"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
விவிலியத்தில் துன்மாக்கன் மற்றும் நீதிமான்கள் குறித்து அதிக இடங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த துன்மாக்கத்தையும் நீதிதன்மையையும் அளக்கும் அளவுகோல் எது? அல்லது எந்த கிரியையின் அடிப்படையில் ஒருவரை துன்மாக்கன் என்றும் ஒருவரை நீதிமான் என்றும் நாம் தீர்க்க முடியும்?
பாவம் செய்யாத மனுஷன் யாரும் உலகில் இல்லை/ நல்லவன் ஒருவனும் இல்லை நீதிமான் ஒருவனும் இல்லை என்று விவிலியமே சொல்கிறது.
லூக்கா 18:19அதற்கு இயேசு:...... தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும்இல்லையே.
சங்கீதம் 53:3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும்இல்லை. ரோமர் 3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும்இல்லை; இவ்வாறு தெளிவாக சொல்லும் அதே விவிலியமே சிலரை நல்லவர்கள் நீதிமான்கள் என்றும்
"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
உலகத்தின் பொதுவான பார்வையில் துன்மார்க்கனையும் நீதிமானையும் பிரிக்கும் ஒரே அளவுகோல் என்று நான் கருதுவது "இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுதலே"
ரோமர் 3:24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
"இயேசுவை தாங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவங்கள் கழுவப்பட்டு நீதிமான்கள்எனப்படுவர் "
"இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் பாவத்தில் வாழும் மக்கள் என்னதான் சன்மார்க்கமாக நடந்தாலும் அவர்கள்உள்ளியல்பில் துன்மார்க்கரே "
உலக நிலையை பொறுத்தவரை இந்த இரண்டு பெரும் பிரிவுகளே துன்மார்க்கனையும் நீதிமானையும் பிரிக்கும் அளவுகள். ஆனால் இவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு நீதிமானாகும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது சுலபமானது அல்ல!
I பேதுரு 4:18நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
எனவே அடுத்து ஆவிக்குரிய உலகத்தில் துன்மார்க்கனையும் நீதிமானையும் அளக்கும் அளவுகோல் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பவேண்டியுள்ளது.
பவுலின் நிரூபங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட சபைகளுக்கு எழுதப்பட்டது அதுபோல் வெளிப்படுத்தின விசேஷமும் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்காகே சொல்லப்பட்டது.எனவே ஆவிக்குரிய உலகில் ஆராய்ந்தால் யார் யார் "இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலில் பங்கடைவார்கள்" என்று வேதம் குறிப்பிடுகிறதோ அவர்களும், "தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாதார்கள்" என்று வசனம் யார் யாரை சொல்கிறதோ அவர்கள் எல்லோரும் துன்மார்க்கர் என்று எடுத்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.
வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம்மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.