"பணம்" எனப்படும் தேவனுக்கு எதிராக செயல்படும் சாத்தான் எப்படியெல்லாம் மனுஷனை பிடித்து தன் கைக்குள் வைத்துகொண்டு அவர்களை நேர்மையற்றவர்களாகவும் கொடியவர்களாகவும் மாற்றி
மன சாட்சியை கொன்று, சக மனுஷர்களுக்கும் சண்டையை மூட்டி குழப்பத்தை ஏற்ப்படுத்திகுறது என்பதை நாம் அனேக நேரங்களில் அனுபவபூர்வமாக பார்த்திருக்க முடியும். நாம் "மிகவும் நல்லவன்" என்று நம்பியவர்களே கூட பண விஷயத்தில் மோசமானவர்களாக மாறி நம்மை ஏமாற்றியிருக்கலாம்.
இந்த திரியில் நாம் பணத்தின் அடிப்படையில் பிறரால் ஏமாற்றபட்ட நம் வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத உண்மை சம்பவங்களை எழுதலாம் என்று கருதுகிறேன்.
மத்தேயு 5:42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால் நம்மிடத்தில் கடன் கேட்பவனுக்கு முகம் கோணாமல் கொடுக்க வேண்டியது நமது கடமை என்றே நான் கருதுகிறேன். ஆகினும் நாம் சற்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள
இங்கு எழுதப்படும் உண்மை சம்பவங்கள் பயன்படலாம்.
நான் ஆண்டவரை அறியும் முன்னமேகூட பொதுவாக பணத்தை எங்கும்
சேர்த்து வைப்பதில்லை அப்படி ஒருவேளை என்னிடம் ஏதாவது பணம் சேருமானால் யாருக்காவது மூக்கு நிச்சயம் வேர்த்துவிடும். அன்றில் இருந்து இன்று வரை என்னிடம் பணம் இருந்தால் யாராவது கடன் கேட்டு விடுவார்கள். என்னிடம் யார் கடன் கேட்டாலும் என்னிடம் பணம் இருந்தால் இல்லை என்று சொல்வதே கிடையாது. அந்த கொள்கையின்
அடிப்படையில் நான் வாழ்ந்து பணத்தை கொடுத்துவிட்டு நான் சந்தித்த சில மோசமான சம்பவங்களில் சில முக்கியமானவற்றை நானும் இங்கு
எழுதுகிறேன்.
தொடர்ந்து சகோதரர்கள் தங்கள் அனுபவங்களையும் இங்கு பதிவிடலாம்.
Mr ராஜசேகர் - சென்னை
பேச்சலராக் நாங்கள் இருந்தபோது மும்பையில் என்னுடன் தங்கியிருந்த இவர், தையல் தொழில் நுட்பத்தில் டிப்ளோமா பெற்றிருந்தார். மிகவும்
நல்ல மனுஷர்! ஒருமுறை என்னிடம் ஒருநாள் அவசரமாக தேவை என்று ரூ. 2500/- கடன் வாங்கினார். (1989 களில் இந்த தொகை பெரியது. அந்நேரம் மும்பையில் எனது மாத சம்பளம் 2000). அதற்க்கு ஈடாக அவரது ஒரிஜினல் டிப்ளோமா சர்டிபிகேட்டை என்னிடம் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தரவில்லை. பிறகு அவராகவே வந்து வங்கியில் 35000/- லோன் கேட்டிருப்பதாகவும் அதற்க்கு ஜாமீன் கையேழுத்து போட்டு கொடுத்தால் லோன் வந்ததும் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி கைஎழுத்தும் வாங்கி சென்றார். லோன் கிடைத்தது ஆனால பணத்தை தரவில்லை, கேட்டதற்கு ஒரு செக்கை எழுதி கொடுத்தார். வங்கியில் செக்குடன் போனால், பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்த மனுஷரோ வங்கி லோன் பணத்தில் வாங்கிய தையல் இயந்திரங்களை எல்லாம் விற்றுவிட்டு இடத்தை காலிபண்ணிவிட்டு எங்கோ போய்விட்டார். அவருக்கு நான் ஜாமீன் கையெழுத்து வேறு போட்டிருந்ததால் அவர் வாங்கிய கடனை கட்டும்படி எனக்கு கனரா வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது, அதை தொடந்து நான் அனேக மன கஷ்டங்கள் மற்றும் வேதனைக்கு உள்ளாக நேர்ந்தது. இன்றுவரை அவருடைய ஒரிஜினல் சர்டிபிகேட் என்னிடம்தான் இருக்கிறது ஆனால் அவரையோ என்னால் பார்க்கவே முடியவில்லை.
மனமிரங்கி உதவி செய்யும் ஒருவரை வேதனைக்குள் மாட்டி விடுவதே இந்த உலகத்தின் நடைமுறை. ஆகினும் இதும்வும் ஒருவித சோதனையே! இங்கு நாம் சோர்ந்து போகாமல் நன்மையை செய்வது அவசியம்!
-- Edited by SUNDAR on Thursday 5th of April 2012 03:09:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீதிமொழிகள் 17:18 புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
நீதிமொழிகள் 11:15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
தேவன் நம் அனைவருக்கும் பிணைக்கபட்டதே நமக்கு போதும்..
மிக அருமையான கருத்துக்களை வேத வசனங்களின் அடிப்படையில் வழங்கியிருக்கிறீர்கள் சகோதரரே மிக்க நன்றி. ஆண்டவர் தாமே இந்த கருத்துக்களை எழுதவைத்தார் என்றே நான் விசுவாசிக்கிறேன். பல இடங்களில் பண விஷயத்தில் நான் மாட்டிகொண்டு விழி பிதுங்கி பின்னர் ஆண்டவரிடம் ஜெபித்தபோது ஆண்டவர் தாங்கள் குறிப்பிட்ட அதே வசனத்தை சுட்டி, எக்காரணத்தை கொண்டு எந்த விஷயத்திலும் இன்னொருவருக்கு பிணையாக நீ இருக்ககூடாது, உன்னிடம் பணம் இருந்தால் கொடு இல்லையேல் கொடுப்பதை பற்றி யோசிக்காதே என்பது போல் உணர்த்தினார்.
.
இப்பொழுது ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவருக்கு கொடுக்கும் பழக்கத்தை மாத்திரம் விட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் பணம் இருக்கையில் ஒருவர் கேட்கும்போது, அவர் நல்லவர் தந்துவிடுவார் என்ற அடிப்படையில் கொடுத்துவிட்டு பின்னர் அவர் இழுத்தடித்து அதனால் மனமுறிவு ஏற்ப்பட்ட அனேக சம்பவங்களும் உண்டு.
.
நம்மிடம் ஒருவர் அவசர சூழ்நிலையில் கடன் கேட்கும்பொழுது கொடுக்கும் தகுதியில்லாத பட்சத்தில் " இல்லை" என்று மறுத்து விடலாம். ஒருவேளை நம்மிடம் கொடுக்கும் தகுதி இருந்தால் ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல்
மத்தேயு 5:42உன்னிடத்தில்கேட்கிறவனுக்குக் கொடு,உன்னிடத்தில்கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
என்ற வசனப்படி, கொடுக்கவேண்டியது அவசியம் அல்லவா? அது குறித்து தங்கள் கருத்தை நான் அறியலாமா?
-- Edited by SUNDAR on Tuesday 10th of April 2012 08:26:58 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உலக நண்பர்களில் சிலர் பணத்துக்காக,தேவைகளுக்காக மாத்திரமே சிநேகிதத்தை நாடுவார்கள்..அவர்கள் தேவை நம் மூலமாகவோ,மற்றொருவர் மூலமாகவோ சந்திக்கபட்டலோ சில காலம் அவர்களை நாம் காண முடியாது.. பிறகொரு தேவை இருக்கும் போது மாத்திரம் துக்கத்தை முன்வைத்து பஞ்சப்பாட்டு பாடுவார்கள்...
அவர்களை நான் கடிந்து கொள்வேன்.. அப்பம் திண்ண மாத்திரம் தம்மை தொடர்பவர்களை நம் தேவனுக்கும் பிடிக்கிறதில்லை...
சிலர் எவ்வளவு தோல்வியானாலும் அடுத்தவர் பணத்தில் தான் முன்னேற RISK எடுப்பார்கள்..அவர்கள் கடன் வாங்குபவர்களை பற்றி சிறிதும் கவலை படுவதில்லை,திருப்பி செலுத்துவது பற்றியும் அவர்களுக்கு கவலை கிடையாது...
தேவன் இப்படியான உலகமக்கள் முன் நடந்து கொள்ளும்படியான உலக ஞானத்தையும் நமக்கு தந்துள்ளார்... ஆகவே ஏற்ற வேளையில் ஏற்ற படி நடந்து கொள்ளுவோம்..
கர்த்தர் ஏவுபவர்களுக்கு மாத்திரம் உதவுவது நல்லது... கடன் கொடுப்பதை பார்க்கிலும்,சிறிய வட்டிக்கு கொடுப்பதை பார்க்கிலும் பலனை எதிர்பாராமல் செய்யும் நம் அளவிற்கான உதவியே நல்லது என நான் பொதுவாக கருதுகிறேன்..
இதனையே நான் முடிந்தவரை கடைபிடிக்கிறேன்..
GLORY TO GOD..
-- Edited by JOHN12 on Wednesday 11th of April 2012 09:03:30 AM
//மத்தேயு 5:42உன்னிடத்தில்கேட்கிறவனுக்குக் கொடு,உன்னிடத்தில்கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
என்ற வசனப்படி, கொடுக்கவேண்டியது அவசியம் அல்லவா? அது குறித்து தங்கள் கருத்தை நான் அறியலாமா?//
சகோ.சுந்தர் அவர்களே!
இவ்வசனம், தகுந்த காரணத்திற்காக (genuine reason) கேட்பவனுக்குக் கொடுப்பதைப் பற்றியே கூறுவதாக நான் கருதுகிறேன்.
உதாரணமாக, மது குடிப்பதற்காக ஒருவர் பணம் கேட்டால் அதற்கு நாம் கொடுக்கவேண்டுமா என்ன? தமிழில் “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” எனும் பழமொழி உண்டு. கையில் தங்க மோதிரமும் பிரேஸ்லெட்டும் போட்டுக்கொண்டு பகட்டான உடை உடுத்திக் கொண்டு பிச்சை கேட்கிற ஒருவருக்கு பிச்சையிட வேண்டுமா என்ன?
நம்மிடம் கேட்பவர் தகுதியான காரணத்திற்காகத்தான் கேட்கிறாரா என்பதை முடிந்த அளவு ஆய்வு செய்து கொடுப்பதே சரி என்பது எனது கருத்து. “புறாவைப் போல் கபடற்றவர்களாக இருக்கும்படி” சொன்ன இயேசு, “சர்ப்பத்தைப் போல் வினாவுள்ளவர்களாகவும் இருக்கும்படி” சொல்லியுள்ளாரே!!
ஆனாலும், ஒருவர் நம்மை நிர்ப்பந்தித்து கட்டாயப்படுத்தினால், அவரிடம் எதிர்த்து நிற்கவேண்டாம் என்றே வேதாகாமம் ஆலோசனை சொல்கிறது.
நம்மிடம் கேட்பவர் தகுதியான காரணத்திற்காகத்தான் கேட்கிறாரா என்பதை முடிந்த அளவு ஆய்வு செய்து கொடுப்பதே சரி என்பது எனது கருத்து. “புறாவைப் போல் கபடற்றவர்களாக இருக்கும்படி” சொன்ன இயேசு, “சர்ப்பத்தைப் போல் வினாவுள்ளவர்களாகவும் இருக்கும்படி” சொல்லியுள்ளாரே!!
தங்கள் கருத்து உண்மைதான் சகோதரே! ஒருவர் தீய நோக்கத்தோடு நம்மிடம் பணம் கேட்கும்போது அது வேத விரோத செயலுக்கு பயன் படுத்தப்படுமானால் நாம் நிச்சயம் பணம் கொடுக்கபோவது இல்லை. அதை தேவனும் கடிந்துகோள்ளமாட்டார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்னிடம் பணம் கேடடு ஏமாற்றியவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு தகுந்த காரணத்துக்காக கேட்டவர்கள்தான் அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நானும் பணம் கொடுத்தேன் ஆனால் அவர்களால் அனேக பிரச்சனைக்குள் கடந்து வர நேர்ந்தது.
நான் முன்பு சொன்ன ராஜசேகர் போலவே மும்பையில் ரவி என்றொரு நண்பர் இருந்தார் அவரும் என்னிடம் ஒருமுறை என்னிடம் அவரது தொழிலை விருத்திசெய்ய ரூபாய் ௫5000/- கேட்டார் நானும் கொடுத்தேன் ஓரிரு மாதங்களில் அவர் மும்பை காலிசெய்துகொண்டு சொந்த ஊராகிய கோயமுத்துருக்கு போய்விட்டார். நான் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது அவரது முகவரியை கண்டுபிடித்து சென்று பணத்தை கேட்கலாம் என்று போனபோது, அவரது வீட்டு நிலைமை மற்றும் அவரது வயதான தாயார் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்து குடும்பத்தை நடத்தும் நிலை இவைகளை பார்த்தபின் அந்த பணத்தை திரும்ப கேட்பதர்க்குகூட எனக்கு மனதில்லாமல் திரும்பு வந்துவிட்டேன். மாதம் 2000 ரூபாய் சம்பளத்துக்கு வெலை செய்த அந்த 1990 களில் எனக்கு 5000 என்பது மிகப்பெரிய தொகை. அந்த பணமும் இன்று வரை திரும்ப வரவில்லை.
அடுத்து எனது மேலான நண்பன் ஒருவர் மிகவும் நல்லவன் நேர்மையானவன்! மும்பையில் காய்கறி வியாபாரம் பார்த்துவந்த இவன் என்னிடம் ஓர்நாள் என்னுடய வியாபாராத்துக்கு கொஞ்சம் அதிக முதல் தேவைப்படுகிறது நீ தனியாகத்தானே இருக்கிறாய் உன்னிடம் சேமிப்பு பணம் எது இருந்தாலும் என்னிடம் கொடுத்துவை நான் அதை பயன்படுத்தி கொள்கிறேன் நீ எப்பொழுது கேட்டாலும் உடனே அதை திருப்பி கொடுத்துவிடுவேன் என்று சொன்னதனால் நான் என்னிடம் இருந்த சேமிப்பு பணம் எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்து வைத்திருந்தேன். ஒருநாள் ஏதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இரவு உணவுக்குகூட பணம் இல்லாமல் போய்விட்டது. வியாபாரம் முடிந்து வரும் வழியில் அவனை மடக்கி என்னிடம் இரவு சாப்பாட்டுக்கு பணம் எதுவும் இல்லை ஒரு 2 ரூபாய் கொடு என்று கேட்டபோது அவன் "என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை"என்று சொன்னதோடு பையில் கைவைத்து காண்பித்து "இதில் இருக்கும் பணம் எல்லாம் வியாபார பணம், இந்த பணத்தை நான் யாருக்கும் கொடுப்பது கிடையாது" என்று ஏதோ நான் அவனிடம் கடன் கேட்பதுபோல் சொல்லி விட்டு கடந்து சென்றான். அவனிடம் கொடுத்து வைத்த பணத்தை முழுவதுமாக இன்றுவரை என்னால் வாங்கமுடியவில்லை.
இதுபோல் இக்காட்டான சூழ்நிலை என்று சொல்லி பணம் கேடடு வந்து நின்றவர்கள் அநேகர் பணம் வாங்கியபின்னர் அதை திருப்பி கொடுக்க மனதில்லாமல்போய், நாம் பணத்தை திருப்பி கேட்கும்போது அவர்களுக்கு நாம் விரோதியாகும் நிலைகூட ஏற்படுகிறது. அதே நேரம் ஒருவர் இக்காட்டான நேரத்தில் நம்மிடம் பணம் கேட்கும்போது நாம் பணம் இருந்து இல்லை என்று சொல்லி கொடுக்க மறுத்தால் அங்கு இயேசுவின் வார்த்தைகளை மீறி நடக்கிறோமோ என்ற குற்ற மனபான்மை மனதில் உண்டாகிறதே!?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னுடன் நீண்ட நாட்கள் வேலை பார்த்த நண்பர் செந்தில்!
மிகவும் நல்ல மனுஷரான இவர் எனக்கு பல சிறு சிறு உதவிகளை செய்திருக்கிறார்.
ஒருநாள் என்னிடம் ரூ 500 கடன் வேண்டும் என்று கேட்டார் (அப்பொழுது எனக்கு 500 ஒரு பெரிய தொகை) நானும் உடனடியாக அவருக்கு கொடுத்து விட்டேன். சுமார் இரண்டு மாதங்கள் அந்த பணத்தை பற்றி எதுவும் பேசவில்லை. பொதுவாக நானும் யாரிடமும் கொடுத்த பணத்தை அவ்வளவு சீக்கிரம் திருப்பி கேட்பது இல்லை. இந்நிலையில் தீபாவளியன்று அவருக்கு ரூ 10000 போனஸ் கிடைத்தது அப்பொழுது நான் எனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அவரோ "சார் இந்த பணத்தில் இருந்து என்னால் எதுவும் கொடுக்க முடியாது" பிறகு தருகிறேன் என்பது போல் சொல்லிவிட்டார்.
சுமார் நான்கு ஐந்து மாதங்கள் கடந்து போய்விட்டது பின்னர் ஒரு நாள் என்னிடம் வந்து "சார் எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் வேண்டும்" என்று கேட்டார். அப்பொழுது தான் "நீங்கள் இதற்க்கு முன்னர் வாங்கிய பணத்தை இன்னும் தரவில்லையே" என்று சொன்னேன். உடனே அவர் "நானா? உங்களிடம் பணம் வாங்கினேனா? என்னசார் இது? நான் எப்பொழுது உங்களிடம் பணம் வாங்கினேன்? என்று பேசி, 'வாங்கவே இல்லை" என்று சாதித்து விட்டார். நான் அவரிடம், தீபாவளி போனஸ்/ நான் பணத்தை திருப்பி கேட்டது போன்ற எல்லா காரியத்தையும் நினைவு படுத்தி கேட்ட போதும் அவர் வாங்கவே இல்லை என்று அடித்து பேசியதை பார்த்து எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! நான் உண்மையில் அவருக்கு பணம் கொடுத்தேனா? அல்லது எதாவது கனவு கண்டேனா என்று! எனவே குழப்பத்தில் இன்னொரு ஐநூறு ரூபாயையும கொடுத்தேன்.
ஆனால் இந்த ஐநூறு ரூபாயையும் இரண்டு மூன்று மாதங்களாக திருப்பி தராமல் இருந்த அவர், திடீர் என்று வேறு ஒரு கம்பனியில் போய் வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றும் சென்னையில் இருக்கும் அவர் பிறகு என்னக்கு போன் பண்ணவும் இல்லை அந்த பணத்தை திரும்பி தரவும் இல்லை. என்னிடம் அவரது போன் நம்பர் இன்னும் இருக்கிறது, ஆனால் நானும் போன் பண்ணி அந்த பணத்தை திரும்பி கேட்கவும் இல்லை. காரணம் இப்படி பட்ட நல்ல நல்ல மனுஷர்களிடம் பழக்கம் தொடர்வது நமக்கு தேவைதானா? என்ற நோக்கமே!
ஒருவேளை இந்த இரண்டாவது ஐநூறு ரூபாயை அவர் திருப்பி கொடுத்திருந்தால் நான் நிச்சயம் முதலில் ஒரு ஐநூறு கொடுக்க வில்லையோ என்று அந்த காரியத்தை என் மனதில் இருந்து நீக்கியிருப்பேன். ஆனால் அவர் இரண்டாவது ஐநூறு பணத்தை திருப்பி தராமல் ஓடியதிநிமித்தம் அவர் முதலில் பணம் வாங்கி இல்லை என்று மறுத்தது நிரூபிக்கபட்டுவிட்டது.
மிகவும் நல்ல மனுசனாகவும் சுமார் ஏழு வருடமாக ஒரு நல்ல நண்பனாகவும் இருந்த அவரின் உண்மை ரூபத்தை ஒரு ஐநூறு /ஆயிரம் பணம் அப்பட்டமாக தோலுரித்து காட்டிவிட்டது! பணத்தின் மகிமையை என்னவென்று சொல்வது!?
இன்னும் அநேகர் இருக்கிறார்கள்........
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)