தேவனின் ஆவியானவர் எப்பொழுதும் நம்மில் வாசமாயிருக்கிறார்! எனவே எந்த நேரத்திலும் ஆவியில் நிறைந்து அனலாய் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமே. ஆவியில் நிறைவதற்கு நேரம் காலம் எதுவும் இல்லை சகோதரரே.
.
எங்கு எப்பொழுது எத்தனை நிமிட நேரம் நமக்கு கிடைத்தாலும் அந்த நேரத்தில் ஆவியில் நிறைந்து நம்மை அனல்மூட்டி கொள்வது அவசியமானது. நாள் முழுவதும் தேவன் நம்மை ஆவியில் நிறைந்து நடக்க வைப்பாராகில் அது எவ்வளவு மேன்மையாக இருக்கும்?
.
எனவே நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபிப்பது நம்மை ஆவியில் நடக்க பழக்குவிக்க வேண்டும் அதுவே நமது மாம்சத்தின் கிரியைகளை அழிக்கும். நம்மை தேவனின் பக்கம் கிட்டி சேர்க்கும் நம்மை ஆக்கினை தீர்ப்புக்கு தப்புவிக்கும்.