இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோகா ,தியானம்
sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
யோகா ,தியானம்
Permalink  
 


கிறிஸ்தவர்கள்   யோகா ,தியானம் செய்யலாமா ?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

DEAR BROTHER,

தியானம் செய்யுங்கள், என் என்றால் அதை பற்றி வேதத்தில் உள்ளது.. 

சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

 

சங்கீதம் 5:1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.

சங்கீதம் 19:14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.

 

சங்கீதம் 39:3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

 

சங்கீதம் 49:3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

 

சங்கீதம் 55:17 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

 

சங்கீதம் 63:6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

 

சங்கீதம் 77:12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

 

ஏசாயா 38:18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

 

யோகா தேவையட்றது.. அதனை போதிக்கும் இந்துக்கள் மத சார்பட்ட்றது என கூறி முடிவில் 'ஓம்காரத்தில்' நிறுத்தவர்.. 

 

வித்தை, தலை சக்கரத்திற்கு  ஏற்றி மோட்சம் செல்லும் வழிகளை வேதம் போதிகிறதில்லை.

உடலை மிருகங்களை போல மாறி மாறி வளைத்து உடல் நலத்தை தேட தேவன் நம்மை கைவிடுகிரதுமில்லை..

ஆகவே நாம் புரஜாதியின் இத்தகைய கிரியைகளை கற்றுகொல்லாமல் இருப்போமாக..

 

fittnessகு உடற்பயிற்சி செய்யுங்கள் போதும்.யோகா பலனளித்தாலும், பரம வைத்தியரின் பிள்ளைகளான

நம்மை போன்றோருக்கு தேவையற்றது..

--------------------------------------------------------------------------------------------------

சங்கீதம் 105:2 அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.



__________________
sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

மிக்க நன்றி JOHN12 சகோதரே,
மிக அருமையாக வேத வசனங்களுடன் விளக்கம் தந்துள்ளிர்கள்.

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சிறந்த வசன ஆதாரங்களுடன் மேலான விளக்கத்தை சகோதரர் தந்துள்ளார். அதற்க்கு மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை இருந்தாலும் என்னுடைய நிலை என்ன வென்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தியானமாக இருந்தாலும் சரி அது யோகாவாக இருந்தாலும் சரி  நமது இறைவனை  மைய்யமாக கொண்டு செய்யும் எந்த ஒரு செய்கையிலும் தவறு எதுவும் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஆனாலும் அந்நேரம் நமது சிந்தனையில்கூட அந்நிய  தேவனை கொண்டுவந்துவிட கூடாது.    
-
உதாரணமாக மனதை ஒருநிலைப்படுத்தும் "குண்டலி யோகத்தை" எடுத்துகொண்டால், நமது மனதை ஒரு நிலைப்படுத்த நாம் திரும்ப திரும்ப சொல்லும் மந்திரம் "தேவனுக்கு ஸ்தோத்திரம் அவர் நாமம் மகிமைப் படுவதாக" என்பதாக இருந்தால் நமது தியானமும் ஒரு ஜெபமாகவே எடுத்துகோள்ளபடும் என்பதே என்னுடைய தீர்மானம்.   .


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நல்லது சகோதரரே,..

          ஆனால் வஸ்திரத்தில் நெருப்பை வைத்துகொண்டு வஸ்திரம் வேகாது என சொல்லலாகாது என வேதம் கூறுகிறபடி பார்த்தால்..

நீதிமொழிகள் 6:27 தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

          வேதம் எதிர்க்கிற/சந்தேகத்திற்கு இடமான/கிறிஸ்துவ அஸ்திபாரத்தை ஆதாரமாக கொள்ளாத/அறியாத/விலகி இருக்க வேண்டிய கிரியைகளில் சோதனை செய்யாமால் விலகி இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன்...என்னை பொறுத்த வரையில் நான் யோகாவை இடறலில்லாமல் முழுமையாக எதிர்கிறேன் .

உதாரணமாக எந்த ஒரு ஆசனத்திற்கு முன்பாக சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனை தரும் என்பார்கள்..சூரியனை நாம் நமஸ்கரிக்க முடியுமா என்ன..இதுபோல விக்கிரக ஆராதனைக்கு இழுக்கும் காரணிகள் யோகாவில் பல.

----------------------------------------------------

I தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.



-- Edited by JOHN12 on Friday 13th of April 2012 06:19:32 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

           வேதம் எதிர்க்கிற/சந்தேகத்திற்கு இடமான/கிறிஸ்துவ அஸ்திபாரத்தை ஆதாரமாக கொள்ளாத/அறியாத/விலகி இருக்க வேண்டிய கிரியைகளில் சோதனை செய்யாமால் விலகி இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன்...என்னை பொறுத்த வரையில் நான் யோகாவை இடறலில்லாமல் முழுமையாக எதிர்கிறேன் .

----------------------------------------------------

I தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


சகோதரர்   அவர்களே! தியானம் பண்ணுவது மற்றும் யோகாசனம் செய்வது எல்லாம் தேவன் வெறுக்கும்  பாவ  காரியங்கள்  என்று  வேதம்  சொல்லவில்லை.  வேதம்  பாவம்  என்று  எதை  சொல்கிறதோ  அதை மாத்திரம்  நாம்  செய்யாமல்  தவிர்த்தால்  போதும்  என்று  நான்  கருதுகிறேன். ஆனால் இன்றோ, வேதம் சொல்லும் கேட்பவனுக்கு கொடு, திருப்பி கொடுப்பார்கள் என்று எண்ணி கடன் கொடாதே, உள்ளதை உள்ளது என்று சொல்லு, பொய் சொல்லாதே, பூமியில் பொக்கிசத்தை சேர்த்து வைக்காதே போன்ற  நேரடி தேவ வார்த்தை மீறுதலை செய்து கொண்டு, வேதம் தவறு என்று சொல்லாத மனதை ஒருநிலைப்படுத்தி உடம்பை சீரான நிலையில் வைத்திருக்க செய்யும் காரியங்கள் தவறு என்று தீர்ப்பது எவ்விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.   

ஈசாக்கு தியானம் பண்ணினான் என்று வேதம் சொல்கிறது. 

ஆதியாகமம் 24:63 ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து,

அவன் எவ்விதமான தியானம் செய்தான் என்பது நமக்கு தெரியாது ஆகினும் தியானம் பண்ணுவதற்கு தடை எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதை புரஜாதியார்களின் முறைமைப்படி அவர்கள் வழிகளிலும் அவர்கள் சொல்லிகொடுக்கும் இடங்களிலும் சென்று பயில்வதுதான்  தவறானது. அனால் நமது மனதை தேவனை நோக்கி ஒருநிலைப்படுத்த தேவனை துதிக்கும் துதியோடு செய்யும் எந்த தியானமும் தவறானது அல்ல என்றே நான் கருதுகிறேன். 

சங்கீதம் 55:17 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
 
தங்களுக்கு தியானமும் யோகாவும் தீமையானதுபோல் தோன்றினாள் நீங்கள் அதை தவிர்க்கலாம்  ஆனால் அதில் அதில் தீமை இருக்கிறது என்று எண்ணாமல் நமது கர்த்தரை முன்னிலைப்படுத்தி பண்ணும் எந்த தியானமும் தவறானது அல்ல.  



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

 உண்மையில் பலவிடங்கள் அறிந்து கொண்டேன் .பதில் அளித்த அனைவரையும் தேவன் ஆசீர்வதிபராக இது சம்பந்தமாக கூறபடும் இன்னொரு கருத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்து  12 வயதில் இருந்து 30  வயது வரை இந்தியாவில்  யோகா தியானம் கற்றதாக ஒரு சிலர் கூறிவருகின்றனர்அண்மையில் ஒருவர் என்னிடம் வினவினர் .எனக்கு பதில் தெரியவில்லை தெரிந்தவர்கள் பதில் தரவும் .



__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

no bcze jesus with their parents during dat time..

And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.
luke 2:51

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே.,

 

உங்களில் யார் விக்கிரங்களுக்கு படைத்தவைகளை உண்ணாமல் புறக்கணிகிறீர்களோ அவர்கள் யோகாவையையும் புறக்கணியுங்கள்.

யார் அவைகளையும் ஸ்தோத்திரம் கூறி ஸ்தோத்திரம் கூறி உண்கிறீர்களோ,அவர்கள் யோகா செய்யுங்கள்..

(எனது தியானத்தின் போது பெற்ற பதில்)


இயேசு யோகா செய்தாரா என்பதற்கு எனது பதிலை பின்பு தருகிறேன்..


அப்போஸ்தலர் 15:9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.



-- Edited by JOHN12 on Thursday 19th of April 2012 02:36:46 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

உங்களில் யார் விக்கிரங்களுக்கு படைத்தவைகளை உண்ணாமல் புறக்கணிகிறீர்களோ அவர்கள் யோகாவையையும் புறக்கணியுங்கள்.

யார் அவைகளையும் ஸ்தோத்திரம் கூறி ஸ்தோத்திரம் கூறி உண்கிறீர்களோ,அவர்கள் யோகா செய்யுங்கள்..

(எனது தியானத்தின் போது பெற்ற பதில்)


நறுக்கென்று நாலு வார்த்தைகளில் அருமையான பதிலொன்றை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

அத்தோடு கீழ்கண்ட வசனத்தையும் நாம் கவனிப்பது நலம்:

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்

இங்கு ற்றேதையாகிலும் செய்கிறது எனபதில் இந்த "யோகாவும்" அடங்கும் என்று நான் கருதுகிறேன். எனவே ஒருவரின் நிலைபாட்டின் மூலம் யாருக்காவது இடறல் வருவதாக இருந்தால் நிச்சயம் அதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

மேலும் அதை செய்யும் ஒருவர் மனதில் "இது பாவமாக இருக்குமோ"  என்ற குற்ற  மனசாட்சி இருக்குமானால்  அதை செய்வதைவிட செய்யாமல் இருபது சிறந்தது.

ரோமர் 14:23  விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

வேதத்தில் திடமாக பாவம் என்று சொல்லப்படாத காரியங்களை செய்யும்போது, ஓன்று சுத்தமனதுடன், குற்றமனசாட்சியல்லாமல் உறுதியான விசுவாசத்துடன் செய்ய வேண்டும்  அல்லது அதை செய்யாமல் விட்டுவிடுவது நல்லது.

ஆவியானவரின் வழி நடத்துதலுக்குள் இருந்தால் நிச்சயம் தீமையில்  இருந்து விலகி  சரியான பாதையில் நம்மால் பயணிக்க முடியும்!        



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Oz


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

Yoga is one of the duplicate Key .. So, it is not legal to use it.

__________________
sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

யோகா ,தியானம் தொடர்பாக தீர்க்கதரிசி வின்சன் செல்வகுமார் அவர்களது கருத்து காணொளியில் உள்ளது 



-- Edited by sar on Friday 1st of February 2013 01:18:56 AM



-- Edited by sar on Thursday 14th of February 2013 06:09:36 AM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard