இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விளக்கம் தரவும்.


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
விளக்கம் தரவும்.
Permalink  
 


எனக்கு ஒரு நண்பர் இந்த லிங்க் ஐ தந்து அதற்கெதிரான விளக்கத்தை கேட்டார். அந்த லிங்கை கீழே தருகிறேன் . அவருக்கு விளக்குவதற்கு தயவு செய்து உதவி செய்யவும்.

http://www.hds.harvard.edu/faculty-research/research-projects/the-gospel-of-jesuss-wife

 



-- Edited by t dinesh on Monday 12th of November 2012 02:39:43 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

தயவு செய்து யாராவது உதவி செய்யுங்க ப்ளீஸ் .



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

தினேஷ் ஐயா, ஜீசஸ் ஒரு முக்கிய வரலாறு நாயகராக இருப்பதால் அவரைகுறித்து அனேக கதைகள் மற்றும் செய்திகல் உலகத்தில் எழுதப்பட்டுல்லது அதில் எதுஉண்மை எது பொய் என்பதை நம்மால் எப்படி கூறமுடியும். நீங்கள் தொடுப்பு கொடுத்திருக்கும் தளம் அதுபோல் ஒருபுது செய்தியை சொல்கிரது. அது உண்மையா இல்லியா என்பது யாருக்கு தெரியும்.

ஆராய்சி செய்து நாம் இயெசுவை எற்றுகொள்ளவில்லையே. 

வேத புத்தகமாக நமது கையில் எழுதி கொடுக்கபட்டது மட்டும்தான் தேவனால் அங்கீகரிக்கபட்டது என்றும் நித்தியவாழ்வுக்கு பயனுல்லது என்றும் விசுவாசிப்போம்.

கடவுள் யார் மூலமாவது விளக்கம் தந்தாலும் தரலாம் காத்திருப்போம்.     



-- Edited by JOHNJOSH on Tuesday 13th of November 2012 01:03:52 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே. எனக்கு இயேசுவில் எந்த சந்தேகமும் வரப்போவதில்லை. ஆனால் விளக்கம் தேவை என கேட்கும் நண்பருக்கு எங்காவது தேடி விளக்கம் கொடுப்பது என் கடமை என நினைக்கிறேன்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே,


வேதத்தில் இயேசுவானவரை பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதங்களிலும்,நியாயப்பிரமாணத்திலும் எழுதப்பட்டுள்ளதாக இயேசுவே கூறுகிறார்..

லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

தீர்க்கதரிசிகள் பல இடங்களில் இயேசுவை பற்றி பேசுவதை பற்றி நாம் அறிந்துள்ளோம். நியாயப்பிரமாணத்தில் இருந்து நீங்கள் இயேசுவை குறித்து அறிந்துள்ளீர்களா!! சுகந்த நறுமணமாய் நுகரப்படும் பலிப்பொருள் எவ்வாறு இருக்கவேண்டும் என அறிந்துள்ளீர்களா!!(வேதத்தை ஆராயுங்கள்...)

இயேசுவானவர் பல இடங்களில் மணவாளன் என அழைக்க படுகிறார். உலக பிரகாரமான திருமணத்தை முன்னிட்டு அவ்வாறு அழைக்கபட்டிருபாரானால்,பரமேறிய பின்னும் மணவாட்டியாகிய சபையை குறித்து பேசவேண்டியதன் காரியம் என்ன!!

வெளி 21:2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

வெளி 21:9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

யோவானும் யேசுவாகிய மணவாளனையும், அவர் பிற்காலத்தில் பெறப்போகிற ஆவிக்குரிய சபையாகிய மணவாட்டியை குறித்தும் பின்வருமாறு கூறுகிறார்.

யோவான் 3:29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

இந்த இடத்தில் மணவாளன் என்பவர் இயேசுவே !! மணவாளனின்  தோழன்  யோவான். இந்த இடத்தில் மணவாட்டி என்பவள் மகதலேனா மரியா என கொள்ளலாகுமோ. இக்கால வேளையில் யோவானும்,ஏசுவும் அவளை பார்த்ததே இல்லையே.. ஆக.,சகோதரர் குழப்பத்தை எறிந்து போட்டு, இயேசுவின் மணவாட்டி காட்டப்பட்டுள்ள சபையை, மகதலேனா உடன் திருமணம் என வருவதாக கட்டுக்கதை புனைந்து,அரைவேக்காடாக அறிந்தவைகளை சொல்லும் துணிகரத்தை எதிர்த்து வேதத்தை கொண்டு பக்திவைராக்கியதோடு கேட்பவர் எவருக்கும் கூறக்கடவாராக!!!

பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாகுக!!
-------------------------------------------------------------------------------------------------------

யோவான் 18:37 ...இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard