இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேலான அதிகாரங்களுக்கு பயப்படணுமா? கூடாதா?


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
மேலான அதிகாரங்களுக்கு பயப்படணுமா? கூடாதா?
Permalink  
 


பரி. பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகள்.

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

ரோமர் 13:7  எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; 
 

ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லும் வார்த்தைகள் இவைகள்:

ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்;

ஏசாயா 41:13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

இந்த இரண்டு வசனத்துக்கும் இடையில் உள்ள சரியான விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே!!!

சத்ருக்கு பயப்பட கூடாது..அதாவது சத்ருவால்  வரும் தடை, அவனால் எழுப்ப படும் மனிதர்களுக்கு பயபடாமல் தேவ சித்தம் நடப்பிக்க வேண்டும்..
மேலான அதிகாரத்திற்கு தானியேல்,யோசேப்பு (புறஜாதி ராஜாக்களுக்கும் ) கீழ்பட்டது போல கீழ்படிய வேண்டும்..
இயேசு ராயனுக்கு வெள்ளி பணத்தை வரியாக  செலுத்தி அதிகாரத்திற்கு கீழ்பட்டு காணப்பட்ட காரியமும் கருத்தில் கொள்ள தக்கது..


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

JOHNJOSH wrote:


மேலான அதிகாரங்களுக்கு பயப்படணுமா? கூடாதா?

சகோ. JOHNJOSH சுட்டியிருக்கும் இந்த இரண்டு வசன கருத்துக்களும் நேர் எதிர்மறையாக தென்படுவது போல தோன்றினாலும் இந்த் இரண்டு வசனங்களுமே  வேதத்தில் சொல்லபட்டுள்ளதால்,  இரண்டுக்கும் ஒவ்வொரு பொருள் நிச்சயம் உண்டடு

 

அதாவது நாம் பயப்பட வேண்டிய இடத்தில் பயப்பட வேண்டும்! பயப்பட வேண்டாத இடங்களில் கலங்காமல்  பயப்படாமல்  துணிந்து நிற்க வேண்டும் என்பதே இவ்வசனங்களின் பொருள்:     

 

எங்கெங்கு பயப்பட வேண்டும் எங்கெங்கு பயப்பட கூடாது எனபது குறித்து வேதம் சொல்லும் சில வார்த்தைகளை இங்கு அறிய தருகிறேன்:  

முக்கியமாக தேவனுக்கும் தேவனின் வார்த்தைகளுக்கும் பயப்பட வேண்டும்  
.
சங்கீதம் 111:10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
மத்தேயு 10:28 ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
எரேமியா 10:7  தேவரீருக்கே பயப்படவேண்டியது;  

எதற்ககெல்லாம் பயப்பட கூடாது என்பது குறித்து கீழுள்ள வசனங்கள் போதிக்கின்றன: 
.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; 
 
லூக்கா 21:9 யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; 
 
வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; 
 
ஏசாயா 51:7 மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
 
ஏசாயா 8:12 இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், (இருங்கள்)
 
யோவான் 14:27 உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
.
எதிரிகளுக்கு பயப்பட வேண்டாம்  
எரேமியா 42:11 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப்பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், 
ஏசாயா 10:24 ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே
.
பொதுவாக மேலேயுள்ள வசனங்களின் மொத்த கருத்து  சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்ல எந்த மனுஷர்களுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதே! அதுவே  வேதம் போதிக்கும் கருத்து!
.
ஆகினும் தாங்கள் சுட்டியுள்ள வசனத்தில் பவுல் அவர்கள் ரோமர் 13:7  எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்;   என்று சொல்லியிருந்தாலும், அப்படி மனுஷனுக்கு பயப்படாமல் இருக்கவும் ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறார்  
.
ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ  அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்க வேண்டுமானால், நன்மைசெய், 
.
ஆம்! தீமை செய்கிறவர்களாக இருந்தால் எல்லோருக்கும் பயப்படவேண்டிய நிலை வரும்! "பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய்"
.
உண்மையும் உத்தமமும் நேர்மையும் நன்மை செய்பவராகவும்  இருந்தால் எந்த மனுஷனுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

 



-- Edited by SUNDAR on Tuesday 8th of January 2013 10:41:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard