/////டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற விஷக்காய்ச்சல்களுக்குக் காரணமாகும் கொசுக்களை ஒழிக்க அரசிடம் முறையிட்டு முறையிட்டு சோர்ந்து போன ஜார்கண்ட்டில் உள்ள சாஸ் கிராம மக்கள் கொசுவையே தெய்வமாக்கி வழிபடத் தொடங்கி வினோத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கொசுவுக்கு சிலை வைத்து ஜார்கண்ட், பொகாரோ மாவட்டத்தில் உள்ள சாஸ் கிராம மக்கள் கும்பிட்டு வருகின்றனர்.
தேங்கும் நீர், குட்டை, மற்றும் குப்பைக் கூளங்களை அகற்றக் கோரியும், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியாவை ஒழிக்கக் கோரியும் கொசுக்களை விரட்டக்கோரியும் அவர்கள் அரசிடம் மன்றாடி விட்டனர். ஆனால் அரசு எதையும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இதனையடுத்து அந்த மக்கள் இந்த நூதன போராட்டத்தில் குதித்துள்ளனர்.
'டெங்கு, மலேரியா, ஆகிய விஷக்காய்ச்சல்கள் சாஸ் பகுதி முழுதும் பரவி வருகிறது. ஒருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடைசித் தஞ்சமாக் கொசுவுக்குச் சிலை வைத்து தயவு செய்து எங்களை கடிக்காதே, காட்டுக்குப் போய்விடு என்று கையெடுத்துக் கும்பிட்டு வருகிறோம். கொசுவலை உள்ளவர்கள் பிழைக்கிறார்கள், ஏழைகளை டெங்கு அதிகம் பாதித்து வருகிறது" என்று கூறுகின்றனர் சாஸ் கிராம மக்கள்.
கொசுவிக்கு சிலை வைத்து ஆர்த்தி எடுத்து, சூடம் காட்டி, ஊதுபத்தி கொளுத்தி, அகல் விளக்கேற்றி கொசுவை மன்றாடிக் கும்பிட்டு வருகின்றனர் இந்த கிராம மக்கள்.
கடந்த 50 ஆண்டுகளில் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளதாம்!///
சிலை வழிபாடு முதன் முதலில் இப்படி ஒரு பயத்தினால்தான் ஆரம்பித்து இருக்கும் என்பதை இந்த செய்தியின் மூலம் நாம் அறியமுடிகிறது.
சாத்தனுக்கும் அவன் செய்யும் தீமைகளுக்கும் பயந்த மானிடர்கள் அவனுக்கு சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள்.