இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!
Permalink  
 


சுமார் இறுதினங்களுக்கு முன்னர் என்னுடைய இந்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது சமீப காலமாக நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகம் பெருகிவிட்டது என்று குறிப்பிட்ட  அவன், மனிதன் தாய் மகள் என்று பார்க்க முடியாத அளவுக்கு மிருக நிலைக்கு போய்விட்டான் என்றுசொல்லி அவர் சந்தித்த  சம்பவம் ஒன்றை என்னிடம் சொன்னார்.
 
கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு போயிருந்தபோது பல சிறு பிள்ளைகள் தெருவில் ஓடி
விளையாடிக்கொண்டு இருந்தார்களாம் ஆனால் 14 வயது மதிக்க தக்க ஒரே ஒரு பெண்பிள்ளை  மட்டும் தனியாக அமர்ந்து அழுதுகொண்டே இருந்ததாம். ஒரு நாள் அதை கவனித்த அவர் வீட்டில் எதோ பிரச்சனை என்று எண்ணி
விட்டுவிட்டாராம். ஒவ்வொரு நாளும் அந்த பிள்ளையின் அழுகை  தொடரவே அந்த பெண் பிள்ளையிடம் சென்று  நீ ஏன் தனியாக அமர்ந்து தினமும் அழுது கொண்டு  இருக்கிறாய்? மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டியதுதானே? என்று கேட்டாராம். அதற்க்கு அந்த பிள்ளை பதில் எதுவும் சொல்லவில்லையாம். இதை கவனித்த மற்ற பிள்ளைகள் "அங்கிள் அவள் தினமும் இப்படிதான் அழுகிறாள் காரணம் கேட்டால் சொல்வது இல்லை அவளை 
விட்டுவிடுங்கள்". என்று சொன்னார்களாம். ஆனால் என் நண்பனோ அந்த பிள்ளையிடம் அன்பாக பேசி "ஏன் அழுகிறாய் என்பதை என்னிடம் சொல், என்னால் முடிந்தால் நிச்சயம் தீர்த்துவைப்பேன்  என்று பலமுறை  சொல்லி கேட்ட  பின்னர் அந்த பிள்ளை சொன்ன வார்த்தைகள் என் நண்பனுக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் தந்ததாம்.
 
அதாவது அந்த பிள்ளையின் தகப்பனார் பல நாட்களாக இரவு இந்த பிள்ளை தூங்கும் பொது பக்கத்தில்வ வந்து அமர்ந்து தவறான இடங்களை தொட முயல்வதாகவும், ஒரு நாள் அந்த பிள்ளை இருக்கும் போதே நீலபடம் (Blue Film)  ஒன்றை வாங்கிவது வீட்டில் ஓட விட்டதாகவும். அவரது டார்ச்சரில் இருந்து  தப்பிப்பது  ஒவ்வொருநாளும் கடினமாகவும் வேதனையாகவும் இருப்பதாகவும் தெரிவித்து அழுததாம் 14 வயதே  நிறைந்த குழந்தைதனத்தை விட்டு இன்னும்  கடக்காத அந்த சிறு பிள்ளை.
 
இதை கேட்ட என் நண்பன் எந்த பதிலும் சொல்லமுடியாமல் அப்படியே உறைந்துபோய்விட்டானாம். அந்த பிள்ளையின் தகப்பனிடம் இதை போய் எப்படி சொல்வது அப்படியே சொன்னாலும் இவன்  ஊருக்கு போனபிறகும் அவர் துணிகரமாக பாவம் செய்ய இறங்கிவிட்டால் என்ன செய்வது இதை  எப்படித்தான் தீர்ப்பது என்று யோசித்து பார்த்தும் வழி எதுவும் தெரியாமல் அப்படியே விட்டுவிட்டு ஊருக்கு புறப்பட்டு வந்துவிட்டானாம்.
 
