எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
அன்பு சகோதரர்களே, நான் இந்த தளத்தில் எழுதி மிக நாட்கள் ஆகிவிட்டது. அதற்க்கு காரணம் எனக்கு INTERNET உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படாததே . இனி எப்படியாவது BROWSING CENTER சென்றாவது எழுத முயல்கிறேன்.
எனக்கு தற்பொழுது ஆண்டவரின் வார்த்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
ஆண்டவர் நம்மிடம், எந்த ஜெபத்தை ஏறெடுக்கும் முன்னர் பிதாவின் சித்தபடிநடக்கும்படி வேண்டிக்கொள்ள சொல்கிறார்.
ஆனால் கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் என்று கூறி , கேட்டு பெற்றுக்கொள்ள சொல்கிறார்.
உண்மையில் எல்லாம் பிதாவின் சித்தபடி நடந்தால் நன்மையா ? அல்லது நமக்கு தேவையானதை கேட்டு பெற்றுகொள்ளலாமா?
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
எனவே நாம் எதிர்பார்ப்பதை இறைவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது எனது கருத்து.
ஆனால் வேறொரு வசனம் இவ்வாறு சொல்கிறது:
மத்தேயு 6:8உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
எனவே சகோதரர் சுகுமார் அவர்களின் கேள்விக்கு எனது பதில் என்னவெனில்:
பிலிப்பியர் 4:6நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆண்டவராகிய இயேசு செய்ததுபோல் "எல்லாவற்றையுங்குறித்து" இறைவனிடம் ஸ்தொத்திரத்தொடு விண்ணப்பிக்கலாம் ஆனால் எந்த ஒன்றையும் குறித்து கண்டிப்பாக பெற்றுவிட வேண்டும் என்ற பிடிவாத எண்ணம் இல்லாமல், இறைவனின் சித்தப்படி அவருக்கு விருப்பமான முறையில் நடக்க அவர் கிரியை செய்ய விட்டு கொடுத்து பிராத்தனை செய்வது நலம்.
நாம் ஜெபித்து கேட்ட காரியம் ஓன்று நடக்க வில்லை என்றாலும்கூட "ஆண்டவரே என்னுடைய சித்தம் செயல்படாமல் உம்முடைய சித்தபடி நடத்துவதற்கு நன்றி" என்று ஜெபிக்கலாமே.
மற்றபடி சகோ ஜான் அவர்கள் சொல்வதுபோல் "எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கட்டும்" என்று
ஜெபிக்காமல் இருப்பது தேவ பிரசன்னத்தை இழந்து போக பண்ணலாம்.
உண்மைதான் . தேவனிடம் ஸ்தோதிரதோடு விண்ணப்பிக்க வேண்டும் . அது கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் அதை அவர் சித்தபடியே விட்டுவிட வேண்டும். நாம் கேட்பது நமக்கு நன்மை தருமானால், அதை நமக்கு அவர் செய்வார். இல்லையெனில் அவர் சித்தபடி விட்டுவிட்டால் நாம் கேட்டதைவிட அவர் தருவது மிக சிறந்ததாயும், மிக நன்மைதருவதாயும், அமையும்.
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.