எனது பெயர் டினேஷ் . இலங்கையில் மட்டக்களப்பில் வசிக்கிறேன் .நான் ஒரு கிராம ஊழியத்தை ஆரம்பித்து ஒரு பிரபல சபையின் கீழ் நடத்தி வருகிறேன். எனக்கு வேதாஹமத்தில் தெரியாத நிறைய விடயங்கள் உண்டு.நான் ஊழியம் செய்ய எந்த தகுதியும் இல்லாதவன். ஆனால் கர்த்தரின் சுத்த கிருபையால் எனக்கு தெரிந்ததை வைத்து ஊழியம் செய்து வருகிறேன். எனது குட்டி சபையில் அன்றன்றைக்கு கர்த்தர் பேசும் வார்த்தைகளை வைத்து பிரசங்கங்களை செய்கிறேன் . யாராவது குறுக்கு கேள்விகள் கேட்டால் தடுமாறி விடுவேன். நான் வேதாகமத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவன். வேதாகம பாடசாலை செல்லும் வாய்ப்பும் இங்கு இல்லை . உங்களுடைய இந்த விலைமதிப்பற்ற தளத்தை சில நாட்களாக படித்து வருகிறேன். நானும் உங்களுடன் இணைய விரும்புகிறேன்.. எனக்கு பைபிள் இல் நிறைய கேள்விகள் உண்டு. தயவு செய்து உதவுவீர்களா?
எனது பெயர் டினேஷ் . இலங்கையில் மட்டக்களப்பில் வசிக்கிறேன் .நான் ஒரு கிராம ஊழியத்தை ஆரம்பித்து ஒரு பிரபல சபையின் கீழ் நடத்தி வருகிறேன். எனக்கு வேதாஹமத்தில் தெரியாத நிறைய விடயங்கள் உண்டு.நான் ஊழியம் செய்ய எந்த தகுதியும் இல்லாதவன். ஆனால் கர்த்தரின் சுத்த கிருபையால் எனக்கு தெரிந்ததை வைத்து ஊழியம் செய்து வருகிறேன். எனது குட்டி சபையில் அன்றன்றைக்கு கர்த்தர் பேசும் வார்த்தைகளை வைத்து பிரசங்கங்களை செய்கிறேன் .
தளத்திற்கு புதிதாக வருகை தந்திருக்கும் சகோ. தினேஷ் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.
நிங்களின் ஊழியம் மிகவும் பாரட்டபடகூடிய ஓன்று. அதற்க்கான பலனை இறைவன் நிச்சயம் அருளுவார்.
நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள்,உத்தமனுக்குக்கர்த்தர்துணை என்றான். II நாளா 19:11
இந்த தளத்தில் ஆண்டவர் பற்றிய நிறைய செய்திகள் எழுதப்பட்டுள்ளது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் போதிக்க முடியாது. ஒன்றாம் வகுப்பு பையனிடம் அல்ஜிப்ரா கணக்கை போதிக்க முடியாது அதுக்போல் தொடக்க நிலையில் இருக்கும் சில விசுவாசிகளுக்கு ஆழமான செய்தியைபோதிக்க கூடாது என்பது தங்களுக்கு தெரியும்.
.
இங்குள்ள பல செய்திகள் விவிலிய வசனங்களை ஆழமாக ஆராய விரும்பும் தேர்ந்த விசுவாசிகளுக்காக எழுதப்படுகிறது எனவே தங்களுக்கு தேவையான எந்த ஒரு கருத்தை இங்கிருந்து அறிந்துகொண்டாலும், யாருக்கு எதை போதிக்கவேண்டும் என்று பகுத்தரித்து போதிப்பது சிறந்தது.அதற்கேற்ற ஞானத்தை ஆண்டவர் தங்களுக்கு அதிகமான தருவாராக.