இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளின் முக்கிய தவறு என்ன?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளின் முக்கிய தவறு என்ன?
Permalink  
 


மனவாளனை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் பற்றி வேதத்தில் வாசிக்கிறோம்:
 
மத்தேயு 25:1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்

3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்

5. மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6. நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இங்கு நிராகரிக்கபட்ட அந்த ஐந்து ஸ்திரிகககளை சற்று கூர்ந்து பார்க்கும்போது நாம் கீழ்கண்ட உண்மைகளை அறிகிறோம்:
 .
இவர்கள் மணவாளனின் வருகையை குறித்து நிர்விசாரமாக இருக்காமல் அவரை எதிர்கொள்ள புறப்பட்டு போனவர்கள்தான். மணவாளன் வர தாமதமான போது நித்திரை மயக்கமடைந்தாலும், வருகிறார் என்ற சத்தம் கேட்டவுடன் எப்படியாவது அவருடன் செல்லவேண்டும் என்று எண்ணெய் தேடி ஓடியவர்கள்தான். எண்ணையை  நிரப்பிக்கொண்டு மீண்டும் ஆண்டவரை தேடி வந்தவர்கள்தான் ஆனாலும் இவ்வளவு பிரயாசம் எடுத்தும்  "உங்களை அறியேன்" என்று ஆண்டவர் கடுமையான வார்த்தையை சொல்கிறார். அவர்களுக்கு மணவாளனுடன் இடமில்லாமல் போனது வருத்தமான காரியம். 
.
அதுபோல் நம்மில் சிலருக்கு சம்பவிக்காமல் இருக்கும்பொருட்டு  இந்த உவமை சொல்லும் உண்மையான கருத்து என்ன என்பதை அறிய ஆவல். தெரிந்தவர்கள் சற்று விளக்குங்களேன்.
 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோதரரே தங்கள் நினைப்பது போல இந்த உவமையின் கருத்தை அறிவது அவசியமே ஆகிலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

ஒருவேளை அவர்கள் தாங்களாகவே ஒரு நேரத்தை மனதில் நிர்ணிய்த்து இருக்கலாம் இந்த நேரத்திற்குள் வந்து விடுவார் ஆகவே இந்த எண்ணெய் போதுமானதாக இருக்கும் என்று எண்ணி இருக்கலாம்.
ஆனால் அவர்கள் நினைத்த நேரத்திற்குள் அவர் வராததால் அவர்கள் எண்ணெய் தீர்ந்து போய் இருக்கிறது.

இன்றைக்கும் இதை போல அநேகர் தாங்களாகவே ஒரு நேரத்தை மனதிற்குள் நிர்ணிய்த்துகொண்டு தேவன் வர தாமதமாகும் என்று எண்ணி தன் இஸ்டம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை தேவன் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாமோ அப்படி இல்லாமல் தேவன் எப்போது வேண்டுமானாலும் வருவார் என்று எண்ணி ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து காத்திருபதுவே சிறந்தது.



-- Edited by Stephen on Thursday 29th of November 2012 10:24:00 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

தேவன் வருவார் வருவார் என்று சொல்லி பரிசுத்தமாய் வாழ்ந்தவர்கள் தான் அந்த இரண்டு குருப்பானவர்கள் அதில் சிலர் அவர் வர தாமதம் ஆனதால் அவர்களுக்குள் இருந்த எண்ணை என்கின்ற ( பரிசுத்தம் அல்லது விசுவாசம் ) இல்லாமல் போய்விட்டது

 

தூங்கிவிட்டார்கள் என்பது நீண்ட நேரம் ஆகிவிட்டது என்பதை குறிக்கின்றது (நமக்கும் இன்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது  )

 

முன்பதாக இருந்த அந்த பெலன் நம்பிக்கை பரிசுத்தம் விசுவாசம் கடைசிவரை அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது இவையே அவர்களுடைய முக்கியமான தவறு ஆதலால்  தான் அவர்  புத்தீல்லாத அவர்களை பார்த்து நான் உங்களை ஒரு காலமும் அறியேன் என்று சொல்கின்றார்

 

இன்று நாமும் இப்படிதான்  இருக்கின்றோம்.....................................

ஆதலால் நாமும் புதிள்ளவர்களாய் இருந்து  தூன்கினாலும் எண்ணை என்கின்ற  பரிசுத்தத்தை விசுவாசத்தை வைத்துக்கொண்டே தூங்குவோம் அவர் வருகின்ற சத்தம் கேட்டால் உடனே எழுந்து அவரோடு செல்வோம் ஆமென்.........  



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

Dear brother,  This is my understanding/interpretation.  (For many aspects I received help from reading Bro. Watchman Nee’s book The Finest of The Wheat  Sec13 - The second coming of Christ.)  

The kingdom of Heaven – the realm of the parable is not earthly.

There was a drowsy period and a sleeping time before the bridegroom’s arrival call.  The oil cannot be collected during the drowsy time and strictly at sleep.  This sleep is not a daily sleep from which one will wake up and continue collecting oil but a continuous sleep that will make virgin to be woken up to hear the call.  That means all ten are dead.

Those virgins rose – indicates soul’s wake up from the long sleep     Virgins  - took their lamp and went forth to meet the bridegroom

They were encaged to the bridegroom when they took their lamps (became part of the corporate bride), then their going forth begins immediately to meet the bridegroom.  Going forth for the virgin is to adorn herself (prepare herself).  All the ten people became virgins who are qualified to become a part of the corporate bride by possessing their lamps.  This indicate all ten virgins are regenerated (spirit awakened and Spirit indwelt) believers. They are new creations.

Now the prudent foresaw that their lamps will require sufficient oil for the journey to meet their bridegroom but the other five did not care about that. Moreover the oil needed to be purchased not freely obtained.

And trim their lamps – Soul wake up happens when the spirit join the soul.  After awakening there is no original humiliated human body but a body that is compatible with the bridegroom.  The spirit returned to God is now retuned back to the soul brings back with the oil only what the soul had at the death.  Trimming is turning to the spirit and exercising the spirit burning the human spirit with the holy spirit as the oil, having the thoughts of the bridegroom, getting thrilled about his coming, checking the quality and sufficiency of their adornment, getting ready to meeting Him.

Alas, five of them found they are not ready. Their being does not give a personnel satisfaction to them. For they themselves knew that they do not have the required ornaments to beautify themselves, they felt not naked as Adam and Eve felt in the garden but insufficient to marry the proposed bridegroom.  They were foolish because they didn’t realise this matter while they were living. They are going to miss the reward!

They needed the ornaments to adorn themselves. They saw the other five virgins are happy and comfortable for they had the required oil.  They asked can we borrow. Can you share yours with us?

The reply is sorry. We do not know how long we have to wait for and we too may run out of oil. We suggest that you go and buy for yourself and come back. There is no any other option for the foolish virgins. They went to buy.

Where did they go?  The oil was purchased in the earthly realm, at present they are outside this realm so they needed to go back to the earth where they can sell what they have and buy what they need. (We, many times do not see this matter, even though we are children of God we do not know how to do the business of the kingdom of our Father.  We bury the lord’s talents). 

They went and did buy sufficient oil this time and came back to meet the bridegroom and present themselves. The parable does not tell us how long it took them to buy the oil.

Lord, Lord, open up for us.  At the first instance, the bridegroom came to meet the virgins.  Now the left-out virgins are coming to the bridegroom for they knew where he is at. But it was late, the door was shut, the lord has moved on, it will be strange to accept new ones at this time.  So they suffer loss of enjoying the Christ as the bridegroom until the age change take place that is approx. 1000 years. They cannot enter into the master’s joy for some time.  The doors are shut.

But He answered “Truly I say to you, I do not know you”. 

What is being emphasized here is not the initial burning but whether there is extra oil in the vessel (soul) for longer burning.  We need our souls to be transformed to match Christ by the process of Spirit filling our soul (as our vessel).

1Thes 5:23 And the God of peace Himself sanctify you wholly, and may your spirit and soul and body be preserved complete, without blame, at the coming of our Lord Jesus Christ.

Mat 16:25 For whoever wants to save his soul-life shall lose it; but whoever loses his soul-life for My sake shall find it.

Watchman Nee comments, Believers today do not understand how essential it is to be filled with the Holy Spirit. The oil in the lamp is not sufficient to burn after midnight; only the oil in the vessel will meet the requirement. God’s only begotten Son is freely given, but the oil in the vessel must be bought.

“Buy the truth” (Prov. 23.23).  “Buy . . . gold refined by fire” (Rev. 3.18).  “Buy . . . white garments” (Rev. 3.18), “Buy . . . eyesalve” (Rev. 3.18)

I will give a short version of this in Tamil next.    

Glory to God.  

Loga



__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

இது எனது அறிவு - உதவிய நூல் – The Finest of The Wheat by வாச்மன் நீ

புத்தியுள்ளவர்களும் - இவர்களை உண்மையும் விசுவாசமும் உள்ள விசுவாசிகளுக்கு  ஒப்பிடலாம் 

புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்  -  இவர்கள் ஏனோதானோ என்று வாழும் கிறிஸ்தவர்கள் , கிறிஸ்துவின் படிப்பினைகளை அலட்சியம் செய்தவர்கள்.  

தீவட்டி - இரட்சிப்பின்போது மறுபடி ஜனிப்பிக்கபட்ட ஆவி (ஆவியானவர் வசிக்கின்ற மனித ஆவி - human spirit indwelt by the holy spirit),புதிய மனிதன்(new creation)

எண்ணெய்  -- பரிசுத்த ஆவி.

தங்கள் பாத்திரங்களில் - தங்கள் ஆத்துமா 

மணவாளன்  - கிறிஸ்து 

வரத் தாமதித்தபோது - கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட (திருமண) ஒப்பந்தத்திலிருந்து அவர்கள் மரிக்கும்வரை உள்ள காலம் என்று கூறலாம்  

எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள் - எல்லாரும் இறந்து விட்டார்கள் 

நடுராத்திரியிலே: தூங்கும் நேரம், எதிர்பாரத நேரம்,  

இதோ மணவாளன் வருகிறார்அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் - தூதரின் அறைகூவல் 

தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள் - ஆவி ஆத்துமாவோடு இணைதல்,  இறந்த நிலையில் இருந்து மீண்டும் இயங்கும் நிலைக்கு வருதல்.  

எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே -  ஆவியில் பயிற்றப்படாதவர்கள், ஆத்துமா பரிசுத்தப்படாதவர்கள்,மணமகனுக்கு  தகுதியில்லாத நிலையை உணருதல்.

புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள்எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள்

பிரதியுத்தரமாக: அப்படியல்லஎங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடிநீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய்உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். -    இங்கு கடன் வாங்க

முடியாத நிலையை மட்டுமல்ல, எண்ணையை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் என்றும் படித்துக்கொள்ளுகிறார்கள்.

அவர்கள் வாங்கப் போனபோது கொடுக்கல் வாங்கல்  பூமியில்தான்நடக்கிறது. நாம்ஒருவிலை கொடுத்துதான் ஆவியானவரை நம்முடைய ஆத்துமா வுக்குள் வளர்க்கலாம் .(we must lay down our soul life to be filled with the holy spirit)

மணவாளன் வந்துவிட்டார்ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்கதவும் அடைக்கப்பட்டது.ஹனிமூன் காலம் தொடங்கி  விட்டது  - The millennium  age has begun.

பின்புமற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரேஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்., அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச்

சொல்லுகிறேன் என்றார்.  -  Closing date has passed they have to wait for the next in-take, it may be a thousand year.

தேவனுடைய பிள்ளைகளில் அநேகர் தாம் இரெட்சிக்கப்பட்டபொழுது தமது ஆவிக்குள் பெற்றுக்கொண்ட தேவஆவியோடு தமது கிறிஸ்தவ வாழ்க்கையை நிறுத்திக்கொள்ளுகிறார்கள்.

பரிபூரணமாக அவரைப்பெற்றுக்கொள்ளுவதில்லை.  பரிபூரணத்தின் அவசியத்தையே கிறிஸ்து இந்த உவமையில் சுட்டிக்காட்டுகிறார்.

எபேசியர்  4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின்

அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

மேலும்   1தெச 5:23,  மத்16:25,   மத்25:21 பார்க்கவும்.

“Buy the truth” (Prov. 23.23).  “Buy . . . gold refined by fire” (Rev. 3.18).  “Buy . . . white garments” (Rev. 3.18), “Buy . . . eye salve” (Rev. 3.18)

தேவனுக்கு மகிமை 

Loga



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களே,



நீதிமொழிகள் 10:5 கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

'அறுப்பு காலமாகிய' மணமகன் வரும் காலத்தில் ஆயத்தம் இல்லாமல் தூங்கியதே புத்தியில்லாத ஐந்து ஸ்திரிகளின் தவறாக கருதுகிறேன்.. கர்த்தர் சொன்ன இந்த புத்தியில்லாத ஐந்து ஸ்திரிகளின் உவமையின் சாரமாக அடியேன் அறிவது யாதெனில்,

  • புத்தியுள்ளவர்கள்,புத்தியில்லாதவர்கள் யாவருக்கும் பாகுபாடு இல்லாமல் எண்ணெய் (தேவ ஊழியம்/தாலந்து/வரம்/அபிஷேகம்/கனி) தேவனால் அருளப்படுகிறது.. 
  • ஆயினும் புத்தியோடு இறுதிவரை  எண்ணெயைக் காத்துக்கொள்ளுகிரவர்களின் காரியமே முடிவில் தேவனது பார்வையில் ஏற்புடையதாகிறது... ( ராஜாவிற்கு (அகாஸ்வேரு) முன் நிற்கதக்கதாக செய்யப்படும் ஆயத்தத்தை பற்றி எஸ்தர் ஆகமத்தில் சொல்லபட்டுல்லதும் கவனிக்கத்தக்கது )

ஏற்ற காலம் வரை கர்த்தர் தந்ததை காத்துக்கொள்ள முடியாதவர்கள் புத்தியீனர்களே.. இக்காரியதிலிருந்து பரலோகத்தின் கதவுகள் புத்தியீனரின் விண்ணப்பங்களுக்கு திறக்கிறதில்லை என்பது தெளிவாகிறது... 

'புத்தி' தொடர்பான மற்ற வசனங்களை ஆராயும்போது தகவல்களின் எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தலாம்.. 'கூப்பிடும் ஞானத்தை' பற்றியும் 'சத்தமிடும் புத்தியை' பற்றியும் நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.. இந்த சத்தம் தேவனாலும்,அவர் அருளிய வேதத்தை போதிக்கும் மனிதர்களாலும் உண்டாகிறது..

நீதிமொழிகள்

8 அதிகாரம்


34. என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

35. என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

36. எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது. 


இவ்வசனங்களில் 'என்','எனக்கு' என வரும் பதங்கள்,'புத்தியையும்',அதினால் வரும் 'ஞானத்தையும்' குறிக்கிறது. 

மேற்கூறிய புத்தியற்ற ஸ்திரிகள்,புத்தியுள்ளவர்களுடனே மணவாளனின் கதவு நிலையருகே காணப்பட்டாலும், காத்திருந்தாலும், மணவாளனுடன் பிரவேசிக்க  தேவையானவைகளை முன்பே செலவழித்து, ஆயத்தமாய் வைக்காமல் உறங்கிவிட்டார்கள். ஆகவே எதிர்கொண்டுபோக தகுதியற்றவர்களாகி  கர்த்தரிடத்தில் பிரவேசிக்கும் தயவை இழக்கிறார்கள்.. கர்த்தரால் மறக்கவும்படுகிறார்கள்..

தேவன் புத்தியீனத்திற்க்கு தம் பேரெழுதப்பட்ட ஜனங்களாகிய நம்மை காப்பாராக!!! 
---------------------------------------------------------------------------------------------------

கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!aww


-- Edited by JOHN12 on Thursday 20th of December 2012 02:27:25 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோ.நேசன் அவர்களே,

//சகோ. ஜான்12 
அறுப்பு காலமாகிய' மணமகன் வரும் காலத்தில் ஆயத்தம் இல்லாமல் தூங்கியதே புத்தியில்லாத ஐந்து ஸ்திரிகளின் தவறாக கருதுகிறேன்..
என்ற வார்த்தைகள்படி, தூங்கியது தவறாக இருக்க வாய்ப்பு இல்லை எனலாம் ஏனெனில் வசனம் சொல்வது  5. மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.  
இங்கு புத்தியுள்ளவர்கள் இல்லாதவர்கள் எல்லோருமே தூங்கிவிட்டார்களே சகோதரரே. பிறகு புத்தியில்லாதவர்கள் மட்டும் தள்ளப்பட காரணம் அறிய வேண்டுமே.  அனைவரும் தூங்கியதாக வேதத்தில் உள்ளது..//

எல்லாரும் தூங்குகிறார்கள் தான் சகோதரரே. ஆனால், நான்  புத்தியில்லாதவர்கள் 'ஆயத்தம்' இல்லாமல் தூங்கியதை எழுதியிருக்கிறேன். 

I WROTE//அறுப்பு காலமாகிய' மணமகன் வரும் காலத்தில் ஆயத்தம் இல்லாமல் தூங்கியதே புத்தியில்லாத ஐந்து ஸ்திரிகளின் தவறாக கருதுகிறேன்..//
புத்தியுள்ளவர்கள் ஆயத்தத்தோடு தூங்கியதையும்,புத்தியற்றவர்கள்  ஆயத்தம் இல்லாமல் தூங்கியதையும் பற்றிய வசனங்கள் உண்டே!!

சகோ.LOGA அவர்களே,

தங்களின் விளக்கங்கள் so crisp..  
அருமையான,ஆரோக்கியமான விளக்கங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!! கர்த்தர் தங்களை ஆசிர்வதிப்பாராக !!
---------------------------------------
தேவாதிதேவனுக்கு மகிமை உண்டாகுக!!


-- Edited by JOHN12 on Thursday 20th of December 2012 03:53:28 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இங்கு பதிவிடபட்டுள்ள நல்ல கருத்துக்களுக்கு நன்றி! என்னுடைய தியான கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
 
எல்லா காரியங்களிலும் புத்தியுள்ள கன்னிகைகளை போலவே நடந்துகொண்ட புத்தியில்லாத கன்னிகைகள்,  எந்த காரியத்தில் ஆயத்தம் இல்லாமல் இருந்தார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி என்று கருதுகிறேன்.  
 
"தீவட்டி எரிவதற்கு தேவையான கூடுதல் எண்ணெயை உடன் எடுத்து வரவில்லை" என்பதே அவர்கள் மேலுள்ள முக்கிய  ஆயத்தமின்மை என்னும் குற்றச்சாட்டு.
 
எனவே "எண்ணெய்" என்ற வார்த்தை, எதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது என்பதை நாம் வேத வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் அவர்கள் எவ்விதத்தில் தகுதியற்றவர்களாநார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
 
சங்கீதம் 23:5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
 
சங்கீதம் 92:10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன் 
 
நம் பாத்திரம் நிரம்பிவழிய தேவஆவியின் அபிஷேகம் அவசியம்!  எண்ணெய் என்பது அபிஷேகத்துக்கு ஒப்பாக கூறப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.
 
இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் தேவனின் அபிஷேகம் நம்மேல் இருந்தால் நாம் தூங்கினாலும் எழுந்தவுடன் தேவனை நினைக்கும் ஒரு நிலை தானாகவே உண்டாகும்.  தேவனின் அபிஷேகத்தை இழந்த நிலையில்  தூங்கினால், தூங்கி எழுந்தவுடன் ஒரு வெறுமையே நம்மில் உண்டாகும்.   
 
எனவே, இங்கு பெற்ற அபிஷேகத்தை சரியாக பேணி காக்க முயற்சி எடுக்காமல்  இழந்து போனவர்களையே "புத்தியற்றவர்கள்" என்று வசனம் குறிப்பிடுகிறது என்பது எனது கருத்து.  இவ்வாறு இழந்து போனவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது இல்லை என்பதை கீழ்கண்ட வசனம் உறுதிசெய்கிறது.
 
எபிரெயர் 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
இவர்கள் பிரகாசிக்கபட்டவர்கள்தான்! பரவ ஈவை ருசிபர்த்தவர்கள்தான்! பரிசுத்த ஆவியை  பெற்றவர்கள்தான் தேவனுடைய வார்த்தையை சித்தத்தை அறிந்தவர்கள்தான்! இனிவரும் உலகத்தின் பலனைகூட ருசி பார்த்தவர்கள்தான்!
ஆனாலும் அவர்களை அறியாமலேயே உலக பொருட்கள் மீதோ அல்லது  மாம்ச சிந்தையிலோ, ஜீவனத்தின் பெருமையாலோ  ஈர்க்கபட்டு தேவனை மறுதலித்து பிரிந்து போனவர்கள்.  இவர்களுக்கு தாஙகள் தேவனின்  அபிஷேகத்ததை இழந்திருப்பது இவர்களுக்கே தெரியாது எனவேதான் "மணவாளன் வருகிறார்" என்ற சத்தம் கேட்டவுடன், நமக்கும் அவருடன் இடம் உண்டு என்று அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் "வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று" கெஞ்சுகிறார்கள்:   
 
ஆனால் ஆண்டவரோ:   உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்  25:12.
 
இதேபோல்  "எவ்விடத்தாரோ உங்களை அறியேன்" என்று சொல்லி  கைவிடப்பட்டவர்களின் தன்மை என்ன? அவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை  இன்னொரு வசனமும் உறுதி செய்கிறது  
 
மத்தேயு 7:23   நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
 
இவர்கள் யாரென்று பார்த்தால்:
 
மத 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
 
பிதாவின் சித்தம் என்னவென்பதை அறிந்து  அதை செய்ய விளையாமல், "கர்த்தாவே கர்த்தாவே" என்று  அவர் பெயரை சொல்லிக்கொண்டு இன்றைய பெர்பெற்ற பல கிறிஸ்த்தவர்கள் செய்யும் "தீர்க்க தரிசனம்  சொல்லுதல், பிசாசு துரத்துதல், அற்ப்புத அதிசயம் செய்தல்  போன்ற காரியங்களை  செய்து பணம்  பண்ணும் வேலையே செய்தவர்களே அந்த புத்தியில்லாதவர்கள் எனது கருத்து!
 
யூதா 1: 20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,20. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
.
(இந்த கருத்து என்னுடைய சொந்த கருத்து. இந்த கருத்து குறித்து  இன்னும் அதிக விளக்கம்/வெளிப்பாடு இருக்குமாயின் சகோதரர்கள் பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.)

 



-- Edited by SUNDAR on Sunday 23rd of December 2012 09:36:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

புத்தியில்லாத கன்னிகளை இறைவன் நிராகரிக்க காரணமான அவர்களின்  குறைபாடுகள் குறித்து சகோதரர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சில ஒற்றுமைகளும் இருப்பதை அறிய முடிகிறது.

சகோ. ஸ்டீபன்   - எதிர்பார்த்த நேரத்துக்குள் ஆண்டவர் வராததால் சோர்ந்துபோனவர்கள்.      

சகோ. எட்வின்   -  ஆண்டவர் வர தாமதமானதால் ஆதி அன்பை/ பரிசுத்தத்தை /விசுவாசத்தை விட்டவர்கள் 

சகோ. லோகா     -  பரிபூரணமாகாத நிலையில் இருந்தவர்கள் 

சகோ. ஜான்        -  ஆண்டவர்  கொடைகளை இறுதிவரை காத்துகொள்ளாதவர்கள்.
 
இவ்வளவு நாளில் இறவன் வருவார் என்று எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில் அவர் வர தாமதமானால் சோர்ந்து போவது இயற்கையே எனவே எந்நேரமும் வரலாம் என்ற துடிப்போடு இருக்கவேண்டியது முக்கியமே அதுபோல் ஆண்டவர் வர தாமதமான காரணத்தால் நாம் பரிசுத்தத்தை விட்டுவிட கூடாது என்பதும் முக்கியமே. இந்த  கருத்து குறித்து இயேசுவின் கீழ்கண்ட உபதேசம் போதிக்கிறது  
 
மத்தேயு 24:48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
49 தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
 50. அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,51. அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்;   
சகோ. ஜான்12 
அறுப்பு காலமாகிய' மணமகன் வரும் காலத்தில் ஆயத்தம் இல்லாமல் தூங்கியதே புத்தியில்லாத ஐந்து ஸ்திரிகளின் தவறாக கருதுகிறேன்..
என்ற வார்த்தைகள்படி, தூங்கியது தவறாக இருக்க வாய்ப்பு இல்லை எனலாம் ஏனெனில் வசனம் சொல்வது  5. மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.  
இங்கு புத்தியுள்ளவர்கள் இல்லாதவர்கள் எல்லோருமே தூங்கிவிட்டார்களே சகோதரரே. பிறகு புத்தியில்லாதவர்கள் மட்டும் தள்ளப்பட காரணம் அறிய வேண்டுமே.  
    
அடுத்து, இயேசுவின் வார்த்தைகள் பெரும்பாலும் உவமைகளாக இருந்ததால் மேலும் சகோ. லோகா  அவர்களின் விளக்கங்கள் அருமையாகவும்  என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றதுபோல் தெரிகிறது      

புத்தியுள்ளவர்களும் - இவர்களை உண்மையும் விசுவாசமும் உள்ள விசுவாசிகளுக்கு  ஒப்பிடலாம் 

புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்  -  இவர்கள் ஏனோதானோ என்று வாழும் கிறிஸ்தவர்கள் , கிறிஸ்துவின் படிப்பினைகளை அலட்சியம் செய்தவர்கள்.  

தீவட்டி - இரட்சிப்பின்போது மறுபடி ஜனிப்பிக்கபட்ட ஆவி (ஆவியானவர் வசிக்கின்ற மனித ஆவி - human spirit indwelt by the holy spirit),புதிய மனிதன்(new creation)

எண்ணெய்  -- பரிசுத்த ஆவி.

தங்கள் பாத்திரங்களில் - தங்கள் ஆத்துமா 

மணவாளன்  - கிறிஸ்து 

வரத் தாமதித்தபோது - கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட (திருமண) ஒப்பந்தத்திலிருந்து அவர்கள் மரிக்கும்வரை உள்ள காலம் என்று கூறலாம்  

எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள் - எல்லாரும் இறந்து விட்டார்கள் 

நடுராத்திரியிலே: தூங்கும் நேரம், எதிர்பாரத நேரம்,  

இதோ மணவாளன் வருகிறார்அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் - தூதரின் அறைகூவல் 

தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள் - ஆவி ஆத்துமாவோடு இணைதல்,  இறந்த நிலையில் இருந்து மீண்டும் இயங்கும் நிலைக்கு வருதல்.  

எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே -  ஆவியில் பயிற்றப்படாதவர்கள்ஆத்துமா பரிசுத்தப்படாதவர்கள்,மணமகனுக்கு  தகுதியில்லாத நிலையை உணருதல்.

       


__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

 

To Loga –

Dear Brother in Christ, Greetings in the name of Lord God!
I agree with your suitable explanation for this parable. Please post this message in the forum so that
 the readers can realise the truth.

From – Sundar

அருமைச்சகோதரர் சுந்தர் அவர்கள் எனக்குத்தந்த அனுமதியோடு கீழேயுள்ள எனது விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்:

Dear brother Sundar,

I humbly bring to your attention of two points you noted in the forum that are not exactly fitting with the interpretation of the parable. I do not want you or any others who read the forum not to take too lightly the importance of this parable.

The first point:

Sundar:எனவே, இங்கு பெற்ற அபிஷேகத்தை சரியாக பேணி காக்க முயற்சி எடுக்காமல்  இழந்து போனவர்களையே "புத்தியற்றவர்கள்" என்று வசனம் குறிப்பிடுகிறது என்பது எனது கருத்து. 

இந்த உவமையின் பிரதான படிப்பினை நாம் பெற்ற எண்ணெய்யை இழக்கக்கூடாதென்பதல்ல மாறாக இன்னும் அதிகமாக எண்ணெய்யை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. நாம் மறுபடி பிறந்தபொழுது எமது ஆவியில் எண்ணெய்யைப் பெற்றோம். இது இரட்சிப்பின் ஆரம்ப நிலை மட்டுமே. தேவனுடைய அழைப்பு இத்தோடு முடிவதில்லை. நம்முடைய முழு மனிதனும்  (ஆவி,ஆத்துமா,சரீரம்)   அவருடைய பிள்ளையாக வரவேண்டும் என்பதே அவரது அழைப்பு. இதற்கு அவரது ஆவி எமக்கு இன்னும் அதிகமாகத்தேவை.  கிறிஸ்துவை நாம் உண்டு (eat) தேவனுக்கு நாம் கீழ்ப்படியும்போது அவரது ஆவி நமது ஆவியில் இருந்து நம்முடைய ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கும் பரவுகிறார்.  இது கிறிஸ்து நம்மில் வளர்வதைக் குறிக்கும். இது இரட்சிப்பின் இரண்டாவதுபடி. இது மறுபடி பிறப்பதோடு ஆரம்பித்து எமது மரணம் வரைக்கும் அல்லது கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரைக்கும் செல்லும், இதை எபேசியர் 4:11, 1தெச 5:23  இல் பார்க்கலாம்.

எபே 4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

1தெச 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

 

The second point:

Sundar: “அபிஷேகத்ததை இழந்திருப்பது இவர்களுக்கே தெரியாது எனவேதான் "மணவாளன் வருகிறார்" என்ற சத்தம் கேட்டவுடன், நமக்கும் அவருடன் இடம் உண்டு என்று அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் "வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று" கெஞ்சுகிறார்கள்:   

We may notice that the foolish virgins, when they were woken up, they know exactly what they are missing.  As soon as they realised that they do not have the oil in their vessel they went to collect the oil. According to the parable, they of course collected it before they come and knock on the door.  So this time they had extra oil in the vessel but the issue was the time they arrived.  They are late for the event, the wedding ceremony has already started doors are shut. 

The lesson we learn from this parable is not to waste any day of our life. Let us collect oil every day by paying a price until we die or the lord comes.  The key question arise here is how can we collect this oil in our practical daily living (what are the means to collect the oil in our vessel)?

மூடக்கன்னிகைகள் விழித்தெழும்பியபோது தங்களிடம் என்ன இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அறிந்தவுடன் அதைப்பெற்றுக்கொள்ள விரைந்து போனார்கள். பெற்ற பின்பாடு மணமண்டபம் வந்து கதவைத் தட்டினார்கள். இம்முறை அவர்கள் பாத்திரமும் எண்ணெய் கொண்டிருந்தது. ஆனாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் வரவேண்டிய நேரத்துக்கு வராமல் பிந்தியதுவே காரணம். 

இந்த உவமையில் இருந்து நாம் படிப்பது என்ன? எமது நாள் ஒன்றையும் நாம் வீணாக்கக்கூடாது. எமக்கு இவ்வுலகில் உள்ள உடமைகளைக்கொடுத்து மறு உலகத்துக்குத்தேவையான ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவினுடையநிறைவானவளர்ச்சியின்அளவுக்குத்தக்கபூரணபுருஷராகவேண்டும். எங்கள்ஆவிஆத்துமாசரீரம்முழுவதும் பரிசுத்தப்பட, தினமும் நாம் அவரில் நிலைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

 

சகோதரர்களே

இதை உங்கள் நாளாந்த வாழ்வில் எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திதுப்பார்த்து எம்மோடு பகிர்ந்துகொள்வீர்களா?

Glory to God.

Loga

 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோ. ஜான்12 ///எல்லாரும் தூங்குகிறார்கள் தான் சகோதரரே. ஆனால், நான்  புத்தியில்லாதவர்கள் 'ஆயத்தம்' இல்லாமல் தூங்கியதை எழுதியிருக்கிறேன்.///

 

சகோதரரின் "ஆயத்தம் இல்லாமல்" தூங்கினார்கள் என்ற விளக்கம் சரியானதே. எனவே எதில் ஆயத்தம் இல்லாமல் அவர்கள் தூங்கினார்கள்? என்பதை குறித்து அறியவேண்டியது அவசியம்.     


Bro. Loga
//கிறிஸ்துவினுடையநிறைவானவளர்ச்சியின்அளவுக்குத்தக்கபூரணபுருஷராகவேண்டும். எங்கள்ஆவிஆத்துமாசரீரம்முழுவதும் பரிசுத்தப்பட, தினமும் நாம் அவரில் நிலைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.///

தங்களின் விளக்கங்கள் நன்றாகவே இருக்கிறது நானும் அதை ஏற்கிறேன் ஆனாலும் தங்களின் இந்த கருத்தில் என்னுடைய சந்தேகம் என்னவெனில் ஒரு மனுஷனை கிறிஸ்த்துவுக்குள் கொண்டுவருவதே அரும்பாடாக இருக்கிறது. அதிலும் நம்  இயேசுவின் வருகையின்போது  பூரணமானவர்கள் மட்டும்தான் அவரோடு கடந்துபோக முடியுமா? மற்றவர்கள் எல்லோருமே (பாதிக்கு பாதி) தள்ளபட்டு போவார்களா? அப்படி என்றால் இன்றைய கிறிஸ்த்தவ உலகில் எத்தனைபேர்கள் தப்பிக்க முடியும்?  குறை இல்லாத மனுஷன் யார்?   


தேவன் குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால் இங்கு ஒருவரும் மிஞ்சமுடியாதே! 



__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Nesan wrote:

=======================================================================================================================

இயேசுவின் வருகையின்போது  பூரணமானவர்கள் மட்டும்தான் அவரோடு கடந்துபோக முடியுமா? மற்றவர்கள் எல்லோருமே (பாதிக்கு பாதி) தள்ளபட்டு போவார்களா? அப்படி என்றால் இன்றைய கிறிஸ்த்தவ உலகில் எத்தனைபேர்கள் தப்பிக்க முடியும்?     

========================================================================================================================

அண்ணா கீழேயுள்ள வசனங்களை கொஞ்சம் பாருங்கள்: 
/
மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
யோவான் 13:10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
லூக்கா 13:24 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
/
எல்லோரும் உட்பிரவேசிக்க முயர்ச்சிப்பார்களாம்  ஆனால் முடியாமல் போகும் என்று  இயேசப்பாவே சொல்லியிருக்கிறாரே.  

 



-- Edited by JOHNJOSH on Friday 28th of December 2012 04:06:55 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

யாக்கோபு 2:13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத

நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

இந்த வசனத்தையும் கவனிக்க தவற கூடாது.

இதன் அர்த்தம் என்ன?

நியாய தீா்ப்பன்று கர்த்தர் இரக்கம் காட்டக்கூடும்.....?  confuse



-- Edited by t dinesh on Friday 28th of December 2012 05:19:03 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

 

சகோதரர் நேசனின் சந்தேகம். நம்  இயேசுவின் வருகையின்போது  பூரணமானவர்கள் மட்டும்தான் அவரோடு கடந்துபோக முடியுமாமற்றவர்கள் எல்லோருமே (பாதிக்கு பாதி) தள்ளபட்டு போவார்களாஅப்படி என்றால் இன்றைய கிறிஸ்த்தவ உலகில் எத்தனைபேர்கள் தப்பிக்க முடியும்?  குறை இல்லாத மனுஷன் யார்?   தேவன் குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால் இங்கு ஒருவரும் மிஞ்சமுடியாதே! 

அன்புச் சகோதரரே, நான் அறிந்ததை எழுதுகிறேன்,

1.  தேவன் குற்றம் பிடிக்கவல்ல எம்மைப் படைத்தது;    அவர், பிள்ளைகள் பெறவேண்டும், அவர்களைப்   பாராட்டி சீராட்டி வளர்க்க வேண்டும்தன் மூத்த குமாரனைப் போலாக்க வேண்டும் என்று இதைத்தான் அவர் செய்கிறார். அவர் யாவருக்கும் தகப்பன் அவரால் மாத்திரம்தான் இதைச் செய்ய முடியும். நாம் நல்ல குழந்தைகளாக அவருக்கு கீழ்ப்படியும்போது அவர் அதை இலகுவாகச் செய்ய முடியும். நிறைவு வரும்போது  பிள்ளைகளுக்கு நல்ல பரிசும்கிடைக்கும். கீழ்ப்படியாவிட்டால் நல்ல அடி கிடைக்கும் ஆனால் வீட்டைவிட்டுத் துரத்த மாட்டார். அவர் நல்ல தகப்பன்.

இங்கே,    நல்ல பரிசு - கலியாண விருந்து ;     நல்ல அடி - தற்காலிகமாக பூட்டப்பட்ட கதவு, (a temporary separation from the coporate enjoyment.)

ஆயிரவருஷ ஆட்சிக்குப்பிறகுகதவுதிறபடும், அப்போது அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். பெற்ற அடியால் அவர்களுக்குப்புத்தி வந்துமீண்டும் சென்று எண்ணையைச் சேகரித்துக்கொண்டார்களே.  

2. இன்னும் அழைக்கப்பட்டவர்களில் பாதிப்பேர்  கைவிடப்படுவதை லூக்கா 17: 34-35 இலும் காணலாம்.(இவர்கள் கிறிஸ்து வரும்போது உயிரோடிருக்கும் விசுவாசிகள். பத்துக்கன்னியர் உவமையில் பத்துப்பேரும் இறந்த விசுவாசிகள்.)

(34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான்.  35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்என்றார்.) 

3. மேலும், கிதியோனின் படையும் , ஜெரிக்கோ முறிடைப்பும்  தேவனுக்குஅநேகஆட்கள்தேவையில்லைஎன்பதைக்காட்டுகிறது. 

இந்த இரண்டு உதாரணமும் (கிதியோனின் படையும் , ஜெரிக்கோ முறிடைப்பும்)  முக்கியமாக கவனிக்கவேண்டியவை. ஏனென்றால் இன்று இட்சிக்கப்பட்ட நாம் கிறிஸ்து வருமுன்பாக நடக்கும் தேவனுடைய  கடைசி யுத்தத்தில் பங்குகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவோடு நாமும் இணைந்து போர் புரிந்தால், அவர் வருகையில் அவருடைய மகிமைக்குள் அழைக்கப்பட்டு அவருடைய சந்தோஷத்தில் பங்கு பெறுவோம். அல்லாவிடில் கைவிடப்படுவோம். (போர் - ஆவிக்குரிய போராட்டம்).   

 4. இதை இன்னுமொரு வகையாகவும்பார்க்கலாம். 

உயிரும் அதன் வளர்ச்சியும்.- ஒரு பெண் மணமுடிக்க வேண்டுமாயின் அந்தப்பெண் அதற்குரிய பக்குவத்தை அடைந்தாக வேண்டும். வயதுக்கு வந்த ஒரு ஆண் பக்குவமடையாத ஒரு குழந்தையை மணமுடிக்க மாட்டார். இதேபோல பூரணவளர்ச்சி பெறாத நாமும் கிறிஸ்துவை மணவாளனாக அடைய முடியாது. 

 

இரக்கமுள்ள தேவன் எமக்குத் தேவையான வளர்ச்சியை தரும்படியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும்  அவரை வாஞ்சையோடு கேட்போமாக.   

சகோதரர் நேசனுக்கும் நன்றி. 

Loga

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard