இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்கள் ஜெபங்கள் இவர்கட்காகவும்


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
உங்கள் ஜெபங்கள் இவர்கட்காகவும்
Permalink  
 


வணக்கம் மீண்டும் ஒரு

பதிவு இந்த நாட்களில் சாத்தானானவன் இளைஞர்களை மிக நயவஞ்சகமாக செக்ஸ் எனும் மாயவலையின் மூலம் தேவனிடமிருந்து பிரித்து விடுகிறான்....

இது தேவனை அறியாத பிள்ளைகளிடம் மட்டுமல்லாது தேவனை இரட்சகராக ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பல கிறீஸ்தவப் பிள்ளைகளிடமும் காணப்படுகிறது......

இது நான் ஒரு வாலிபனாக இருப்பதால் எனது நண்பர்களுடன் கதைக்கும் போது நான் அறிந்து கொண்டது...... 

இது வெறும் கதையல்ல இது உண்மை..

இது கடைசிக் காலம் என்ற படியினால் சாத்தான் யாரை விழுங்கலாம் என்று மிக வேகமாக தனக்குக் கொடுக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி தேவனி்டமிருந்து தேவ பிள்ளைகளைப் பிரித்து வருகிறான்.........

எமது முழங்கால்கள் முடங்குமா?????

கண்கள் குளமாகுமா????

கைகள் உயருமா????

 

இனிக் காலம் செல்லாது...

விழித்திருந்து ஜெபிப்போம்........



__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

vanakam wrote:

இது கடைசிக் காலம் என்ற படியினால் சாத்தான் யாரை விழுங்கலாம் என்று மிக வேகமாக தனக்குக் கொடுக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி தேவனி்டமிருந்து தேவ பிள்ளைகளைப் பிரித்து வருகிறான்.........

எமது முழங்கால்கள் முடங்குமா?????

கண்கள் குளமாகுமா????

கைகள் உயருமா????

 

இனிக் காலம் செல்லாது...

விழித்திருந்து ஜெபிப்போம்........


 

நிச்சயமாக தங்கள் ஆதங்கம் உண்மையானதுதான் சகோதரரே,

நாங்களும் கூட வாலிப பிராயங்களை கடந்து வந்தவர்கள்தானே அனால் அந்த நாட்களில் இல்லாத அளவு இந்நாட்களில் சினிமாக்கள் வலை தளங்கள் என்று  எல்லா இடங்களிலும் ஆபாசங்கள் வலையை விரித்து வைத்துள்ளது. ஒரு வாலிபன் அந்த வலைகளில் விழாமல் தப்பித்து மீண்டு வருவது கடினமே. சுருக்கமாக சொன்னால் உலகமே பாவ அக்கினியால் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது அதில் பொசுங்கி போகாமல் ஒரு  ஆத்துமாவை காப்பாற்றுவது என்பது கடினமான காரியமே. நல்ல பிள்ளைகள் கூட வழிதப்பும் வாய்ப்பு அதிக மதிகமாக எங்கும் நிறைந்துள்ளது.  

கல்லூரியில் படிக்கும் எனது மகன்கூட இயேசுவை ஏற்றுக்கொண்டு அபிஷேகம் பெற்றுக்கொண்ட புதிதில்,  ஜெபம் /வேத பாட்டு  என்று  தேவன் பேரில் பற்றுதலாய்  இருந்தது என்னுடய மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. அனால் நாட்கள் செல்ல செல்ல மற்ற சில நண்பர்கள்  நடவடிக்கையை பார்த்து  இங்கிலீஷ் படம், பேஸ் புக் என்று தேவையற்ற காரியங்களில் அதிக நேரங்களை செலவழிக்க ஆரம்பித்து விட்டான்.

இனி கண்டித்து திருத்தும் வயது இல்லை, எனவே கர்த்தரிடம் சரணடைவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

தேவனிடம் மற்றாடி ஜெபிப்போம் அவர் நிச்சயம் நாம் விண்ணப்பத்தை கேட்பார்.

  



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard