ஒரு அருமை சகோதரர் என்னை போனில் தொடர்பு கொண்டு "ஜெபத்தால் எல்லாம் கூடுமா?" என்ற கேள்வியை முன் வைத்தார்.
"ஜெபமே ஜெயம்" என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விபட்ட நான் அப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இருக்கிறது என்றே நீண்டநாள் எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் பைபிளை முழுவதுமாக படித்து முடித்தபோது அப்படி ஒரு வசனம் எங்கும் இல்லை என்பதையும் அது மனுஷர்களின் போதனை என்றும் அறிந்துகொண்டேன்.
தேவனோடு ஒன்றி நடக்கவும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்கவும் பரிசுத்த வாழ்வில் நிலைத்து நிற்கவும் ஜெபம் மிக மிக அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவேதான் பவுல் நமக்கு கீழ்கண்ட ஆலோசனையை தந்துள்ளார்.
ஏசாயா 1:15நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
எனவே ஒரு மனுஷனின் ஜெபம் தேவனால் அங்கீகரிக்கப்பட தேவன் எதிர்பார்க்கும் ஒரு தகுதி அவசியம் என்று நான் கருதுகிறேன்!
இந்த தலைப்பு குறித்த கருத்துக்களை சகோதரர்கள் அறிய தரலாம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனவே ஒரு மனுஷனின் ஜெபம் தேவனால் அங்கீகரிக்கப்பட தேவன் எதிர்பார்க்கும் ஒரு தகுதி அவசியம் என்று நான் கருதுகிறேன்!
இந்த தலைப்பு குறித்த கருத்துக்களை சகோதரர்கள் அறிய தரலாம்
1. தழ்மை
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். ( II நாளா 7:14)
அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார் (II நாளா 33:13 )
2 பாவ அறிக்கை
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம் (நெகே 1:6 )
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.(தானி 9:20)
3. அவருடைய நாமத்துக்கு பயப்படும் போது
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.(நெகே 1:11)
4. செம்மையா நடக்கும் போது துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். (நீதி 15:8)
5. பிறர் குறையை மன்னிக்கும்போது நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். (மாற் 11:25 )
6 தருமம் / உதவி செய்யும் போது அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. (அப்போ 10:4 )
கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. (அப்போ 10:31)
எப்படிபட்ட பிரார்த்தனைகள் ஆண்டவரால் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை ஏற்ற வசன ஆதாரங்களுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
யோவான் 9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
மற்றபடி ஆண்டவருக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் என்னாதான் சத்தம்போட்டு கத்தினாலும் அவர் செவி கொடுப்பதில்லை.
எசே 8:18அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.
மேலும் யாருக்கு எதை எப்பொழுது கொடுத்தால் நல்லது என்பதை தீர்மானித்தே
ஆண்டவர் பதில் தருவார்.
ஒருவன் பைக் ஓன்று வேண்டும் என்றும் பிடிவாதமாக பிரார்த்தனை செய்தால்கூட அந்த பைக்கால் அவனுக்கு ஏதாவது மோசம் வரும் என்ற நிலை இருந்தால் அங்கு தேவன் செவி கொடுக்கமாட்டார். நமது தகப்பன் நமது நன்மையை கருத்தில் கொண்டே எதையும் செய்வார்
எனவே எனது கருத்து என்னவெனில் நமது ஜெபத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட
முடியாது என்பதே. அங்கு இறைவனின் சித்தமும் ஒத்துபோக வேண்டும்.