பரி. பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகள்.
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
சகோ. JOHNJOSH சுட்டியிருக்கும் இந்த இரண்டு வசன கருத்துக்களும் நேர் எதிர்மறையாக தென்படுவது போல தோன்றினாலும் இந்த் இரண்டு வசனங்களுமே வேதத்தில் சொல்லபட்டுள்ளதால், இரண்டுக்கும் ஒவ்வொரு பொருள் நிச்சயம் உண்டடு
அதாவது நாம் பயப்பட வேண்டிய இடத்தில் பயப்பட வேண்டும்! பயப்பட வேண்டாத இடங்களில் கலங்காமல் பயப்படாமல் துணிந்து நிற்க வேண்டும் என்பதே இவ்வசனங்களின் பொருள்:
எங்கெங்கு பயப்பட வேண்டும் எங்கெங்கு பயப்பட கூடாது எனபது குறித்து வேதம் சொல்லும் சில வார்த்தைகளை இங்கு அறிய தருகிறேன்:
முக்கியமாக தேவனுக்கும் தேவனின் வார்த்தைகளுக்கும் பயப்பட வேண்டும்
மத்தேயு 10:28ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
எரேமியா 10:7 தேவரீருக்கே பயப்படவேண்டியது;
எதற்ககெல்லாம் பயப்பட கூடாது என்பது குறித்து கீழுள்ள வசனங்கள் போதிக்கின்றன:
.
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்;
லூக்கா 21:9யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்;
வெளி 2:10நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே;
ஏசாயா 51:7மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
ஏசாயா 8:12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், (இருங்கள்)
எரேமியா 42:11நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப்பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்,
ஏசாயா 10:24ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே;
.
பொதுவாக மேலேயுள்ள வசனங்களின் மொத்த கருத்து சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்ல எந்த மனுஷர்களுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதே! அதுவே வேதம் போதிக்கும் கருத்து!
.
ஆகினும் தாங்கள் சுட்டியுள்ள வசனத்தில் பவுல் அவர்கள் ரோமர் 13:7 எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; என்று சொல்லியிருந்தாலும், அப்படி மனுஷனுக்கு பயப்படாமல் இருக்கவும் ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறார்
.
ரோமர் 13:3மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்க வேண்டுமானால், நன்மைசெய்,
.
ஆம்! தீமை செய்கிறவர்களாக இருந்தால் எல்லோருக்கும் பயப்படவேண்டிய நிலை வரும்! "பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய்"
. உண்மையும் உத்தமமும் நேர்மையும் நன்மை செய்பவராகவும் இருந்தால் எந்த மனுஷனுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
-- Edited by SUNDAR on Tuesday 8th of January 2013 10:41:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)