.

தேவனுக்கு எப்போதும் மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Tuesday 20th of March 2012 05:54:38 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard