சகோ. செல்வின் அவர்களே சாத்தான் எனப்படும் லூசிபர் யார் அவனது ஆதி நிலை எனவேன்பது பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆவலோடு இருப்பதை அறியமுடிகிறது. அதற்க்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கிறதா? அல்லது தங்களுக்கு அவன் குறித்து ஏதாவது வெளிப்பாடுகள் இருக்கிறதா? இருந்தால் அறிய தரவும்!
மேலும் தாங்கள் ஆதாமின் வீழ்ச்சி மற்றும் லூசிபரின் வீழ்ச்சி இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக
தெரிகிறது!
இருவரின் வீழ்ச்சியும் ஏறக்குறைய ஒரேபோல்தான் இருக்கிறது! ஆதாமை ஏவாள் மூலம் சாத்தான் வஞ்சித்துபோல் சாத்தானையும் யாராவது / யார்மூலமாகவோ வஞ்சித்து கெடுத்திருக்கலாம் அல்லவா?
இடருவதற்க்கு வாய்ப்பே இல்லாத, தீமையே இல்லாத ஒரு காலகட்டத்தில் தேவனிடம்கூட இல்லாத குணமாகிய பெருமை லூசிபருக்கு எங்கிருந்து வந்தது?
தன்னை உண்டாக்கிய தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்த நினைக்கும் ஒரு மோசமான எண்ணத்தின் அவனுக்குள் விதைத்தது யார்? என்ற கேள்விகளும் எழவே செய்கிறது!
ஆகினும் அது குறித்து வேதத்தில் எந்த விளக்கமும் இல்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)