இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
Permalink  
 


எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?

அன்பு சகோதரர்களே,
                                                நான் இந்த தளத்தில் எழுதி மிக நாட்கள் ஆகிவிட்டது.
அதற்க்கு காரணம் எனக்கு   INTERNET  உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படாததே .
இனி எப்படியாவது BROWSING CENTER சென்றாவது எழுத முயல்கிறேன்.

எனக்கு தற்பொழுது ஆண்டவரின் வார்த்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

ஆண்டவர் நம்மிடம், எந்த ஜெபத்தை ஏறெடுக்கும் முன்னர் பிதாவின் சித்தபடி நடக்கும்படி வேண்டிக்கொள்ள  சொல்கிறார்.

ஆனால் கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும்  என்று கூறி ,
கேட்டு பெற்றுக்கொள்ள சொல்கிறார்.

உண்மையில் எல்லாம் பிதாவின் சித்தபடி நடந்தால் நன்மையா ?
அல்லது நமக்கு தேவையானதை கேட்டு பெற்றுகொள்ளலாமா?


 



__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
Permalink  
 


சகோதரர் சுகுமார் அவர்கள் கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

எல்லாமே தேவ சித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா?

தேவனின் "சித்தம்" மற்றும் அவரது "நியமணம்"!

மேலதிக விளக்கம் தெரிந்த சகோதரர்கள் தாங்கள் பதிவுகளை தரலாம்.
 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
Permalink  
 

இதை படிப்பதற்கு எனக்கு தற்பொழுது வாய்ப்பு இல்லை . எனவே எனது கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லவும்.

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தேவன் நமக்கு ஜீவனை தந்தது மாத்திரம் அல்லாது தயவும் பாராட்டினார் என வேதம்  கூறுகிறது..

 

தேவன் நாம் பிழைத்திருக்க ஜீவனையே தந்து விட்டார். பிழைப்புகடுத்த மற்ற காரியங்களை தரமாட்டார என்ன!!

 

தருவார். 

 

நாம் தேவனை கிரியைகள் மூலமாய்  விசுவாசிப்பதில், கேட்டு பெற்றுகொள்ளுதல் பெரும்பங்கு வகிக்கிறது..

அனைத்தையும் கேட்டு பெற்றுக்கொள்ள அவசியம் இல்லை.. ஏனெனில் நம் அடிப்படை தேவைகளான உணவு,உடை,உறையுள் போன்றவைகளை தேவன் ஏற்கனவே தந்தாயிற்று..

நாம் தாழ்மையோடு,இச்சை அடக்கத்தோடு  தேவனிடத்தில் நமது தேவைகளுக்காக பிராத்திப்பது அவருக்கு சித்தம்..

எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துகொள்ளுவர் என எண்ணுவோரின் பரிசுத்தத்தையும்,உத்தமதையும்,விசுவாசத்தையும் பொருத்து  அவர்களுக்கு சம்பவிக்கும்... 

இம்மாதிரியான விசுவாசதுடனான  மனபோக்கு அர்பணிப்போடு கானபட்டாலும்,இதில் தேவ சமூகத்தை இழந்துவிட வாய்ப்பு அதிகம் என்பது எனது தனிப்பட்ட கருத்து..

 

Hallelujah...



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
Permalink  
 


Sugumar S T wrote:

இதை படிப்பதற்கு எனக்கு தற்பொழுது வாய்ப்பு இல்லை . எனவே எனது கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லவும்.


நம்  ஆண்டவராகிய இயேசு கேட்டு  பெற்றுக் கொள்ளும்படி சொல்லியிருக்கிறார், 

லூக்கா 11:9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;

லூக்கா 11:10 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;

 
எனவே நாம் எதிர்பார்ப்பதை  இறைவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வதில்  எந்த தவறும் இல்லை  என்பது எனது கருத்து.
 
ஆனால் வேறொரு வசனம் இவ்வாறு சொல்கிறது:
   
மத்தேயு 6:8  உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

எனவே சகோதரர் சுகுமார் அவர்களின்  கேள்விக்கு எனது பதில்  என்னவெனில்:
 
பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்  தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
 
ஆண்டவராகிய இயேசு செய்ததுபோல் "எல்லாவற்றையுங்குறித்து" இறைவனிடம் ஸ்தொத்திரத்தொடு விண்ணப்பிக்கலாம் ஆனால் எந்த ஒன்றையும் குறித்து கண்டிப்பாக பெற்றுவிவேண்டும் என்ற  பிடிவாத எண்ணம் இல்லாமல்,  இறைவனின் சித்தப்படி அவருக்கு விருப்பமான முறையில் நடக்க அவர் கிரியை செய்ய  விட்டு கொடுத்து பிராத்தனை செய்வது நலம்.
 
 நாம் ஜெபித்து கேட்ட காரியம் ஓன்று நடக்க வில்லை என்றாலும்கூட "ஆண்டவரே என்னுடைய சித்தம் செயல்படாமல் உம்முடைய சித்தபடி நடத்துவதற்கு நன்றி" என்று ஜெபிக்கலாமே.  
 
மற்றபடி சகோ ஜான் அவர்கள் சொல்வதுபோல்  "எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கட்டும்" என்று 
ஜெபிக்காமல்  இருப்பது தேவ பிரசன்னத்தை இழந்து போக பண்ணலாம்.   
 
    


__________________


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
RE: எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
Permalink  
 


உண்மைதான் . தேவனிடம் ஸ்தோதிரதோடு விண்ணப்பிக்க வேண்டும் .
அது கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் அதை அவர் சித்தபடியே
விட்டுவிட வேண்டும். நாம் கேட்பது நமக்கு நன்மை தருமானால், அதை
நமக்கு அவர் செய்வார். இல்லையெனில் அவர் சித்தபடி விட்டுவிட்டால்
நாம் கேட்டதைவிட அவர் தருவது மிக சிறந்ததாயும், மிக நன்மைதருவதாயும்,
அமையும்.

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard