இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொல்லாப்பு செய்ய துணிகரம் கொள்ளும் மனிதன்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பொல்லாப்பு செய்ய துணிகரம் கொள்ளும் மனிதன்.
Permalink  
 


மனிதனானவன் பொல்லாப்பு செய்வதற்கு ஒரு 
காரணமாக விவிலியம் இவ்வாறு கூறுகிறது.
 
பிரசங்கி 8:11 துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை  
சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
 
துர்கிரியை செய்தவனுக்கு தண்டனையானது  உடனடியாக  கிடப்பது இல்லை எனவே மனிதன் துணிந்து கெட்ட கிரியைகளை நடப்பிக்கிறான்.
 
இது ஒரு சரியான வசனம்தான் என்றாலும் தீமை அல்லது கெட்ட கிரியை செய்தவனுக்கு இறைவன் உடனுக்குடன் தண்டனையை கொடுத்தால் அந்த தீமை செய்தவன் அடுத்து ஒரு பொல்லாப்பு செய்ய நிச்சயம் பயப்படுவான் அல்லவா? ஆனால் இன்றோ ஒருவருக்கு  உலகில் நடப்பது ஓன்றுமே புரிவது  இல்லை. பாவம் செய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் காலம் தாமதாமவதால் அவனுக்கு தண்டனை கிடைக்கும்போது அது எந்த 
பாவத்துக்கு தண்டனை என்று அறிய முடியாமல் போவதோடு அவன் திருந்தவும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
 
ஆதாம்,  கோராகு,  ஆகாப், மோசே, ஆகான், தாவீது  இன்னும் பல விவிலிய மனிதர்களுக்கு
அவர்கள் செய்த பாவங்கள் உடனடியாக விசாரிக்கபட்டு தண்டிக்கபட்டது அதனால்
மற்றவர்களுக்கு ஒரு பயம் வந்தது  ஆனால் இன்றோ அப்படி நடப்பதில்லை.    
 
உலகில் உள்ள நீதிபதிகளுக்கு யார் உண்மையான குற்றவாளி என்று தெரிவதில்லை எனவே அவர்கள் பல சாட்சிகளை விசாரித்து உண்மையை கண்டறிய வருட கணக்கில் ஆகிவிடுகிறது அதனால் குற்றவாளி தண்டிக்கப்படுவது அரிதாகிறது குற்றவாளியும் எளிதில் தப்பிவிடுகிறார்கள். 
 
அனால் இறைவனோ  எல்லா உண்மையும்  அறிந்தவர் அவர் உடனுக்குடன் தீர்ப்பு கொடுத்து
எச்சரித்து காரியத்தை முடிக்காமல், பொல்லாப்பு
செய்பவர்களை எல்லாம் முடிந்தவரை செய்ய வைத்து அவர்களை அனுமதித்து இறுதி ஒரு நாளில் நியாயம்  தீர்ப்பேன் என்று சொல்ல காரணம் என்ன?
 
வெளி 22:11 நியாயஞ்செய்கிறவன் இன்னும் நியாயஞ்செய்யட்டும்சுத்தமாயிருக்கிறவன் இன்னும் சுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும்நீதிசெய்யட்டும்; பரிசுத்த
முள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
 
இறைவனிடம் நீர் ஏன் இப்படி செய்கிறீர் என்று நாம் கேள்வி கேட்கமுடியாது ஆகினும் என் மனதில் எழுந்த கேள்வியை இங்கு பதிவிடுகிறேன்.  


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இன்று  உலகில் கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் என்று எங்கு பார்த்தாலும் சுயநலமும் மாம்ச இச்சைகளும் மேலோங்கி  இருக்கிறது. எந்த தவறு செய்தாலும் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமும் பெருகிவிட்டதாலேயே தவறு செய்ய பலர் துணிந்து விட்டார்கள். மேலிடத்தில் இருந்து கீழ்டம் வரை லஞ்சம் ஊழல் பெருத்துபோய் விட்டது.  

லஞ்சம் வாங்கிய எத்தனையோ பெரிய ஆதிகாரிகள் பிடிபடுவதும் முகத்தில் துணியை மூடிக்கொண்டு போவதையும் நான் பார்க்கிறோம் ஆனால் எந்த இடத்திலும் லஞ்சம் வாங்குவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. மேலிருந்து கீழ்வரை பெரியவரில் இருந்து சிறியவர்கள் வரை யார் எதை நமக்கு தருவார்கள்? எங்கு பணத்தை  அள்ளலாம் என்று ஏக்கத்தில்  அலைகிறார்கள்.  துணிகரமாக தாங்கள் செய்வதை தொடர்ந்து செய்கிறார்களே.   
  
அதுபோல் மதுவினால் வரும் தீமை புகையிலையினால் வரும் தீமைகள் எல்லாம் எத்தனை விதமாக பகிரங்கபடுத்தபட்டும் மது விற்ப்பனையோ புகையிலை விற்ப்பனையோ எங்கும் குறைந்ததுபோல் இல்லை. சாவை  பற்றியோ பின்னால் வரப்போகும் துன்பத்தை பற்றியோ யாரும் கவலைப்பட்டதுபோலும் தெரியவில்லை.
இந்த துணிச்சலை  எப்படி எடுத்துகொள்ள என்பதும் புரியவில்லை. "வரட்டும் பார்த்துகொள்ளலாம்" என்ற துணிச்சலா அல்லது "என்ன துன்பம் வந்தாலும் இந்த மதுவிலுள்ள அல்லது புகையிலையில் உள்ள இன்பத்தை என்னால் புரங்கனிக்க முடியாது" என்ற ஆவேசமா புரியவில்லை. 

இப்படி  கண்கூடாக பலர் அனுபவிக்கும் துன்பத்தை நேரடியாக பார்த்தும்கூட திருந்த மனதில்லாத ஆயிரம் ஆயிரம் பேர் இந்த உலகில் இருக்கும்போது கண்ணுக்கு தெரியாத மரணத்துக்கு பின்னால் வரும் தண்டனையை குறித்து சொன்னால் எங்கே கேட்க போகிறார்கள்? 

நீதிமொழிகள் 24:20 துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோ
சங்கீதம் 32:10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; 
ஏசாயா 3:11 துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
சங்கீதம் 37:38 அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
இவ்வாறு விவிலிய வசனங்கள் எச்சரிக்கும் நிலையில் அவனனவன் துணிகரத்துக்கு அவ்வப்பொழுது பிரதிபலன் கிடைத்தால் அநேகர் திருந்த வாய்ப்புண்டு என்றே நான் கருதுகிறேன்.   


-- Edited by Nesan on Tuesday 4th of September 2012 03:17:45 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard