ஏசாயா 43:4நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
இந்த வசனத்தில் வரும் "ஈடாக" அல்லது "பதிலாக" என்ற வார்த்தையின் சரியான பொருள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்று கருதுகிறேன்.
பொதுவாக பொருட்களை ஈடு வைத்தால் என்று சொல்வார்கள் ஆதாவது ஏதாவது ஒரு விலை மதிப்புள்ள பொருளையோ அல்லது நகையையோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு அதற்க்கு இணையான பணத்தையோ அல்லது பொருளையோ பெற்றுக்கொள்வதுதான்ஈடு வைத்தல் என்ற வார்த்தையை குறிக்கும்.
இந்த ஈடு வைத்தல் என்ற நிகழ்ச்சியில் ஈடு வைப்பவர் ஒருவரும் ஈடு பிடிப்பவர் ஒருவரும் நிச்சயம் இருக்கவேண்டும். அதாவது பொருளை ஈடு வைப்பவரும் அதை ஈடாக பெற்றுக்கொண்டு அதற்க்கு நிகராக பணத்தையோ பொருளையோ கொடுப்பவர் ஒருவரும் நிச்சயம் இருக்கவேண்டும்.
இந்நிலையில் இந்த வசனத்தில் கர்த்தர் இவ்வாறு சொல்கிறார் " உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்குஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்" இந்த கூற்றானது கர்த்தர் ஒருவரின் ஜீவனுக்கு பதிலாக அல்லது ஈடாக வேறு ஜனங்களை கொடுப்பது போல் பொருள் தருகிறது.
இவ்வாறு இங்கு ஈடு கொடுப்பவர் கர்த்தராக இருக்கும் பட்சத்தில் ஈடை வாங்குவது யார்? அல்லது "உனக்கு" "உன் ஜீவனுக்கு" என்று கர்த்தர் சொல்வது நம்மையும் நம்முடைய ஜீவனையும் குறிப்பதாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு ஈடாக வேறு ஜனங்களை கொடுப்பனே என்று யாருக்கு கொடுப்பதாக கர்த்தர் கூறுகிறார்? ஏன்? கர்த்தரிடம் ஈட்டை கேட்டு வாங்கும் அளவுக்கு உள்ள வேறு ஒருவர் யார்?
பதில் தெரிந்தவர்க்ள விளக்கலாம்.
(பதில் சொல்பவர்கள் ஏசாயா 45:5நானேகர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. என்ற வசனத்தை கருத்தில் கொண்டு பதில் தரவும்)
-- Edited by SUNDAR on Saturday 28th of April 2012 11:07:03 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் கேட்டுள்ள இந்த கேள்விகள் நீண்ட நாட்கள் பதில் இல்லாமல் இருப்பதால் எனது புரிதலை இங்கு பதிவிட விளைகிறேன்.
சமீபத்தில் ஒரு சில முக்கியமான நபர்கள் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு அந்த முக்கிய நபர்களை விடுவிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஈடாக சில காரியங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
இங்கு கடத்தப்பட்டவர்கள் முக்கியமானவர்களாக இருக்கும் பட்சத்தில் கடத்தல் காரர்களின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டு கடத்தபட்டவர்களுக்கு ஈடாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அந்த முக்கியமானவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்த உண்மை நாம் அனைவரும் அறிந்ததே.
இங்கு கடத்தலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தைவிட பெரியவர்கள் என்று சொல்லிவிட முடியாது ஆகினும் அவர்கள் கேட்டதை அரசாங்கம் கொடுத்து அந்த முக்கியமானவர்களை விடுவிக்கிறது.
அதுபோலவே தேவனுக்கு பிரியமாக வாழும் மனு புத்திரர்கள் ஏதாவது சிறிய பெரிய பாவத்தினிமித்தம் சாத்தானால் பிடிக்கப்படும்போது, அவர்களை சாத்தானின் பிடியில் இருந்து மீட்க தேவன் அவர்களுக்கு ஈடாக வேறு ஜனங்களையோ ஜாதிகளையோ கொடுப்பேன் என்று சொல்வதுபோல் இந்த வசனம் இருக்கிறது என்பது என்னுடய கணிப்பு.
II சாமுவேல் 24:15. அப்பொழுதுகர்த்தர்இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.
தாவீது பாவம் செய்தபோது கொள்ளை நோய் மூலம் அவன் நாட்டில் இருந்த அனேக ஜனங்கள் மாண்டுபோனார்கள் அதாவது தாவீதுக்கு பதிலாக அனேக ஜனங்கள் மரித்தார்கள்
17ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன்வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று
விண்ணப்பம்பண்ணினான்.
மேலும் "கொடுப்பேன்" என்று தேவன் சரியான பொருள் என்னவென்பதையும் நாம் அறிவது அவசியம். சாத்தானின் முக்கிய நோக்கம் "தேவனால் உண்டாக்கபட்ட மனுஷர்களை கொல்வதும் அழிப்பதுவுமே". எனவே "கொடுப்தேன்" என்று தேவன் சொல்வது மரணத்துக்கு ஒப்புகொடுப்பதையே குறிக்கும்.
சுருக்கமாக சொன்னால், "யாதொரு மனுஷன் பாவம் செய்து சாத்தானின் பிடியில் வீழ்ந்து மரணத்துக்கு நேராக இருக்கும்போது அவன் நல்லவனும் தேவனுக்கு பிரியமாகவும் நடந்தவனாக இருந்தால் அவனுக்கு பதிலாக அல்லது ஈடாக வேறு ஜனங்களையோ ஜாதிகளையோ மரணத்துக்கு ஒப்புகொடுத்து தேவன் தனக்கு பிரியமானானை மீட்ககூடும் என்பதே இதன் பொருள்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆடு மாடுகள் பலியின் மூலம் மனுஷன் செய்த பாவங்கள் நிவர்த்தியானதும் இயேசுவின் மரணத்தின் மூலம் பாவிகள் மீட்கப்படுவதும் இந்த நியமணத்தின் அடிப்படையிலேயே நடந்தது/ நடக்கிறது.
இதற்க்கு வேறு ஏதாவது பொருள் இருக்குமாயின் திருத்தி சரியான பதிவை தரலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)