(II தெசலோனிக்கேயர்2:2-3) ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
அப்படியானால் ஆண்டவரின் நாள் சமீபமாயில்லை என்கிறீர்களா?
'' விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது''.
என்பதன் அர்த்தம் என்ன? அநேகர் கர்த்தரின் வருகை சமீபம் என்கிறார்களே?
ஒரு பெரிய விவாதத்திற்கு தங்கள் கேள்வி வழிகோலும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
கிறிஸ்துவை பற்றி அறியவிரும்பாமல் கர்த்தரின் நாளை பற்றி அறிய விரும்பும் காரியத்தின் அபாயத்தை பற்றி எடுத்துரைக்க இந்த கேள்வி உதவும்..
கிறிஸ்துவை பற்றி ஒருவர் அறிய புதிய ஏற்பாடுமட்டும் போதும் என்கிற கருத்து தற்போது உலாவுகிறது. ஆனால் கர்த்தருக்கே இவைகளில் உடன்பாடு இல்லை என்பதை பின்வரும் வசனங்களில் இருந்து அறிய முடியும். எனவேபழைய ஏற்பாடும் புது விசுவாசிகளுக்கு கொடுக்கப்படவேண்டும்.
லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
கிறிஸ்துவை பற்றி அறிய அனைத்து தீர்க்க தரிசன ஆகமங்களையும்,நியாயபிரமான காரியங்களையும், சங்கீதங்களையும் ஒருவர் வாசித்து அறிய வேண்டும். பின் இவைகளை பற்றி அறிய,போதிக்க துணிவு கொள்ளலாம்...
வேதம் அனேக இடங்களில் சொல்லுகிறபடி கர்த்தருடைய நாள் சமீபம் தான். ஆனால் ஒருவனுக்கும் எவ்வளவு சமீபம் என்றோ,எந்த நாள் என்பதோ தெரியாது. தெரிந்த பரிசுத்தவான்களும் நம்மைபோன்றவர்களுக்கு அறிவு பெருக முத்திரை போட்டுவிட்டார்கள். இயேசுவின் காலத்தில் இருந்தே 'காலம் சமீபமாய் இருக்கிறது','தூற்றுகூடை ஆயத்தபடுதபட்டு இருக்கிறது','வேரருகே கோடரியானது வைக்கப்பட்டுள்ளது', இயேசுவானவர் 'வாசலருகே வந்திருக்கிறார்' எனவும் வேதத்தில் படிக்கும் போது காலம் அப்போது எவ்வளவு சமீபமாய் இருந்ததோ,அதை பார்க்கிலும் தற்போது இன்னும் சமீபம் என அறிய இயலுகிறது. இப்படி சொல்லுகிற அதே வேதத்தில் இயேசுவானவரும், பவுலும் சில எச்சரிப்புகளையும் தருகிறார்கள்...கவனியுங்கள்!!!
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
இயேசு யாரை பார்த்து இவைகளை கூறுகிறார்,எவரை பார்த்து வேறொருவனை ஏற்றுகொள்வீர்கள் என உறுதியாய் கூறுகிறார் என ஆராய்ந்தால் காரியம் விளங்கும்...தங்கள் கேட்க்கும் கேள்விக்கும் பதில் கிடைக்கும்..
தம்மையும், தம்மால் போதிக்கபட்டவைகளை கேட்டும் கைகொள்ளாமல்,எள்ளி நகையாடிய தாம் அனுப்பப்பட்டு வந்த சொந்த ஜனங்களை பார்த்தே!! ஆகவே இவ்வாறு தேவ படிப்பினையில் நாட்டம் இல்லாது இறுதிநாளை பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்ள ஒருவர் முற்படுவாறேயானால் அவர் கர்த்தர் என எண்ணிக்கொண்டு வேறோருவனான கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு முன் வெளிப்படும் தேவன் போல தன்னை காண்பிக்கும், மோசம்போக்கும் அந்திகிறிஸ்துவையே நம்பி விழுவார்..
(II தெசலோனிக்கேயர்2:2-3) ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
எப்படி தேவ சாயலாகிய மனுஷர் அநேகர் உருவான பின்பு நம் கர்த்தர் மாம்சத்தில் வெளிபட்டாரோ, அவர் வெளிப்படும் முன்னரே எப்படி வேதத்தில் உள்ளது போல அனேக பரிசுத்தவான்கள் வாழ்ந்தார்களோ அதைப்போலவே; கேட்டின் மகனும்,சாத்தானின் வெளிபாடுமாகிய அந்தி கிறிஸ்து வெளிபடுவதர்க்கு முன்னரே அனேக அந்தி கிறிஸ்துகள் தோன்றி வஞ்சித்தார்கள்.(தியானத்தில் இருந்து பெற்றது). இவர்களில் நீரோ மன்னன்,அலெக்ஸ்சாண்டர்,அன்டியோசுஸ் நான்காம் எபிபநேஸ்,சில சீசர்கள்,முசோலினி,ஹிட்லர்,புஷ்,இளவரசர் சார்லஸ்,பழைய போப்புகள்,அதிபர்கள் என மற்றும் அநேகரை முன் நிறுத்தி சில கருத்துகளின் அடிப்படையில் அந்திகிறிஸ்து என கூறுகிறார்கள்..இவர்கள் அந்தி கிறிஸ்துவின் சாயலுள்ளவர்களாய் இருந்திருக்கலாம்!!
ஆனால்,. என்னை பொறுத்தவரையில் அந்தி கிறிஸ்த்துவின் அரசாட்சிக்கான அடித்தளங்கள் மிக முன்னமே ஆரம்பித்தாயிற்று, அதினால் தான் ஏழுகுன்றுகளின் நகரத்தில் ஆட்சியை கையில் எடுக்கபோகும் அந்திகிறிஸ்துவிற்கு வேலையாட்கள் இப்போதே மும்மூரமாய் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தாலியில் பிறந்த அம்மையார் இந்தியாவை ஆள தேவன் கைவிட்ட காரியமும் இதனுடன் தொடர்ப்புபடுத்தி பார்க்கப்படவேண்டிய காரியம் தான் என இந்திய சகோதரர்கள் அறிய வேண்டியது..
ஆகவே,இரண்டாம் வருகை,கிறிஸ்து வருகிறார் என அந்தி கிறிஸ்துவை பற்றிய எச்சரிப்பு இல்லாமல் போதித்து விட்டு கற்பனைகளை காற்றுக்குவிட்டுவிட்டு பரமேற இறுதிகால அறிவு மாத்திரம் போதும் என ஒருவர் கருதுவது தவறேயாகும். என் என்றால் பரிசுத்தமிலாமல் கிறிஸ்துவர் என்கிற போர்வையில் அனேக நாள் அவர் வாழ்ந்துவிட்டதால் அந்திகிறிஸ்துவினால் வருகிற கொடுமைக்கு முன் வழுவிப்போய் விழுவார். அல்லது கர்த்தருக்கும்,அந்தி கிறிஸ்துவிற்க்கும் வித்தியாசம் என்ன என அறியாமால் அவனையே ஆராதனை செய்வார்.
யோவான் 10:4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தைஅறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
தேவனுடைய ஆடுகளாய் நாம் இருப்போமானால் தேவனையும்,அவரது சத்தத்தையும் அறிந்திருப்போம், கீழ்படியாமை இல்லாது கிறிஸ்துவர் என பெயரளவில் மாத்திரம் இருப்போமானால் அந்தி கிறிஸ்துவினிடத்தில் நிச்சயம் விழுவோம்..
எனவே பரிசுத்தத்தை தானியேல் போல் காத்து, கர்த்தரால் போதிக்கப்பட்டு இருப்போம். காலத்தை நிதானித்து அறிய ஞானிகளின் இருதயத்தை நிச்சயம் தேடுபவர்களுக்கு அருளுவார்!! இதை குறித்து மற்ற சகோதரர்களின் கருத்தையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.
//"ஆண்டவர் வரும் நாளை" ஆராய்ந்து பார்த்து கொண்டு இருப்பதைவிட, எந்நிலையிலும் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்வோமானால் அவர் வருகையை குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.//
//ஒரு வேளை நேரத்தில் கர்த்தரின் வருகை நாளை நாம் ஆராய்ந்து அறிந்து கண்டுபிடித்துவிட்டாலும் அவர் வரும் வேளையில் கீழ்படியமையின் நிலையில் இருந்தால் அதனால் எந்த பயனும் இல்லை.//
சுந்தர் அண்ணா இந்த வார்த்தைகளை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளுகிறேன் .
ஆனால் இயேசு வரும் நாளை பிதா மட்டும்தான் அறிவார் . என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் ஒருவர் என்னும் திரித்துவக் கோட்பாடை விசுவாசிக்கும் நாம் அந்த திரித்துவத்தில்
ஒருவருக்கு தெரிந்த விஷயம் இன்னொருவருக்கு தெரியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும?
மத்தேயு 24:36அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மாற்கு 13:32அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
இந்த வார்த்தைகளை வைத்து தான் அந்த நாள் இயேசுவுக்கு தெரியாது என நாம் சொல்லுகிறோம். ஆனால் இதற்கு சார்பாக வேறெந்த வசனங்களையும் வேதத்தில் நம்மால் காட்ட முடியாது என நினைக்கிறேன். ஏசாயா 34:16கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடிவாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
மேலும்...
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
மேல் சொன்ன வசனத்தில் குமாரன்தான் நித்திய பிதா என கூறப் பட்டுள்ளது.
அப்படியானால் எப்படி அவர் வரும் நாள் அவருக்கே தெரியாமல் போகும்?
இந்த வார்த்தைப்படி அந்த நாள் இயேசுவுக்கு தெரியாவிட்டால் அவருடைய கர்த்தத்துவத்தில் குறை உள்ளது போலாகிவிடும் .
இதனால் திரித்துவக் கோட்பாட்டை நம்ப முடியாது போகும்.
ஒரு வேளை இயேசு மனிதனாக பூமியில் வாழ்ந்த காலத்தில் மட்டும் அவருக்கு அந்த நாள் தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் உயிர்த்தெழுந்து இன்று கடவுளாக வீற்றிருக்கிறார் . இப்போது அவருக்கு அந்த நாள் தெரிந்திருக்கும்.
(இதைக்குறித்து ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம் எனக்கு இருக்கிறது.)
அந்த நாள் அவருக்கு தெரியாது என்பது முரணானதாக இருக்கிறது. எனவே மூல மொழியில் அதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சில வேளைகளில் இந்த வார்த்தை மூல மொழியிலிருந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். (இதைக்குறித்து நான் வாசித்த அந்த புத்தகத்தை நான் மீண்டும் கண்டெடுத்தால் அதிலுள்ளதை இங்கு சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன் . ) இந்த வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்து கூறவும் . ஏனென்றால் இவ்வார்த்தை இயேசுவின் இறைத்தன்மையோடு ஒத்து போகாத வார்த்தையாக உள்ளது.
-- Edited by t dinesh on Friday 2nd of November 2012 10:32:11 AM
-- Edited by t dinesh on Friday 2nd of November 2012 10:35:05 AM
தேவனுடைய ஆடுகளாய் நாம் இருப்போமானால் தேவனையும்,அவரது சத்தத்தையும் அறிந்திருப்போம், கீழ்படியாமை இல்லாது கிறிஸ்துவர் என பெயரளவில் மாத்திரம் இருப்போமானால் அந்தி கிறிஸ்துவினிடத்தில் நிச்சயம் விழுவோம்..
எனவே பரிசுத்தத்தை தானியேல் போல் காத்து, கர்த்தரால் போதிக்கப்பட்டு இருப்போம்.
சகோதரர் அவர்கள் சொல்லியிருக்கும் இந்த கருத்து மிகவும் முக்கியமானதும் ஆழ்ந்து கவனிக்க கூடிய ஒன்றும் ஆகும
அதாவது, பிதாவாகிய தேவனுக்கு மட்டுமே தெரிந்த "ஆண்டவர் வரும் நாளை" ஆராய்ந்து பார்த்து கொண்டு இருப்பதைவிட, எந்நிலையிலும் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்வோமானால் அவர் வருகையை குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு வேளை நேரத்தில் கர்த்தரின் வருகை நாளை நாம் ஆராய்ந்து அறிந்து கண்டுபிடித்துவிட்டாலும் அவர் வரும் வேளையில் கீழ்படியமையின் நிலையில் இருந்தால் அதனால் எந்த பயனும் இல்லை.
எந்நிலையிலும் அசைக்கபடாத வீடு கட்டியவன் யார்? இயேசு சொல்லிய வார்த்தையை கவனித்து கேட்டு அதன்படி செய்கிறவனே!
மத்தேயு 7:24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ஆம்! இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு வாழ்பவனை எந்த ஒன்றும் அசைத்துவிட முடியாது! அவன் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை!
ஆகினும் கர்த்தரின் வருகையின் நாள் சமீபமாக இருக்கிறதா? என்றால் அதற்க்கு என்னுடைய பதில் "ஆம்" என்பதே. எந்த கணமும் அவர் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் மட்டுமே பயபக்தியுடன் நமது பரிசுத்தத்தை
காத்துகோள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//எப்படி தேவ சாயலாகிய மனுஷர் அநேகர் உருவான பின்பு நம் கர்த்தர் மாம்சத்தில் வெளிபட்டாரோ, அவர் வெளிப்படும் முன்னரே எப்படி வேதத்தில் உள்ளது போல அனேக பரிசுத்தவான்கள் வாழ்ந்தார்களோ அதைப்போலவே; கேட்டின் மகனும்,சாத்தானின் வெளிபாடுமாகிய அந்தி கிறிஸ்து வெளிபடுவதர்க்கு முன்னரே அனேக அந்தி கிறிஸ்துகள் தோன்றி வஞ்சித்தார்கள்.(தியானத்தில் இருந்து பெற்றது).//
//ஆகவே,இரண்டாம் வருகை,கிறிஸ்து வருகிறார் என அந்தி கிறிஸ்துவை பற்றிய எச்சரிப்பு இல்லாமல் போதித்து விட்டு கற்பனைகளை காற்றுக்குவிட்டுவிட்டு பரமேற இறுதிகால அறிவு மாத்திரம் போதும் என ஒருவர் கருதுவது தவறேயாகும். என் என்றால் பரிசுத்தமிலாமல் கிறிஸ்துவர் என்கிற போர்வையில் அனேக நாள் அவர் வாழ்ந்துவிட்டதால் அந்திகிறிஸ்துவினால் வருகிற கொடுமைக்கு முன் வழுவிப்போய் விழுவார். அல்லது கர்த்தருக்கும்,அந்தி கிறிஸ்துவிற்க்கும் வித்தியாசம் என்ன என அறியாமால் அவனையே ஆராதனை செய்வார்.//
ஆனால் இயேசு வரும் நாளை பிதா மட்டும்தான் அறிவார் . என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் ஒருவர் என்னும் திரித்துவக் கோட்பாடை விசுவாசிக்கும் நாம் அந்த திரித்துவத்தில்
ஒருவருக்கு தெரிந்த விஷயம் இன்னொருவருக்கு தெரியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும?
இதனால் திரித்துவக் கோட்பாட்டை நம்ப முடியாது போகும்.
-- Edited by t dinesh on Friday 2nd of November 2012 10:35:05 AM
சகோதரர் அவர்களே, தாங்களே இரண்டு வசனங்களை சுட்டிகாட்டியிருக்கிரீர்கள்
////மத்தேயு 24:36அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; மாற்கு 13:32அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். ////
"பிதா ஒருவரை தவிர மற்றொருவனும் அறியான்" என்று இரண்டு வசனங்களில் சொல்லபட்டாகிவிட்டதே!
பிதாவும் கிறிஸ்த்துவும் வேறு வேறு ஆள்த்துவங்கள் என்று ஏற்றுக்கொண்டால் இயேசுவின் "குமாரனும் அறியார்" என்ற வார்த்தைகளையும் ஏற்றுத்தானே ஆகவேண்டும்.
மூல பாஷையில் உள்ளதை அப்படியே மொழி பெயர்த்ததை பாருங்கள்
But of that day and [that] hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, (NOT-YET THE SON) but the Father.
மேலும் ஆண்டவராகிய இயேசு "பிதா என்னிலும் பெரியவர்" என்று இரண்டு இடங்களில் சொல்லியிருப்பதை நாம் பார்க்க முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் இயேசுவுக்கு தெரியாத அல்லது இயேசுவை விட எதோ ஒரு விதத்தில் அதிகமாக எதோசில காரியங்களை அவர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாமே.
இப்படி நாம் விசுவாசிப்பதால் திரித்துவத்தை நிராகரிப்பதாக எந்த பொருளும் இல்லை.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் வெவேறு பணியை செய்துகொண்டிருக்கும் ஒரே தேவனின் ஆள்த்துவங்கள்.
ஆகினும் பிதாவாகிய தேவன் எல்லோரிலும் பெரியவர்.
யோவான் 10:29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
அவரைவிட பெரியவர் ஒருவருமில்லை!
எபிரெயர் 6:13ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
திரித்துவத்தை விவரிக்கும் விதத்தில்தான் சில தவறான புரிதல்கள் இருக்கிறதேயன்றி வசனங்களில் இல்லை!
சில மனுஷ கருத்துக்களை நிலைநாட்ட வேதத்தில் தெளிவாக சொல்லபட்டிருக்கும் வார்த்தைகளை சந்தேகிக்கலாமா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யார் பெரியவர் என்பதற்கு இயேசு கொடுத்த பதில் எவ்வளவு அழகானது.. பிதாவிற்கு மகிமையே ஏசுவின் மூலமாய் தானே.. குமாரணன் தேவனுக்கு தாமே சமமாய் இருந்தும் தம்மை தாழ்த்தினார் என்பதே சரி.. உலகதோற்றத்திற்கு முன்னும் ,அபிரகாம் தோன்றும் முன்னும் இருந்தவரான குமாரனனின் ஆதி மேன்மையை அறியாமல், பொத்தம்பொதுவாக 'குமாரனை விட பிதா பெரியவர்' என மாத்திரம் கூறுவது சரியாகாது என்பது எனது கருத்து.. சமமாய் இருந்தும் பிதாவிற்கு கீழ்படிய தம்மை தாழ்த்தினார் என்பதே வேதம் கூறுவது..
சகோ தினேஷ் அவர்களே,
திரித்துவம் பற்றிய சில திரிகள் நம் தளத்தில் உள்ளன. தங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட இடத்தில் கேட்பது அருமையான விவாதத்திற்கு வழிகோலும்..
சகோதரர்களே விவாதம் திசை திரும்பி செல்லும் நிலையில் இருக்கிறது.
திரித்துவத்தை பற்றியும் இயேசுவானவர் பற்றியும் பல திரிகளில் விவாதித்தாகி விட்டது. மீண்டும் மீண்டும் அதே கருத்தை விவாதித்து முடிவை எட்டாமல் விடுவதால் என்ன பயன்?
"பிதாவாகிய தேவன் இயேசுவை விட பெரியவர்" என்பதை இயேசுவானவர் சொன்ன இரண்டு (ஜோடி) வசனங்கள் அடிபடையிலேயே சகோதரர் விசுவாசிக்கிறார் அதுபோல் சகோ ஜான்12 அவர்களும் தங்கள் விசுவாசத்துக்கு ஆதாரமாக இரண்டு வசனங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கு இருவரின் விசுவாசமும் வசனத்தின் அடிப்படையிலேயே இருப்பதால் அவரவர் விசுவாசத்தின்படி இருந்துவிட்டு போகட்டுமே. இறைவனே வந்து ஒருவருக்கு விளக்கினால் அன்றி இந்த கருத்துக்கு ஒரு முடிவை எட்டுவது சுலபமானது அல்ல. மற்றபடி யாராவது விட்டுகொடுத்தால்தான் முடியும் அப்படி விட்டு கொடுக்க விரும்பாத சந்தர்ப்பத்தில் விவாதத்தை முடிப்பதே நல்லது என்பது என்னுடைய நிலைப்பாடு.
அப்படியும் விவாதிக்க வேண்டும் என்று சகோதரர்கள் விரும்பினால் மீண்டும் திரித்துவம் பற்றிய திரி ஒன்றை ஆரம்பித்தோ அல்லது பழைய திரிகளில் ஒன்றை மீண்டும் தீண்டியோ அங்கு விவாதிக்கலாம்.
இந்த திரியில் "ஆண்டவரின் வருகை நாள்" குறித்த கருத்துக்களை மாத்திரம் பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
ஜோடான வசனங்களை விசுவாசிக்க வேண்டிய நாம் ,சில வசனங்களை தவிர்த்து,சில வசனங்களை மாத்திரம் விசுவாசிப்பது எவ்விதத்தில் சரி என எண்ணிப்பார்க்க வேண்டும். நான் முன்வைத்த வசனங்களை நீங்கள் விசுவாசியாதிருக்க காரணம் இருந்தால் தாங்கள் பதியலாம்.
சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
அப்போஸ்தலர் 13:32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
கர்த்தர் யாரை நோக்கி இன்று நான் உன்னை ஜநிப்பித்தேன் என கூறுகிறார்.
புதியதாய் பிறந்த பிள்ளையாகிய குமாரனை பார்த்தா!!
அல்லது தாவீதை பார்த்தா!!
தேவ திட்டத்தில் குமாரன் ஜநிப்பிக்கபடுகிறதை பரத்தில் இருந்து இறங்கிவரபோகிற குமாரனிடத்தில் அல்லவா பேசுகிறார்...
ஆக அவரது ஆதி மேன்மையை கருத்தில் கொள்ளாமல், மனிதராய் இருக்கும்(தேவ தூதரிலும் சிறியராய் இருக்கும் ) போது அவர் கூறியதை பிடித்துகொண்டு பேசுவது எவ்விதத்திலும் சரியல்ல..
அப்படியானால் மகிமையில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவானவர் இன்னமும் தேவதூதரிலும் சிறியவர் என அறிக்கையிடுகிரீர்களா!!! அப்படி சொல்ல மாட்டீர்கள் தானே!! பின் ஏன் குமாரனை பிதாவிலும் சிறியவர் என பரமேறிய பிறகும் கூறுகிறீர்கள்!! இன்னமும் சிறியவர் என்பீர்கள் என்றால்,தேவத்துவத்தின் மகத்துவங்கள் ஏசுவில் பரிபூரணமாய் காணப்பட்டதாக எவ்வாறு அறிக்கை செய்வீர்கள்!!
அண்ணாமாரே திரித்துவத்தைப் பற்றி நான் கேள்வி கேட்கவில்லை .நான் கூறிய கருத்து என்னவென்றால் .
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
மேல் சொன்ன வசனத்தில் குமாரன்தான் நித்திய பிதா என கூறப் பட்டுள்ளது.
அப்படியானால் எப்படி அவர் வரும் நாள் அவருக்கே தெரியாமல் போகும்?
ஒரு வேளை இயேசு மனிதனாக பூமியில் வாழ்ந்த காலத்தில் மட்டும் அவருக்கு அந்த நாள் தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் உயிர்த்தெழுந்து இன்று கடவுளாக வீற்றிருக்கிறார் . இப்போது அவருக்கு அந்த நாள் தெரிந்திருக்கும்.
எனவே மூல மொழியில் அதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சில வேளைகளில் இந்த வார்த்தை மூல மொழியிலிருந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம்.
தான் வரும் நாளை அறியாதவர் கடவுளாக இருக்க முடியாது என்பதே எனது கருத்து.
மத்தேயு 24:36அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்;
அண்ணா நான் அந்த புத்தகத்தில் படித்ததை கீழே சமர்ப்பிக்கிறேன். இது உண்மையா என எனக்கு தெரியாது.ஆனால் என்னால் நம்பக் கூடியதாக உள்ளது.
//தம்முடைய வருகை மற்றும் கடைசி கால சம்பவங்களைக குறித்து ( மாற்கு 13 : 32 ) ல் இயேசு "ஒருவரும் அறியார்" என்று சொன்னது; (தானி 12 : 4 , 9 ) ன்படி கடைசி காலம் வரையில் அது மறைபொருளாக இருக்கும் என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது இயேசுவுக்கு இந்த அர்த்தத்தில்தான் (மாற்கு 13 : 32 ) வில் சொல்கிறது.
இதில், மிகப் பரிதாபமான ஒரு விஷயம் என்னவென்றால், தமது வருகையின் நேரம் "இயேசுவுக்கு கூட தெரியாது" என்று பல விசுவாசிகள் நம்புகின்றனர்.
கிரேக்க பாஷையிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட (மத் 24 : 36 மற்றும் மாற்கு 13 : 32 ) ஆகிய வசனங்கள் முழு அர்த்தத்தையும் கொண்டுவரவில்லை. கிரேக்க பாஷையில் வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால், இன்னும் தெளிவாகவும், சரியாக கேட்கிறவர்கள் புரிந்துகொள்ள முடியும். அதன்படி பார்க்கும்போது, இந்த வசனங்கள் மறைபொருள்களால் நிரம்பி இருக்கின்றன;
(மாற்கு 13 : 32 ) அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
இந்த வசனத்தில், "பிதா ஒருவர் "தவிர"...." என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில், ''Ei Me'' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
''Ei Me'' என்ற கிரேக்க வார்த்தையை கூர்ந்து கவனித்தல், அதற்கு "But Only" அதாவது "ஒருவர் தவிர" அல்லது ''if not '' அதாவது "அப்படி இல்லையென்றால்" என்ற அர்த்தங்கள் உண்டு .
(ஏசாய 9 :6 )ல் குமாரன் தன "நித்தியா பிதா " என்றும், (யோவான் 10 : 30 ) ல் "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசுவானவரே தம்மைப் பற்றி சொல்லியிருப்பதை வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் கொஞ்சம் மனதில் கொண்டிருந்தார்களானால், ''Ei Me'' என்ற கிரேக்க வார்த்தையின் "அப்படி இல்லையென்றால்" என்ற அர்த்தத்தை பயன்படுத்தி, (மாற்கு 13 : 32 ) ல் ".....குமாரனும், அப்படி இல்லையென்றால், பிதாவும்....." என்ற முழு வேதாகமத்தின் சத்தியத்தின்படி பொருத்தமாக மொழிபெயர்த்திருப்பர்கள்.
அதாவது வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், "குமாரனும், பிதாவாக இல்லையென்றால்", தாமும் தம்முடைய வருகையின் நேரத்தை அறியார், என்று அர்த்தம்.
" எலோஹிம் " என்னும் திரித்துவ தேவனாக, பிதாவும், குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
நாம் (மாற்கு 13 : 32 )ஐ வழக்கமாக புரிந்துகொள்கிற விதமாக பார்த்தால், அதில் பெரிய உபதேச தவறு உள்ளதையும் காணமுடியும். யெஹோவா சாட்சிகள் கூட்டத்தினருக்கு, அது மிகவும் சாதகமாக இருக்கும்,
ஏனென்றால், தாம் வரப்போவது இயேசுவுக்கே தெரியாது என்றால், இயேசுவும் பிதாவும் ஒன்று அல்ல என்று நாமே அறிக்கை செய்கிறது போல இருக்கிறது!
"பிதாவாகிய தேவனையும்", குமாரனாகிய தேவனையும்" ஒரு இமைப்பொழுது கூட பிரிந்திடுவது என்பது ஒரு மிகப்பெரிய தவறாகும்!
(யோவான்10:30) நானும் பிதாவும் ஒன்ரயிருக்கிறோம் என்றார்.
இதை, நானே சொந்தமாக மீண்டும் ஆராய விரும்பி, கிரேக்க வேதாகமத்தில் பார்க்கும் போது; (மாற்கு 13 :32 ) நம்முடைய மொழிகளில் முழு அர்த்தத்தையும் கொண்டு வரவில்லை என்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்து போனேன்.
கொஞ்சம் பொறுத்திருங்கள், (மாற்கு 13 :32 ) முழு வசனத்தையும் "மூல பாஷையான கிரேக்க மொழியில்" உங்களுக்கு தந்து, அதின் வார்த்தைக்கு வார்த்தை பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் கீழே தருகிறேன்.ஒவ்வொரு கிரேக்க வார்த்தைக்கும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.//
(இங்கே அந்த எழுத்தாளர் கிரேக்க வேதாகமத்தின் வசனத்தையும் அதன் ஆங்கில அர்த்தங்களையும் imege ஆக பதித்திருந்தார்.)
//மீண்டுமாக ,
கிரேக்க மொழியில் (மாற்கு 13 :32 ) ல், "OYAEIC" என்ற கிரேக்க வார்த்தைக்கு (No One / Not Yet One) அதாவது (ஒருவரும் / இதுவரைக்கும் ஒருவரும்) என்றும்;
"OIAEN" என்கிற கிரேக்க வார்த்தைக்கு (Knows /Has Peaceived) அதாவது (அறிவது/ வெளிப்படுத்தப்படுவது) என்றும் அர்த்தம்கொள்ளுகிறது.
இப்படிப்பட்ட அர்த்தங்களில், எது வேதத்தின்படியானதோ, அந்த வார்த்தைகளை மட்டுமே தேர்ந்த்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஆகவே, நாம் மற்ற வசனங்களுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளும்போது, "இதுவரைக்கும் ஒருவரும்" என்பதுதான் துல்லியமானது என்று கண்கூடாக தெரிகிறது.
மேலும் , " OYAEIC OIAEN" என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளையும் சேர்த்து வேதத்தின் சத்தியத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, "இதுவரை ஒருவருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை" என்று அர்த்தங்கொள்ளுகிறது .
எனவே, கிரேக்க வேதாகமத்தின் சரியான அர்த்தத்தின்படி,
( மாற்கு 13 :32 )
" அந்த நாளையும், நாழிகையையும், " இதுவரை ஒருவருக்கும்", இதுவரை பரலோகத்தில் இருக்கிற தூதர்களுக்கும் ,''குமாரனும் பிதாவாக இல்லையென்றால்'' இதுவரை குமாரனுக்கும் வெளிப்படுத்தப் படவில்லை.
என்பதே சரியான கருத்து.//
அதாவது குமாரன் பிதாவாக இல்லாவிட்டால்தான் அவருக்கு தெரியாது.. என்று பொருள்
அண்ணா இந்த கிரேக்க வசனத்தை நீங்களும் ஒருமுறை ஆராய்ந்து பார்த்து எனக்கு விளங்கப்படுத்துங்கள்.
அதாவது குமாரன் பிதாவாக இல்லாவிட்டால்தான் அவருக்கு தெரியாது.. என்று பொருள்
அண்ணா இந்த கிரேக்க வசனத்தை நீங்களும் ஒருமுறை ஆராய்ந்து பார்த்து எனக்கு விளங்கப்படுத்துங்கள்.
அன்பு சகோதரர் அவர்களே!
நான் ஆண்டவரை ஆராய்ந்து அல்ல, சொந்த அனுபவத்தில் அறிந்து உணர்ந்தவன். நம் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள் படி "பிதா இயேசுவை விடவும்/ எல்லோரை விடவும் பெரியவர்" என்பதை வசனத்தின் மூலம் மட்டுமல்ல, அனுபவ பூர்வமாகவும் அறிந்தவன். அதனால் இயேசு சொன்ன வார்த்தையாகிய "குமாரனும் அறியார்" என்ற வார்த்தையையும் அப்படியே நம்புகிறேன். மேலும் இயேசுவானவர் பிதாவின்கட்டளைப்படிதான் எல்லாவற்றையும் செய்வதாக தன ஜீவிய நாளில் திரும்ப திரும்ப சொல்லியுருப்பதையும் நாம் அறிகிறோம்.
எனவே பிதா ஒருவருக்கே இயேசு வரும்நாள் தெரியும் என்று, இயேசு சொன்ன வசனப்படியே நான் நம்புகிறேன்.
.
ஒருவேளை தாங்கள் சொல்வதுபோல் மரித்து உயிர்த்த இயேசுவுக்கு அவரின் வருகை நாள் தெரிந்திருக்கலாம் ஆனால் அதை உறுதிபடுத்தும் வசனம் எதுவும் இல்லை. ஆனால் நான் சொல்லும் கருத்துக்கு ஆதாரமாக " இயேசுவின் மாறாத தன்மை குறித்து கூறும் கீழ்கண்ட வசனத்தை
அதாவது இயேசு கிறிஸ்த்து என்றும் மாறாத ஒரே நிலையிலேயே இருக்கிறார். எனவே அவர் தன் வாயால் சொல்லிய "என் பிதா என்னிலும் பெரியவர்" என்ற நிலையும் மாறாதது என்பது எனது கருத்து.
அதற்காக தங்கள் விளக்கங்களை நான் மறுக்கவும் இல்லை! உங்கள் விசுவாசத்தை நான் எதிர்க்கவும் இல்லை, "நான் சொல்வதுதான் சரி" என்று பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. ஆனால் அனுபவத்தின் அடிப்படையிலான எனது கருத்தை என்னால் மாற்றிக் கொள்ளமுடியாது! அதே நேரத்தில் எனது கருத்தை நான் யார் மீதும் திணிக்கவும் விரும்பவில்லை, காரணம் சில கருத்துக்கள குறித்து வசனம் இருபுறமும் பேசுவதால் தேவன் உண்மையை உணர்த்தினால்தான் சரியான உண்மையை ஒருவர் அறியமுடியும்.
.
மேலும் இந்த கருத்தை குறித்து சரியாக அறியவேண்டும் என்றால் திரித்துவம் குறித்த கருத்துக்கு போக வேண்டியது வரும். திரித்துவம் என்பது உண்மையானாலும் அதை சிலர் விளக்கும் விதத்தில் தவறு இருக்கிறது. "திரித்துவ" கருத்தை குறித்து தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பெரியதோர் விவாதம் நடத்தி, பின்னர் திரி நீக்கபட்டது. நமது தளத்திலும் பல முறை திரித்துவம் குறித்த விவாதம் நடந்தாகி விட்டது எந்த முடியும் எட்டப்படவில்லை. மென்மேலும் இந்த் கருத்தை விவாதித்தால் மன கஷ்டங்கள் தான் மிஞ்சும்! எனவே அவரவர் கொண்டிருக்கும் விசுவாசம் அவரோடு இருக்கட்டும். நாளை ஆண்டவரின் வருகையின்போது உண்மை எனவென்பதை அறிந்துகொள்ளலாம்.
.
எனவே தள சகோதரர்களுக்கு இடையே பிரிவினை குழப்பம் உண்டாகாதபடிக்கு இந்த கருத்தை நாம் அப்படியே விட்டுவிடுவது நல்லது என்பது எனது கருத்து!
-- Edited by SUNDAR on Tuesday 13th of November 2012 04:51:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)