நாம் சிறுபிள்ளைகளாக இருந்த காலங்களை ஒருமுறை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து பார்க்கலாம்!
ஆ! என்றுமே மறக்க முடியாத எந்தனை இன்பமான நாட்கள்! நினைத்து பார்த்தாலே மனதெல்லாம் இனிக்கும் அந்த இனிய இயற்க்கை காட்சிகள்! கிராமத்து வயல் வெளிகளின் மணம், பரந்து விரிந்த தெருக்கள், பலவித ஒலிழுப்பும் வண்ணவண்ண குருவிகள், வாய்க்கால்களில் தண்ணீர் ஓடும் ஓசை, தெருக்களில் ஓடும் மாட்டு வண்டிகளின் சத்தம், சொந்தங்கள் பேசும் அழகான அருமையான அந்த கிராமத்து வார்த்தைகள் எல்லாமே இன்று நினைத்தாலும் இனிக்கிறது.
ஆனால் அன்று நாம் ஓடித்திரிந்த இடங்கள் எல்லாமே இன்று ஒன்று மில்லாமல் போய் நாம் எங்கு திரும்பி பார்த்தாலும் உரு தெரியாமல் எல்லாமே சிதைந்து போய்விட்டன.
அவைமட்டுமா சிதைந்து போனது?
நம்முடைய கள்ளமில்லாத நெஞ்சம், நாளை பற்றிய கவலை இல்லாத தெளிவான மனம், அடிபிடி சண்டை போட்டு அழுதுவிட்டு சிறிது நேரத்தின் அண்ணன் தம்பியுடன் சேர்ந்து ஆடிப்பாடும் நிலை, உடன்படிக்கும் நண்பர்களை உயிர்போல பாவிக்கும் களங்கமில்ல மனசு, உள்ளொன்று வைத்து வெளியோன்று பேசத்தெரியாத வெள்ளையான மனசு, இவை எல்லாம்மும் கூட நம்மை விட்டு எங்கோ ஓடி ஒழிந்துபோனது.
வஞ்சம், பொறாமை, கோபம், பயம், வெறுமை, பொறுப்பு, கவலை, இச்சை, ஆசை போன்ற எந்தனையோ புது புது அட்டைகள் மனதில் வந்து அசையாமல் ஒட்டிக்கொண்டு விட்டதே! எங்கேயிருந்து இவைகள் எல்லாம் வந்தது என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை ஆகினும் அவைகளை எல்லாம் முற்றிலும் விட்டொழிக்க முடியாமல் அனுதினமும் போராடுகிறோம்.
இதை எல்லாம் அறிந்த ஆண்டவரோ நம்மை பார்த்து "நீ உன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ள இந்த துர் குணங்களை எல்லாம் விட்டு மீண்டும் அந்த சிறு பிள்ளை போற்ற நிலைக்கு திரும்பு" என்று சொல்கிறார்.
மத்தேயு 18:3நீங்கள்மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆண்டவரின் பரலோக ராஜ்ஜியம் என்பதே சிறுபிள்ளை போன்று தன்னை பக்குவப்படுத்திகொண்டவர்களுக்குரியது என்றும் சொல்லியுள்ளார்!
ஆனால் அது சாத்தியமா? நம்மை ஒட்டிக்கொண்ட அழுக்குகளை நம்மால் போக்கிவிடமுடியுமா? ஆண்டவர் என்ன சொல்கிறார்?
எரேமியா 2:22 நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகியஆண்டவர் சொல்லுகிறார்.
ஆம்! நாம் என்னதான் நமது மனதை சோப்பு போட்டு அல்லது சர்ப் எக்ஸ்செல் போட்டு ஊற வைத்து தேய்த்து தேய்த்து கழுவினாலும் நமது மனதில் ஒட்டிக்கொண்ட கரைகள நீங்கிபோவது கடினமே. அதை நாம் சுயபெலத்தால் செய்யவே முடியாது!
ஆனால் தேவனோ அதற்க்குண்டான சுலபமான வழியை அவரே ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறார் எப்படி?
I யோவான் 1:7அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச்சுத்திகரிக்கும்.
ஆம்! இருதயத்தில் ஓட்டிகொண்டிருக்கும் துர்குணங்களை கழுவி சுத்திகரிக்கும் ஒரே ஒரு பரிசுத்த வஸ்து "இயேசு சிந்திய இரத்தத்தின் மேலுள்ள் விசுவாசமே!"
அது எப்படி, எப்போது நம்மை சுத்திகரிக்கும்?
I யோவான் 1:9நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச்சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
ஆம் அன்பர்களே! நமது இருதயத்தில் இருக்கும் வேண்டாத கரைகளை துர் சிந்தனைகளை அன்றாடம் ஆண்டவரிடம் அறிக்கையிட்டு அவைகளை நீக்கும்படி அவரிடம் மன்றாடும் போது, அவைகளை நீக்க அவரே பெலன் தருகிறார்! அவரே நம்மை மீண்டும் ஒரு சிறு பிள்ளை போன்ற நிலைக்கு நம்மை மாற்ற அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)