இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
Permalink  
 


"துன்மாக்கன்"  "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
 

விவிலியத்தில் துன்மாக்கன் மற்றும் நீதிமான்கள் குறித்து அதிக இடங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த துன்மாக்கத்தையும் நீதிதன்மையையும் அளக்கும் அளவுகோல் எது?  அல்லது எந்த கிரியையின் அடிப்படையில் ஒருவரை துன்மாக்கன் என்றும் ஒருவரை நீதிமான் என்றும் நாம் தீர்க்க முடியும்?

பாவம் செய்யாத மனுஷன் யாரும் உலகில் இல்லை/ நல்லவன் ஒருவனும் இல்லை நீதிமான் ஒருவனும் இல்லை  என்று விவிலியமே சொல்கிறது.

லூக்கா 18:19 அதற்கு இயேசு:...... தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
சங்கீதம் 53:3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லைஒருவனாகிலும் இல்லை.
ரோமர் 3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
 
இவ்வாறு தெளிவாக சொல்லும் அதே விவிலியமே  சிலரை நல்லவர்கள் நீதிமான்கள் என்றும் 
சொல்கிறது.
 
(ஆபேலை குறித்து)  நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் மத் 23:35
 
(பர்னபாவை குறித்து) அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான் அப் 11:24
 
எனவே, ஒருவர் நல்லவர் அல்லது நீதிமான் என்பதை 
எப்படி எதன் அடிப்படையில் நாம் அளவிட முடியும்?
 
பதில் தெரிந்த  அருமை சகோதர சகோதரிகள் வசன அடிப்படையில் விளக்கம் தரவும்.  


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: "துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
Permalink  
 


Nesan wrote:

"துன்மாக்கன்"  "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது? 

 

உலகத்தின் பொதுவான பார்வையில் துன்மார்க்கனையும் நீதிமானையும் பிரிக்கும் ஒரே அளவுகோல் என்று நான் கருதுவது "இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுதலே"

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

"இயேசுவை தாங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவங்கள் கழுவப்பட்டு நீதிமான்கள் எனப்படுவர் "

"இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் பாவத்தில் வாழும் மக்கள் என்னதான் சன்மார்க்கமாக நடந்தாலும் அவர்கள் உள்ளியல்பில் துன்மார்க்கரே "

உலக நிலையை பொறுத்தவரை இந்த இரண்டு பெரும் பிரிவுகளே துன்மார்க்கனையும் நீதிமானையும் பிரிக்கும் அளவுகள். ஆனால் இவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு நீதிமானாகும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது சுலபமானது அல்ல!

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

எனவே அடுத்து ஆவிக்குரிய உலகத்தில் துன்மார்க்கனையும் நீதிமானையும் அளக்கும் அளவுகோல் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பவேண்டியுள்ளது.

பவுலின் நிரூபங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட சபைகளுக்கு எழுதப்பட்டது அதுபோல் வெளிப்படுத்தின விசேஷமும் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்காகே சொல்லப்பட்டது. எனவே ஆவிக்குரிய உலகில் ஆராய்ந்தால் யார் யார் "இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலில் பங்கடைவார்கள்" என்று வேதம் குறிப்பிடுகிறதோ அவர்களும், "தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாதார்கள்" என்று வசனம் யார் யாரை சொல்கிறதோ அவர்கள்  எல்லோரும் துன்மார்க்கர் என்று எடுத்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

 
I கொரி 6:9 அநியாயக்காரர் தேவனுடைய  ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,(10) திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

கலாத்தியர் 5:19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே இங்கே பட்டியலிடப்பட்டுள்ள பாவங்களை ஆராய்ந்து பார்த்து அவரவர் தங்களை சுயப்பரிசோதனை செய்து கொள்ளக்கடவர்கள்!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard