தனது தாயாருடன் சிறுவன் ஒருவன் கடை வீதிக்கு சென்றானாம். செல்லும் வழியெல்லாம் மிட்டாய்களையும், வித விதமான சாக்லேட்டுகளையும் பார்த்து வாங்கி தாம்மா!! வாங்கி தாம்மா!! என்று கேட்டுகொண்டே வந்து, பின் ஒரு குறிப்பிட்ட கடையில் அடம் பிடித்து நச்சரித்தான்.
கடையில் தன் தாயார் தேவை பட்ட பொருட்களை வாங்கி முடித்துவிட்டார் என அறிந்த அந்தச் சிறுவன் தாயார் கையை பிடித்து தொங்கி, தனது பிடிவாதத்தின் உக்கிர நிலையை காண்பித்து மிட்டாயை நோக்கி கை நீட்டி அழுதான். தாயார் இப்போதும் அவைகளை அவனுக்கு வாங்கித்தர மறுத்து அவனை சமாதானம் செய்ய முயன்றார். சிறுவனின் அழுமுகத்தை பார்த்த கடைக்காரார், 'தம்பி!! இந்த பாட்டிலில் உள்ள மிட்டாய்களில் உனக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள்!!' என்றாராம்..
பையன் மிட்டாயை எடுக்க தீவிரிக்காமல், மேலும் அழுகையை அதிகரித்தான். அப்போது கடைகாரர் தாமே முன்வந்து தனது கைகளால் மிட்டாய்களை அள்ளி அந்த சிறுவனுக்கு அளித்துவிட்டார்..
அழுகையை நிறுத்திய சிறுவன் ஒய்யார நடைபோட,.தாய்க்கு கோபம், அவள் சிறுவனை நோக்கி அந்து நல்ல கடைக்காரர் அவ்வளவு கேட்டுக்கொண்டும் திமிராக நீ அழுது கொண்டே மிட்டாய்களை என்டுத்துகொல்லாதது ஏன் என்று கேட்டாள்..
சிறுவன் புன்முறுவலோடு என் கை சிறிய கை. பாட்டிலில் இருந்து நானே மிட்டாய் எடுத்திருந்தால் ஒன்று இரண்டு தான் எடுத்திருப்பேன். கடைகாரரின் கரம் பெரியது ,அவர் பாட்டிலில் இருந்து எடுத்தால் அதிகமான மிட்டாய்கள் கிடைக்கும். ஆகவே தான் கடைக்காரர் எடுத்து தரும்படி அழுகையை அதிக படுத்தினேன் என்றானாம்..
ஆம்!!
நமக்கு ஒத்தாசை வரும் பெரிய கரத்தை நோக்கி காத்திருப்பதே நலம் !!
எந்த மனிதனின் கரத்தை பார்க்கிலும் தேவ கரம் பெரியது. ஆகவே ,கர்த்தரின் பெரிய கரத்தில் நாமும் நம்மை ஒப்புகொடுப்போம். அவர் தம் பெரிய கரத்தாலே நம்மை ஆசிர்வதித்து ,நம் சத்துருக்களை அதே பெரிய கையாலே ஒழியப்பண்ணுவார்!!
நாம் தவறு செய்யும் பொது கூட நாம் நமக்கு நன்மை உண்டாகும் படிக்கு ,தாவீதை போலே மனித கரங்களில் விழாமல்,தேவனின் பெரிய கரத்தில் விழுதலே நல்லது..
I நாளாகமம் 21 : 13கர்த்தரைநோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான்கர்த்தருடையகையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
தேவாதிதேவனுக்கு மகிமை உண்டாகுக!!
-- Edited by JOHN12 on Thursday 15th of November 2012 11:13:20 AM