இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமண தடை
sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
திருமண தடை
Permalink  
 


நான் கடந்த பத்து வருடங்களாக எனது இரண்டு சகோதரிகளின் திருமணதுக்காக செபித்துவருகிறேன்
திருமணம் நடந்த பாடில்லை அவர்களின் வயது 40  41 ஆகிவிட்து  என்ன காரணம் ?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: திருமணம்
Permalink  
 


திருமண காரியத்துக்காக ஜெபிப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு நான் வரவில்லை. ஆனால் அதற்காக நீங்கள் எந்த மாதிரி முயற்சி எடுத்துள்ளீர்கள் என்பது முக்கியம்.

முதலாவதாக திருமண வரன் தேவசித்தப்படி அமைந்தால் போதும் என்ற எண்ணம் வேண்டும்.

இரண்டாவதாக திருமண வரனின் கல்வித் தகுதி, வேலைத் தகுதி, ஜாதி, அந்தஸ்து, புறத்தோற்றம் போன்றவற்றில் நிபந்தனை விதிக்காமல், கூடியவரை தேவபக்தியும் ஒழுக்கமும் பண்பும் உள்ளவரா என்பதை மட்டும் பார்க்கவேண்டும்.

ஒருவேளை திருமணம் கூடாது என்பது தேவசித்தமாக இருந்தால், அதை முறுமுறுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 



 சகோதரர் அன்பு சொல்வது மிக சரி  "குதிரையோ யுத்த நாளுக்கு ஆயத்தமாகும் ஜெயமோ கர்த்தரால் வரும் " நீங்க தேவ சித்தம் என்ன வென்று தேவனிடத்தில் தியானியுங்கள் நம் கர்த்தர் ஈசாக்குக்கு ஒரு ரெபெக்காளை முன் குறித்து அதை எப்படி அவன் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்தார் அல்லவா , அதேபோல் உங்களுக்கும் ஆலோசனை தருவார் அவர் நேற்றும், இன்றும் , என்றும் மாறாதவர். ஆணடவருடைய சித்தத்தை அறிந்து இன்னும் துரிதமா செயல்படுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு கூட இருப்பார்.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

sar wrote:

நான் கடந்த பத்து வருடங்களாக எனது இரண்டு சகோதரிகளின் திருமணதுக்காக செபித்துவருகிறேன்
திருமணம் நடந்த பாடில்லை அவர்களின் வயது 40  41 ஆகிவிட்து  என்ன காரணம் ?


சகோதரரின் இந்த பதிவை பார்க்கும் போது  என்னுடய மனது மிகவும் வேதனை அடைகிறது. என்  கண்கள்  காண அனேக சகோதரிமார்கள்  சரியான வரன் அமையாமல் தாங்கள் இளமை வாழ்வை  தொலைத்து நிறைப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. 

பிரச்சனையில் வாடும் எந்த மனுஷனுக்கும் ஆறுதல் சொல்வது என்பது இலகுவான காரியம் ஆனால் அதுபோன்ற நிலைமை நமது வாழ்வில் கடந்து வந்தால்தான் அதன் உண்மை  வேதனை புரியும்.

ஆதாமுக்கு ஒருஏவாளை இறைவன் உண்டாக்கியது போல் உங்கள் சகோதரிமார்களுக்கும் ஆதாம்கள்  எங்காவது இருப்பார்கள். அவர்களை அடையாளம் காணும்படி கண்கள் திறக்கப்பட உங்களுடைய சகோதரிமார்களின் திருமணம் கைகூடிவர இறைவன் தாமே இடைபட்டு காரியங்களை நடப்பிக்கும்படி  மற்றாடுவோம்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

திருமண  தடை பற்றிய இந்த திரியில் நான் என்னுடய ஆலோசனையையும் சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன்.
 
பொதுவாக ஏதாவது  விரும்ப தகாத காரியம் ஓன்று நடக்குமானால் அல்லது நடந்துகொண்டு இருக்குமானால் அந்த காரியத்தால் யார் யாருக்கு எவ்வளவு பாதிப்பு, அல்லது யார் யாருக்கு எவ்வளவு மன வருத்தம் என்பதன் அடிப்படையிலேயே தேவனின் காரியங்கள் தீர்மானிக்கப்படும். எங்கு  அடித்தால் யாரை திருத்த முடியும் என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும்.  தாவீதின் காரியத்தில் தேவனின் செயல்பாட்டை வைத்து இந்த உண்மையை நாம் அறியலாம். 
 
அதாவது நமக்கு மன கஷ்டத்தை கொடுக்கும் காரியம் ஓன்று நடந்தால் அதில் நம்முடய பங்கு அல்லது நம்முடைய தவறும் அங்கு  நிச்சயம் இருக்கிறது.
 
உதாரணமாக நமக்கு திருமணமாகாத மூத்த சகோதரி ஒருவர் இருப்பார் என்றால் அவர் திருமணத்துக்கு பின்னர்தான் நாம் திருமணம் செய்துகொள்வது என்பது ஒழுங்கு. இந்நிலையில் நமது மூத்த சகோதரிககு திருமணம் நடக்கவில்லை என்றால் அதில் முதல் பாதிப்பு அந்த சகோதரி  மற்றும் அவரது தாய் தந்தையர்  என்றாலும், அடுத்து முக்கியமாக பாதிக்கப்படுவது நாம் தான்
எனவே நம்மிடம் ஏதோ தவறு இருப்பதால்தான் நமக்கு மனகஷ்டத்தை கொடுக்கும் இந்த காரியம் நடக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
 
மற்ற யாரையும் குறைசொல்வதைவிட நமது தவறை  ஆராய்ந்தறிந்து களைய முற்படுவது மிக அவசியம்!
  
எனவே எனது ஆலோசனை என்னவெனில், தேவனிடம் வெறுமனே "என் சகோதரிககு வரன் அமைய வழி செய்யுங்கள்" என்று ஜெபிப்பைதைவிட, "ஆண்டவரே என் சகோதரிககு திருமணம் நடக்காத காரணத்தால் அதிகமாக நான் மன கஷ்டத்துக்கும் உள்ளாகிறேன். எனக்குவரும் மன கஷ்டங்களுக்கும்
நான்தான் காரணம்.  என்னிடம் உள்ள தவறு என்னவென்பதை 
சுட்டிகாடினால் என்னை நான் திருத்திக் கொள்ள வாஞ்சிக்கிறேன். 
என்னை நினைத்தருளும் என்னுடய தவறுகளை எனக்கு தெரியப்படுத்தும், எனக்கு நிரந்தரமாக இருக்கும் இந்த் மன வேதனை நீங்க வழி சொல்லும் என்று சொல்லி ஆண்டவரிடம் மன்றாடி ஜெபியுங்கள்.
 
வேத வெளிச்சத்தில் உங்களை நீங்களே நன்றாக ஆராய்ந்து பார்த்து "பொல்லாங்காய் தோன்றும் எல்லாவற்றிலும் இருந்து விலகுங்கள்" நிச்சயம் தங்களது மன விருப்பம் நிறைவேறும்.
 
கர்த்தர் தாங்கள் மன விருப்பத்துக்கு ஏற்றபடியே செய்வாராக!

 



-- Edited by SUNDAR on Friday 20th of July 2012 03:31:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே!!


இரக்கமும்,மனதுருக்கமும்,நீடிய சாந்தமும்,மிகுந்த கிருபையும் உள்ள நம் அன்பு தேவன் தங்களுக்கு அற்புதம் செய்வார்.. கலக்கத்தை விடுத்தது தேவ சாமாதன பாதரட்சையை தொடுத்து கர்த்தருக்கு சற்று காத்திருங்கள்.. தம் பிள்ளைகளுக்கு கற்களை அவர் தருபவர் அல்ல!!!
கர்த்தர் தாமே முன் நின்று சகலதையும் செய்துமுடிப்பார் என்று என் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் தங்களிடம் காரியத்தை தெரியபடுத்துகிறேன்..

I கொரிந்தியர் 11:23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன் ..


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

எரேமியா 8:11 சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி,என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். 
எரேமியா 23:14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும்
திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்;............. ....ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின்  கைகளைத் திடப்படுத்துகிறார்கள்;
 
"சமாதானம் பண்ணுவது பாக்கியமானது என்றும், தேவன்பேரில் விசுவாசத்துடன் பொறுமையாக இருப்பது நல்லது" என்பதையும் நான் மறுக்கவில்லை ஆகினும் தேவன் நம்முடைய ஜெபத்தை கேட்கும்படிக்கு நம்மிடம் பரிசுத்தத் குறைவு ஏதாகிலும் உண்டா என்பதையும் நாம் அராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில்: 
.
ஏசாயா 59:2 உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

என்பது தேவனில் ஆதங்கமான நேரடி வார்த்தை. நம்மிடம் தேவனுக்கு விருப்பமில்லாத காரியங்கள்
இருக்கும்வரை தேவன் நம்முடைய சத்தத்துக்கு
செவிகொடுப்பதில்லை. 
.
அன்று யோசுவாவிடம் கூட அதைதான் சொன்னார். ஆகான் என்ற ஒருவன் செய்த காரியத்தால் உண்டான சாபதீட்டை எல்லோரும் சேர்ந்து நீர்க்கும்வரை இஸ்ரவேலர் ஆயி மனுஷருக்கு முன்னால் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது.
அங்கு பொறுமையோடு கர்த்தர் சமூகத்தில் வீழ்ந்துகிடந்த யோசுவாவை பார்த்து கர்த்தர் சொல்கிறார்:
.
யோசுவா 7  10. அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?
 நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.  என்றார்  

அதுபோல் நம்மிடமுள்ள தீட்டான காரியங்களை தேவ சமூகத்தில் ஆராய்ந்து அகற்றுவது அவசியம்! 
ஒருபுறம் பொறுமையோடு காத்திருப்பது அவசியம் என்றாலும் இன்னொருபுறம் நம்மில் ஏதாகிலும் அழுக்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிந்து நீக்க முயல்வதும் மிக மிக
அவசியம்!  
 


-- Edited by SUNDAR on Saturday 21st of July 2012 04:06:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே..


இந்த காரியத்தை விவாத பொருளாக்க நான் விரும்பவில்லை.. ஆனாலும் விவாத பொருளாகிவிட்டது வருத்தம்..

சகோ.சுந்தர் அவர்கள் குறிபிட்டபடி சுயபரிசோதனை செய்வது ஓவ்வொருவருக்கும் தேவசமூகத்தை பெறுகிற விஷயத்தில் அவசியம் தான்..
ஆனால் சுய பரிசோதனை செய்த பின் தான் தேவன் இரக்கம் செய்வாரா என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தேவ இரக்கம், அங்கு அப்படி ஆகவே இங்கு இப்படி தான் வரும் என்பதான கணித முறைப்படி அனைவருக்கும் கிடைபதல்ல..
தேவ இரக்கம் நம் போன்ற போல்லாதவர்களுக்குமானது தான்!!!!

இஸ்ரவேலின் பழமொழி வைத்தியனே உன்னை நீயே குணமாக்கி கொள் என்பதாக வேதத்தில் உள்ளது..அப்படியானால் நோயாளி எங்கே போவான்.. பரம வைத்தியநிடத்தில் தானே..புரிகிறவர்களுக்கு புரியட்டும்..

இயேசுவானவர் குணமாகின/அற்புதம் செய்த சம்பவங்களுக்கு எந்த மனிதனின் சுய பரிசோதனையும் தேவையாக கருதப்படவில்லை..
அற்புதம் செய்தபின் தான் 'கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே' என இயேசுவானவர் கூறுவதாக வேதம் கூறுகிறது..

யோவான் 5:14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

குறை என்பது தவறுகளால் மாத்திரம் வரும் காரியமா!!  ,தேவமகிமைக்காகவும் தான் சிலருக்கு குறை ஏற்படுகிறது!!! சகோ.சுந்தர் அறிந்திருப்பீர்களே!!

யோவான் 11:4 இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.

யோவான்

9 அதிகாரம்


2. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

20 -25  வருடங்களுக்கு மேலாக ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கும் சகோ.SAR  குடும்பத்திற்கு முதலில் தேவை தேவஇரக்கம்...
38 வருட நோயாளிக்கு கர்த்தர் செய்ததை அறிவீர்களே!!!  நசல் கொண்டதை திடபடுத்துகிறவரான தேவன் தாமே சென்று குனமாக்கினாரே  அல்லாமல் வியாதிஎஸ்தனை கண்டு நீ 38 வருடமாய் சுயபரிசோதனை செய்யவில்லை ஆகவே இவ்வருடமும் உனக்கு சுகம் இல்லை என கூறிவிடவில்லை.. 

தேவனின் அற்புதத்திற்கு தேவைபடுவதெல்லாம் அவரை நம்பும் விசுவாசம்... 
அந்த விசுவாசத்தை கொண்டே சகோதரரின் காரியத்திற்காக ஜெபித்து பதிலை பதிந்தேன். அது மேற்பூச்சான குணமாக்கலா என்பதை பரம தகப்பன் விரைவில்  அறிய தருவார்.
ஸ்திரிகள் வாழ்க்கைபடாமல் போகிற காரியத்தை  தனியே வசன அடிப்படையில் விவாதிப்போம்...

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...  


-- Edited by JOHN12 on Monday 23rd of July 2012 01:28:17 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

 சகோ.சுந்தர் அவர்கள் குறிபிட்டபடி சுயபரிசோதனை செய்வது ஓவ்வொருவருக்கும் தேவசமூகத்தை பெறுகிற விஷயத்தில் அவசியம் தான்..

ஆனால் சுய பரிசோதனை செய்த பின் தான் தேவன் இரக்கம் செய்வாரா என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தேவ இரக்கம், அங்கு அப்படி ஆகவே இங்கு இப்படி தான் வரும் என்பதான கணித முறைப்படி அனைவருக்கும் கிடைபதல்ல..
தேவ இரக்கம் நம் போன்ற போல்லாதவர்களுக்குமானது தான்!!!!
 

 

சகோ  ஜான்12 அவரகளே,  இயேசுவை முதல் முறையாக அறிபவர்களுக்கும்,வேதவசனங்களை சரிவர அறியாதவர்
களுக்கு வேண்டுமானால் தாங்கள் சொல்லும் காரியங்கள் பொருந்த  வாய்ப்பிருக்கிறது. தேவனின் ஈவை ருசிபார்த்து ரட்சிப்பின் அனுபவத்துக்குள் கடந்து வந்து வேத வசனங்களின் வல்லமையை  புரிந்தவர்களுக்கு  மீண்டும் மீண்டும் "தேவன் அற்ப்புதம் செய்வார்" என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்றதுபோல் எனக்கு
தெரியவில்லை.
அவர்களுக்கு இயேசுவின்  வார்த்தையெல்லாம்,  தாங்கள குறிப்பிட்ட:   யோவான் 5:14  அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். என்பதுதான். 
 
அங்கு இயேசுவை அறிந்து அவரால் அற்ப்புத சுகமாக்கபட்ட அந்த நபர், மீண்டும் பாவம் செய்தால் இயேசுவின் வார்த்தைகள்படி அதிக கேடு வருவது நிச்சயமே!
  
அதுபோல் இயேசுவை அறியாதவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்
போது "இயேசு அற்ப்புதம் செய்வார்" என்று பிரசங்கிப்பது தகும்! ஆனால் இயேசுவை அறிந்த தேவ பிள்ளைகளுக்கு மீண்டும் அற்ப்புத அதிசயத்தை
போதிக்காமல், அவர்கள் நியாயம்  தீர்க்கப்படாதபடிக்கு அவர்களை அவர்களே நிதானித்து அறிய போதிப்பதுதான் சிறந்தது.
 
I கொரி 11:31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 
 
தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் தேவன் பல இடங்களில் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த காரியங்களை நடப்பித்தது உண்மையே! அதே போல் "தேவன் நமக்கு செவிகொடுக்க முடியாதபடிக்கு நமது பாவங்கள் தடையாக இருக்கிறது" என்பதும் உண்மையே. எனவே ஒரே பக்கமாக ஆலோசனை சொல்லாமல் இரண்டையும் சமபடுத்தி ஆலோசனை சொல்வதில் தவறு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.  அதில் தங்களுக்கு என்ன ஆட்சேபனை என்பது எனக்கு புரியவில்லை.  
 
தாங்கள் தேவனிடம் ஜெபித்து கேட்டு பதில் எழுதியிருந்தால் அதற்க்கு மாற்று கருத்து சொல்வதற்கு நாம் எம்மாத்திரம். தேவன் தமது சித்தப்படியே நன்மையானதை செய்வாராக!  
   


-- Edited by SUNDAR on Monday 23rd of July 2012 03:16:44 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

anbu57 ,I am Follower of Jesus,Nesan ,SUNDAR,எனக்கு பதில் அளித்த ,அறுதல் அளித்த , பொறுமையுடனும் ,மிகுந்த பாரத்துடன் செபித்த அணைவருக்கும் எனது நன்றி .அத்துடன் கத்தரிடம் செபித்து பதில் தந்த சகோ JOHN12 அவர்களுக்கும் எனது நன்றி தேவன் தங்களுக்கு சொன்ன படி செய்வார் என நம்புகிறேன் .



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard