சிறந்த வசன ஆதாரங்களுடன் மேலான விளக்கத்தை சகோதரர் தந்துள்ளார். அதற்க்கு மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை இருந்தாலும் என்னுடைய நிலை என்ன வென்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தியானமாக இருந்தாலும் சரி அது யோகாவாக இருந்தாலும் சரி நமது இறைவனை மைய்யமாக கொண்டு செய்யும் எந்த ஒரு செய்கையிலும் தவறு எதுவும் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஆனாலும் அந்நேரம் நமது சிந்தனையில்கூட அந்நிய தேவனை கொண்டுவந்துவிட கூடாது.
-
உதாரணமாக மனதை ஒருநிலைப்படுத்தும் "குண்டலி யோகத்தை" எடுத்துகொண்டால், நமது மனதை ஒரு நிலைப்படுத்த நாம் திரும்ப திரும்ப சொல்லும் மந்திரம் "தேவனுக்கு ஸ்தோத்திரம் அவர் நாமம் மகிமைப் படுவதாக" என்பதாக இருந்தால் நமது தியானமும் ஒரு ஜெபமாகவே எடுத்துகோள்ளபடும் என்பதே என்னுடைய தீர்மானம். .
ஆனால் வஸ்திரத்தில் நெருப்பை வைத்துகொண்டு வஸ்திரம் வேகாது என சொல்லலாகாது என வேதம் கூறுகிறபடி பார்த்தால்..
நீதிமொழிகள் 6:27 தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
வேதம் எதிர்க்கிற/சந்தேகத்திற்கு இடமான/கிறிஸ்துவ அஸ்திபாரத்தை ஆதாரமாக கொள்ளாத/அறியாத/விலகி இருக்க வேண்டிய கிரியைகளில் சோதனை செய்யாமால் விலகி இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன்...என்னை பொறுத்த வரையில் நான் யோகாவை இடறலில்லாமல் முழுமையாக எதிர்கிறேன் .
உதாரணமாக எந்த ஒரு ஆசனத்திற்கு முன்பாக சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனை தரும் என்பார்கள்..சூரியனை நாம் நமஸ்கரிக்க முடியுமா என்ன..இதுபோல விக்கிரக ஆராதனைக்கு இழுக்கும் காரணிகள் யோகாவில் பல.
வேதம் எதிர்க்கிற/சந்தேகத்திற்கு இடமான/கிறிஸ்துவ அஸ்திபாரத்தை ஆதாரமாக கொள்ளாத/அறியாத/விலகி இருக்க வேண்டிய கிரியைகளில் சோதனை செய்யாமால் விலகி இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன்...என்னை பொறுத்த வரையில் நான் யோகாவை இடறலில்லாமல் முழுமையாக எதிர்கிறேன் .
I தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
சகோதரர் அவர்களே! தியானம் பண்ணுவது மற்றும் யோகாசனம் செய்வது எல்லாம் தேவன் வெறுக்கும் பாவ காரியங்கள் என்று வேதம் சொல்லவில்லை. வேதம் பாவம் என்று எதை சொல்கிறதோ அதை மாத்திரம் நாம் செய்யாமல் தவிர்த்தால் போதும் என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்றோ, வேதம் சொல்லும் கேட்பவனுக்கு கொடு, திருப்பி கொடுப்பார்கள் என்று எண்ணி கடன் கொடாதே, உள்ளதை உள்ளது என்று சொல்லு, பொய் சொல்லாதே, பூமியில் பொக்கிசத்தை சேர்த்து வைக்காதே போன்ற நேரடி தேவ வார்த்தை மீறுதலை செய்து கொண்டு, வேதம் தவறு என்று சொல்லாத மனதை ஒருநிலைப்படுத்தி உடம்பை சீரான நிலையில் வைத்திருக்க செய்யும் காரியங்கள் தவறு என்று தீர்ப்பது எவ்விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.
அவன் எவ்விதமான தியானம் செய்தான் என்பது நமக்கு தெரியாது ஆகினும் தியானம் பண்ணுவதற்கு தடை எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதை புரஜாதியார்களின் முறைமைப்படி அவர்கள் வழிகளிலும் அவர்கள் சொல்லிகொடுக்கும் இடங்களிலும் சென்று பயில்வதுதான் தவறானது. அனால் நமது மனதை தேவனை நோக்கி ஒருநிலைப்படுத்த தேவனை துதிக்கும் துதியோடு செய்யும் எந்த தியானமும் தவறானது அல்ல என்றே நான் கருதுகிறேன்.
சங்கீதம் 55:17 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
தங்களுக்கு தியானமும் யோகாவும் தீமையானதுபோல் தோன்றினாள் நீங்கள் அதை தவிர்க்கலாம் ஆனால் அதில் அதில் தீமை இருக்கிறது என்று எண்ணாமல் நமது கர்த்தரை முன்னிலைப்படுத்தி பண்ணும் எந்த தியானமும் தவறானது அல்ல.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மையில் பலவிடங்கள் அறிந்து கொண்டேன் .பதில் அளித்த அனைவரையும் தேவன் ஆசீர்வதிபராக இது சம்பந்தமாக கூறபடும் இன்னொரு கருத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்து 12 வயதில் இருந்து 30 வயது வரை இந்தியாவில் யோகா தியானம் கற்றதாக ஒரு சிலர் கூறிவருகின்றனர்அண்மையில் ஒருவர் என்னிடம் வினவினர் .எனக்கு பதில் தெரியவில்லை தெரிந்தவர்கள் பதில் தரவும் .
உங்களில் யார் விக்கிரங்களுக்கு படைத்தவைகளை உண்ணாமல் புறக்கணிகிறீர்களோ அவர்கள் யோகாவையையும் புறக்கணியுங்கள்.
யார் அவைகளையும் ஸ்தோத்திரம் கூறி ஸ்தோத்திரம் கூறி உண்கிறீர்களோ,அவர்கள் யோகா செய்யுங்கள்..
(எனது தியானத்தின் போது பெற்ற பதில்)
நறுக்கென்று நாலு வார்த்தைகளில் அருமையான பதிலொன்றை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.
அத்தோடு கீழ்கண்ட வசனத்தையும் நாம் கவனிப்பது நலம்:
ரோமர் 14:21மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்
இங்கு மற்றேதையாகிலும் செய்கிறது எனபதில் இந்த "யோகாவும்" அடங்கும் என்று நான் கருதுகிறேன். எனவே ஒருவரின் நிலைபாட்டின் மூலம் யாருக்காவது இடறல் வருவதாக இருந்தால் நிச்சயம் அதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
மேலும் அதை செய்யும் ஒருவர் மனதில் "இது பாவமாக இருக்குமோ" என்ற குற்ற மனசாட்சி இருக்குமானால் அதை செய்வதைவிட செய்யாமல் இருபது சிறந்தது.
ரோமர் 14:23விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
வேதத்தில் திடமாக பாவம் என்று சொல்லப்படாத காரியங்களை செய்யும்போது, ஓன்று சுத்தமனதுடன், குற்றமனசாட்சியல்லாமல் உறுதியான விசுவாசத்துடன் செய்ய வேண்டும் அல்லது அதை செய்யாமல் விட்டுவிடுவது நல்லது.
ஆவியானவரின் வழி நடத்துதலுக்குள் இருந்தால் நிச்சயம் தீமையில் இருந்து விலகி சரியான பாதையில் நம்மால் பயணிக்க முடியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)