அண்மையிலே தேவனுக்காக ஒரு காரியம் செய்ய முடிவெடுத்தேன். அது மிகப் பெரிய காரியம் தான். ஆனால்த் தற்பொழுது அதற்கு தடை மேல்த் தடையாக இருக்கிறது.
இதனால் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை..
இது தேவனால் உண்டானதா இல்லாவிடின் சாத்தானினால் உண்டானதா எனத் தெரியவில்லை..
நண்பர்கள் யாராவது உதவுவீர்களா??
நண்பரே, இறைவனுக்காக நாம் சில நல்ல காரியங்களை செய்ய முயர்ச்சிக்கும்போது சத்துருவினால் பல தடைகள் வருவது உண்டு:
உதாரணமாக: எஸ்ராவின் நாட்களில் எருசலேம் ஆலயத்தை எடுத்து கட்ட முயன்றபோது சில புற ஜாதியர்களால் தடை ஏற்பட்டு பல நாட்களாக அந்த வேலையை முடிக்க முடியாமல் போனது.
.
அதுபோல் இறைவனுக்கு பிடிக்காத அல்லது செய்வதற்கு ஏற்ற காலம் இல்லாத சில காரியங்களை நாம் செய்ய முயலும்போதும்கூட இறைவனே சில தடைகளை ஏற்ப்படுத்துவதும் உண்டு.
உதாரணமாக:பவுலை ஊழியம் பற்றி வாசிக்கும்போது
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, அப் 16:6
ஆசியாவில் வசனத்தை சொல்ல விரும்பிய பவுலின் நல்ல எண்ணங்கள் கூட ஏதோ காரணங்களால் ஆவியானவரால் தடைசெய்யப்பட்டதை நாம் அறிய முடியும்
ஆனால் இறைவனால் உண்டாகி அவர் செய்ய நினைத்தது எதுவும் தடைபடாது என்பதையும் நாம் அறிவோம்.
யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
எனவே சகோ. john12 கேட்பதுபோல் என்ன காரியம் என்று தாங்கள் தெரிவித்தால் உண்மை என்னவென்பதை அறிய ஜெபிக்கலாம்.
மீகா 2:13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.