சகோதரர் சுந்தர் அவர்களே, இந்தத் திரி இன்னும் திறந்திருக்கிறதா? நான் ஒரு புதிய உறுப்பினன். இன்று தான் இந்த மன்றத்திற்கு முதல்முறையாக வந்திருக்கிறேன். கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்பதைக் குறித்து சில கருத்துக்களை வேதத்திலிருந்து நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நான்கு வருடங்களின் முன்பு இந்த திரியை ஆரம்பித்தது நானாக இருப்பினும், இக்கேள்விகளில் சிலதுக்கு இன்னும் பதில் பூரணமில்லை என்றாலும் “தேவன் நல்லவர்” என்பதிலும் “அவர் எல்லாம் நன்மைக்குதான் , நல்ல நோக்கத்தில்தான் செய்தார்” என்பதிலும் நான் திருப்தியடைகிறேன்.
தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. தேவன் தம்முடைய அன்பை பரிமாறிக் கொள்வதற்கு மனிதனைப் படத்திருப்பார் என்று தோன்றுகிறது. இயந்திரம் போல சுய விருப்பு வெறுப்புகள் இன்றி மனிதனை படைத்திருந்தால் அதனிடம் அன்பை செலுத்த முடியுமே தவிர அன்பை பெற முடியாது. தேவன் நம்முடன் அன்பை பரிமாறிக் கொள்ள விரும்புகிறார் என்று கருதுகிறேன். அதனால்தான் தம்மிடம் அன்பு கூரும் படியாக வேதத்தில் பல இடங்களில் கூறியுள்ளார். சுய விருப்பு வெறுப்பு உள்ள ஒரு வஸ்து விடமிருந்தே அதுவாக விரும்பி தரும் அன்பை பெற முடியும். அதனால்தான் நம்மை அப்படி படைத்தார்.
அன்பை நோக்கமாக கொண்டு படைக்கப்பட்ட நாமோ பிசாசின் வஞ்சனையால் வீழ்ந்து அந்த நிலையை இழந்தோம். நம்மிடமிருந்து தேவன் எதிர்பார்த்த அன்பை அவருக்கு நாம் செலுத்தவில்லை. ஆனாலும் நம்மால் பிரயோஜனம் இல்லை என்று தேவன் அப்படியே விட்டுவிடாமல் தன்னுடைய உயிரை கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு மேன்மையான நிலையை இழந்த நாம் பிசாசுக்காக ஆயத்தமாக்கப்பட்ட இடத்துக்கு போகவிருப்பதால் அதினின்று நம் விடுவிக்க உயிரை கொடுத்தது மட்டுமின்றி நாம் பரிசுத்த வாழ்வு வாழ வழிமுறைகளையும் எழுதி கொடுத்துள்ளார்..
பிரதர் தாங்கள் சொல்லும் கருத்தின் சாராம்சத்தின்படி பார்த்தால் "அன்பை" தன படைப்புகளிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தேவன் இத்தனை கொடுமைகளை உலகத்தில் அனுமதித்து நடத்திக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?
ஒரு பொருளை உருவாக்கும் அறிவியலார் அது சரியில்லை என்றால் அதில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அதன் பின்னர் அவைகளை நிவர்த்தி செய்து வேறு ஒரு பொருளை உண்டாக்குகிறார்கள்.
அதேபோல்
ஆதாம் ஏவாள் என்ற இருவர் மாத்திரம் பாவத்தில் வீழ்ந்தபோது அவர்கள் இருவரை மாத்திரம் அழித்துவிட்டு அவர்கள் பாவம் செய்த காரணத்தை கண்டறிந்து அதற்க்கு ஒரு எல்லை வைத்து வேறு புதிய ஜோடியை படைத்திருந்தால்.
சிறிய சிறிய கொலை கொள்ளை பாவ காரியங்களை விடுங்கள்
1. ஒரு உலகத்தையே சிறியவர் பெரியவர் என்று பாராமல் நீரினால் அழித்து அனைவரையும் துள்ள துடிக்க கொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காதே.
2. முதல் இரண்டாம் உலகப்போர் என்று எண்ணற்ற ஜனங்களை கொடூரமாக கொன்றோழிக்க வேண்டியது வந்திருக்காதே.
3. சமீபத்தில் இலங்கையில் நடந்த கொடூர இனஒழிப்பு நடக்க வாய்ப்பிருக்காதே.
4. என்னை அதிகம் பாதிக்கும் பிற ஜீவன்களின் வேதனைகள் - ஒரு தெரு நாய் -கொடிய சொரியுடன் ஆற்றி தேற்றுவார் இல்லாமல் தெருவில் அலையும் பாவத்தை பார்த்து நான் கண்கலங்க வேண்டிய நிலை வந்திருக்காது/ காட்டில் வாழும் ஒரு பாவமரியா விலங்குகள் ஒன்றை ஒற்று அடித்து உயிரோடு உரித்து திங்கும் அந்த கொடிய நிலைமை தொடர்ந்திருக்காது.
5. எல்லாவற்றிக்கும் மேலாக இறுதியில் ஒருகூடட ஜனங்கள் நித்திய அக்கினிக்கு போவார்கள் என்று வேறு பொதுவாக நம்பப்படும் நிலை இருக்கிறது.
"அன்பு" என்ற ஒன்றை தன படைப்புகளிடம் இருந்து பெறுவதற்கு தேவன் இதை எல்லாம் அனுமதித்துள்ளனர் என்று நாம நினைத்தால் அது எந்த விதத்தில் நியாயம் பிரதர். சற்று யோசியுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///////"அன்பு" என்ற ஒன்றை தன படைப்புகளிடம் இருந்து பெறுவதற்கு தேவன் இதை எல்லாம் அனுமதித்துள்ளனர் என்று நாம நினைத்தால் அது எந்த விதத்தில் நியாயம் பிரதர். சற்று யோசியுங்கள்./////
இப்படி நான் கூறவில்லையே அண்ணா... என்னுடைய கருத்தில் இல்லாததை வலிந்து எடுக்கிறீர்கள்... அன்பை பெறுவதற்காக தேவன் இவைகளை அனுமதித்தார் என்று நான் சொல்லவில்லையே? அன்பை பெறுவதற்காகவும் கொடுப்பதற்காகவும் நம்மைபடைத்தார்என்றுதான் சொன்னேன்.
அதற்காக படைக்கப்பட்ட நாம்தான் தவறிப்போனோம். என்றுதான் சொன்னேன். அப்படி தவறிப் போனபடியால் நாம் அவருக்கு அன்பை கொடுக்கவில்லை. இருப்பினும் அவர் நமக்கு அன்பை தருகிறார் என்றுதான் சொன்னேன்...
ஏன் படைத்தார்? என்று தொடர்ந்த திரியை , பாவத்தை அனுமதித்தாரா? என்ற கேள்வியின் கோணத்துக்கு திருப்புகிறீர்கள்.
நானே இன்னும் பூரண பதில் தெரியாமலிருக்கிறேன் என்று சொல்லுகிறேன். நீங்கள் இன்னும் கேள்விகளை கேட்கிறீர்களே அண்ணா?
உங்கள் கருத்து என்ன? நான் அறிய விரும்புகிறேன். உண்மையிலேயே தங்களுக்குள் தானியேல் போன்ற ஞானத்தை கர்த்தர் கொடுத்திருப்பதை அறிவேன் அதுதான் தங்களிடம் கேட்டேன்.
t dinesh Wrote... ///இப்படி நான் கூறவில்லையே அண்ணா... என்னுடைய கருத்தில் இல்லாததை வலிந்து எடுக்கிறீர்கள்... அன்பை பெறுவதற்காக தேவன்இவைகளை அனுமதித்தார் என்று நான் சொல்லவில்லையே? அன்பை பெறுவதற்காகவும் கொடுப்பதற்காகவும் நம்மைபடைத்தார்என்றுதான் சொன்னேன்///
///ஏன் படைத்தார்? என்று தொடர்ந்த திரியை , பாவத்தை அனுமதித்தாரா? என்ற கேள்வியின் கோணத்துக்கு திருப்புகிறீர்கள்.///
நான் சொல்ல வரும் கருத்தை தாங்கள் சரியாக புரியவில்லை என்று அறிய முடிகிறது பிரதர்.
நான் பாவத்தை அனுமதித்தது பற்றி எழுதவில்லை நான் பட்டியலிட்டுள்ள இவ்வளவு கொடுமைகளை உலகத்தில் அனுமதித்தார்? என்றே கேள்வி எழுப்பியுள்ளேன்.
அவர் அனுமதிக்காமலா நான் பட்டியலிடட கொடுமைகள் எல்லாம் நடந்தது.
அவர்தான் பூர்வ உலகத்தை அழித்துபோடடார் என்று வேதமே சொல்கிறதே அதைத்தான் நான் சொன்னேன்.
மேலும் நான் அறிந்த அனைத்தையும் இங்கு எழுத முடியாமைக்கு வருந்துகிறேன் பிரதர். அநேக எதிர்ப்புகள் எழுவது உறுதி. இங்குள்ள பல சகோதரர்களுக்கு அந்த உண்மையை விளக்கிச்சொல்லி பின்னர் தேவன் மூலம் அவர்களும் அனைத்து உண்மையையும் அறிந்துள்ளார்கள்.
தாங்கள் இங்கு இல்லை எனவே தேவனிடம் விசாரியுங்கள் தகுதியுள்ளவர்களுக்கு தேவன் நிச்சயம் விளக்கமளிப்பார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த திரியை தொடங்கியது நான் தான் என்றாலும் இன்னும் இன்னும் புதிய விடயங்களை இது தொடர்பாக விளங்கி கொண்டு வருகிறேன்.
தேவன் மனுக்குலத்தை படைத்ததற்கு பல நோக்கங்கள் இருப்பினும் இன்னும் இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்ததை நான் வேதத்தின் வாயிலாக அறிந்தேன். அதை இங்கு பதிவிடுகிறேன்.
தேவன் இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து அவற்றை ஆளுகை செய்வதற்காகவும் , பரிபாலிப்பதற்காகவும் மனிதனை படைத்தார் என்று நினைக்கிறேன்.
தேவன் படைத்த எல்லாவற்றையும் பார்த்தார் அது நன்றாகவே இருந்தது. ஆனால் அவற்றை ஆளுகை செய்வதற்கும், அவற்றை கவனித்துக் கொள்வதற்குமான ஒரு மேன்மையான ஆளுகையுள்ள ஒரு படைப்பாகவே தேவன் மனிதனை படைத்தார் என்று கருதுகிறேன்.
கீழே நான் பதியும் வசனங்களை நன்கு கவனித்தால் இவ்வுண்மை புரியும்
1. ஆளுகை செய்வதற்கு..
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
இவ்வசனத்தை நன்கு கவனித்தால் மனிதனை படைப்போமாக என்று சொல்லும் போதே படைப்பதற்கான காரணத்தையும் கூறிவிடுகிறார்.
அடுத்து மனிதனுக்காக தேவன் கொடுக்கும் முதலாவது கட்டளையைப்பாருங்கள் அதுவும் அப்படியே காணப்படுகிறது.
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
2.பரிபாலிப்பதற்கு
கிழே உள்ள இரண்டு வசனங்களையும் பார்த்தால் தேவனுடைய படைப்புக்களை பரிபாலிப்பதுவும் அவனை படைத்ததன் நோக்கம் என்பது தெளிவாகிறது. ஆதியாகமம் 2:15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். இதன்படி தேவன் மனிதனுக்கு முதலாவது கொடுத்த வேலை தான் வைக்கப்பட்ட இடத்தை பண்படுத்தி பராமரிப்பது.
ஆதியாகமம் 2:19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. இந்த வசனமும் தேவனுடைய படைப்புக்களை பரிபாலிக்கும் பொறுப்பை மனிதனிடம் தேவன் விட்டுவிடுவதையே காட்டுகின்றது.
முடிவாக தேவன் மனிதனுக்கு கொடுத்த முதல் கட்டளை உலகையும் அதிலுள்ளவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்பது. தேவன் மனிதனுக்கு முதல் கொடுத்த வேலை பூமியை பண்படுத்தி தன்னுடைய படைப்புக்களை பராமரிப்பது. இதிலிருந்தே தெரிகிறது தேவன் உலகில் மனிதனை ஏன் படைத்தார் என்பது.
மேலும் தான் அன்பு காட்டுவதும், உறவாடுவதும் தேவன் மனிதனை படைத்த நோக்கங்களாக இருப்பினும் நான் மேலே சொன்ன காரணங்களும் பொருத்தமானவை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.