எனினும் தாங்கள் கேட்டுள்ள "என் வினை என்னை சுட்டது" என்ற கருத்தை உண்மையாக்கி காட்டிய ஒரு மனுஷனின் அனுபவத்தை நான் வேதத்தில் இருந்து சுட்ட விரும்புகிறேன்.
அந்த மனுஷன் பெயர் "ஆமான்" எஸ்த்தர் புத்தகத்தில் வரும் அவனை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
ராஜா தன்னை மேலானவனாக உயர்த்தியும் தனக்கு யூதனான மொர்தெகாய் மரியாதை செலுத்தவில்லை என்ற ஆத்திரத்தில், தன் மனைவியின் ஆலோசனைப்படி ஆமான் 50முழ உயர தூக்கு மரத்தை செய்வித்து அதில் மொர்தெகாய்யை தூக்கில் போட நினைத்தான்.
எஸ்தர் 5:14அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
இங்கு ஆமானின் தீவினையால் மொர்தெகாய்க்கு தூக்குமரம் செய்யப்படுகிறது.
ஆனால் அதே தீவினை அவன் மேலேயே திருப்பபட்டு, தான் செய்வித்த அதே தூக்குமரத்தில் அவனே தூக்குபோடபட்டான்.
எஸ்தர் 7:9அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்;அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.