வேலியே  பயிரை மேயும் கதையாக பெற்ற தகப்பனே பிள்ளைகளை சூறையாடுவது என்பது நீண்டகாலமாக  நடந்து வருவதும் நாம்  அடிக்கடி செய்திகளில் கேட்பதுமான காரியமாக இருக்கிறது.
 
தஞ்சம் கொடுக்க கூடிய தகப்பனே தன சொந்த பிள்ளையை தாரமாக்க நினைப்பதும், தட்டி கேட்க வேண்டிய தாய் பிள்ளைகளை விட்டுவிட்டு ஒடிவிடுவதுமான கேவலமான ஈன செயல்களை பெரிய பெரிய மனுஷ பிசாசுகள் செய்ய துணியும்போது,  உலகமறியா இந்த இளந்தளிர்கள் பாவம் என்ன செய்ய முடியும்?
எங்கு சென்று அடைக்கலம் கேட்க முடியும்? 
 
அத்தோடு சில தரங்கெட்ட காதல் மன்னர்கள் படிக்கும் பிள்ளைகளை பின்தொடர்ந்து டார்ச்சர் பண்ணுவதும் பெண்  பிள்ளைகள எவ்வளவு  வெறுப்பை காட்டினாலும் விடாமல் தொடர்வதும்  இறுதியில் "எனக்கு கிடைக்காதவ எவனுக்கு கிடைக்க கூடாது" என்று  சொல்லி ஏதாவது எடாகூடமான காரியத்தை பண்ணி பாவமறியா அந்த பெண்  பிள்ளையின் வாழ்வை சீரழிப்பதும்  இன்று அதிகமாக நடக்கும்  காரியங்கள்.
 
எனது நண்பன் ஒரு இந்துவாக  இருந்ததால் அவனால் அந்த பிள்ளைக்கு சரியான தீர்வு எதையும் சொல்ல முடியவில்லை ஆனால் ஜீவனுள்ள தேவனை அறிதுள்ள என்னால் நிச்சயம் அதற்க்கு தீர்வு  சொல்ல முடியும்.
 
இந்த பாலியல் தொல்லை மட்டுமல்ல வெளியில் சொல்ல முடியாத்த எந்த ஒரு தொல்லையாலும் யார் கொடுக்கும்
தொந்தரவாலும் வாடும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. இந்த உலகத்தில் தகப்பன் என்று  இருப்பவர்கள் சிலவேளைகளில் சத்துருவாகவும்  சாவுக்கு ஏதுவான மிருகமாககூட மாறிபோகலாம் ஆனால் எல்லோரையும்விட மேலான நம்மேல் அதிக அக்கறையுள்ள  தகப்பன் ஒருவர்
நமக்கு உண்டு!  "நித்தியா பிதா" என்று அழைக்கப்படும் பேசும் தெய்வம்  ஒருவர் உண்டு! அவர்தான் ஆண்டவராகிய இயேசு. 
 
உங்களால் அவரை காண முடியாவிட்டலும் அவர் உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார். யாரும்  இல்லாத போதும்கூட அவர் உங்கள் அருகில் இருக்கிறார். எனவே எனக்கு  அன்பானவர்களே உங்களுக்கு விருப்பமில்லாத காரியத்தை யாராவது செய்ய துணியும்போது உங்களை யாராவது வர்ப்புருத்தும் போது. இயேசப்பாவிடம் வாய்திறந்து
உங்களின்  இதய குமுறல்களை சொல்லிவிடுங்கள், தொடர்ந்து சொல்லுங்கள் அவர் உங்களை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கவனித்து கொள்வார்.
 
பிரச்சனைகள் முற்றிலும் தீர ஒருசில நாட்கள் ஆகலாம் ஆனால் நீங்கள் அவரை அழைத்து சொன்னால் போதும் அவர்  உங்கள் அருகில் வந்துவிடுவார். பரம தகப்பனாகிய  அவர் உங்கள் அருகில் இருக்கும்போது எந்த மனுஷனும் உங்களை தீண்ட முடியாது!  முடியாது! முடியாது!
 
எனவே நீ இனி அழவேண்டாம், எந்த மனுஷனிடமும் சொல்லி புலம்ப வேண்டாம், தரம்கெட்டு திரிபவனோடு போராடவும்
வேண்டாம் (அப்படி போராடினால் ஒருவேளை சமீபகாலத்து  நிகழ்வுகள்போல அவன் ஆசிடை கூட ஊற்றிவிடலாம்) ஆனால் எந்த ஒரு சங்கடத்தையும் நீ  ஆண்டவரிடம் சொல்லும்போது அவர் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் உன் முகத்திலேயே அவன் முழிக்க முடியாத நீண்ட தூரத்துக்கு அவனை கொண்டுபோய்விடுவார். உங்கள் கண்ணீரெல்லாம்  அவரே துடைப்பார்!   
  
ஆம்! அது நம் ஆண்டவரால் நிச்சயம் கூடும்!   
  
(நான் வெறும் பேச்சுக்காக சொல்லும் கருத்து அல்ல இது! அனுபவ பூர்வமாக நான் அறிந்து எழுதும் உண்மை கருத்து. நீங்கள் இயேசுவை கூப்பிட்டு பாருங்கள் பிறகு நான் சொல்வதெல்லாம் உண்மை என்பதை  நீங்களே அறிந்துகொள்வீர்கள்)  


 



-- Edited by SUNDAR on Tuesday 26th of February 2013 09:48:17 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
RE: பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!
Permalink  
 


முன்று வருடங்களுக்கு இலங்கையில் நான் எனது அலுவலகத்தை விட்டு வீடு வரும்போது ஒரு காமுகன் தரங்கெட்ட வார்த்தை பேசிபின் தொடர்ந்து டார்ச்சர் பண்ணி வந்தான் .நான் மிகுந்த கண்ணீரோடு செபித்தேன் .என்ன ஆச்சயம் சில நாட்களில் அவனை  காணவில்லை .தங்களது இந்த பதிவு எனது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமான உண்மை SUNDAR அவர்களே 

உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது. காண்க 

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

sundar அண்ணா.  இதை நானும் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  எனக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எனது வருங்கால மனைவிக்கும் இப்படி நடந்தது. இவள் வேலைக்கு சென்று வரும் சந்தர்ப்பங்களில் ஒரு பொலிஸ் காரர் அவள் பின்னால் நடந்து வருவதும், பஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து பேசிக் கொண்டிருப்பதுமாக தொல்லை கொடுத்திருக்கிறார். ஒரு நாள் எப்படியோ வீடு தேடியும் வந்து விட்டார். 

என்னைக் குறித்து கேள்விப்பட்டு என்னை சுட்டு விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதையெல்லாம் அவள் phone மூலமாக என்னிடம் சொல்லக் கேட்ட போது எனக்கு பயம் வரவில்லை. “இயேசப்பா நம்மோடு இருக்கும் போது நம் மேல் கை போடுபவன் யார்?” என்று அவளை தைரியப்படுத்தி சில நாட்கள் உபவாசம் இருந்து நான் என்னுடைய வீட்டிலும், அவள் அவளுடைய வீட்டிலும் ஒரே நேரத்தில் இருவரும் ஜெபித்தோம். 

என்ன ஆச்சரியம் கொஞ்ச நாட்களில் அவனைக்குறித்து கேள்விப்பட்டோம். ஏதோ ஒரு பிரச்சனையில் அவனுக்கு தண்டணை இட மாற்றம் கொடுத்து விட்டார்கள். “ அவனை எங்கள் கண்கள் காணாத இடத்துக்கு கொண்டு போம் ஆண்டவரே” என்று ஜெபித்தோம். அதை ஆண்டவர் செய்து காட்டினார்.

///

 

பிரச்சனைகள் முற்றிலும் தீர ஒருசில நாட்கள் ஆகலாம் ஆனால் நீங்கள் அவரை அழைத்து சொன்னால் போதும் அவர்  உங்கள் அருகில் வந்துவிடுவார். பரம தகப்பனாகிய  அவர் உங்கள் அருகில் இருக்கும்போது எந்த மனுஷனும் உங்களை தீண்ட முடியாது!  முடியாது! முடியாது!
 
எனவே நீ இனி அழவேண்டாம், எந்த மனுஷனிடமும் சொல்லி புலம்ப வேண்டாம், தரம்கெட்டு திரிபவனோடு போராடவும்
வேண்டாம் (அப்படி போராடினால் ஒருவேளை சமீபகாலத்து  நிகழ்வுகள்போல அவன் ஆசிடை கூட ஊற்றிவிடலாம்) ஆனால் எந்த ஒரு சங்கடத்தையும் நீ  ஆண்டவரிடம் சொல்லும்போது அவர் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் உன் முகத்திலேயே அவன் முழிக்க முடியாத நீண்ட தூரத்துக்கு அவனை கொண்டுபோய்விடுவார். உங்கள் கண்ணீரெல்லாம்  அவரே துடைப்பார்! ////
 
நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை...  
  


__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!
Permalink  
 


அனுபவ உண்மைக்கு வலுவூட்டும் சாட்சிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
 
இங்கு என்னால் எழுதப்படிருக்கும் அங்கே பதிவுகள் அனுபவ உண்மையின் அடிப்படையில் 
நான் அனுபவித்து உணர்ந்து  பதியப்பட்டவைகளே. 
 
எற்க்க மனதிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.
 
 
இந்த உலக மக்கள் தங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது அவன் வந்து உதவி செய்துவிட மாட்டானா, இவன் வந்து உதவி செய்துவிட மாட்டானா எங்கிருந்தாவது யாராவது உதவ  மாட்டார்களா என்று மனுஷ கைகளையே நோக்குகிறார்கள். ஆனால் கர்த்தர்  என்ன சொல்கிறார்?  
 
ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
 
ரேமியா 17:5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எனவே  உண்மை தெய்வத்தை அறிந்த நாம் ண்டவராகிய இயேசுவை நம் சொந்த தகப்பன் போல பாவித்து  நமது இதய  குமுறல்களை எல்லாம் அவர் சமூகத்தில் கொட்டிவிட வேண்டும், நடக்க வேண்டியதை அவர் பார்த்துகொள்வார். எந்த மனுஷனும் செய்யமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்வார்!
 
     


-- Edited by SUNDAR on Thursday 14th of March 2013 11:16:45 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!
Permalink  
 


சிலநாட்களுக்கு முன்னர் ZEE Tamil  "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் இதேபோல்,  தான் பெற்ற  மகளிடதாமே தவறாக நடக்க முயற்ற ஒரு கேடுகெட்ட தகப்பன் பற்றிய நிகழ்ச்சியை காட்டினார்கள். மிகுந்த மன வேதனையாக இருந்தது.  
 
பெற்ற தாய் வேறு ஒருவனுடன  போய் தங்கிவிட்டளாம்  அந்த தாயில்லா  குழந்தைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தகப்பனே தவறாக நடக்க முயன்றனாம்.  தப்பி ஓடி வந்து தாயிடம் தங்கினால் தாயை வைத்திருக்கும் அவனும் அந்த பிள்ளையிடம் தப்பாக நடக்க முயன்றானாம்.  இரவு வந்தாலே பயந்துபோய் தவித்த அந்த பிள்ளை இறுதியில் யாரிடமும் அடைக்கலம் கேட்க முடியாமல் டி வி யை தேடி ஓடி வந்துள்ளது.
 
இதுபோன்ற பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவுதரும் ZEE TV அமைப்புக்கு கர்த்தருக்குள் நன்றியை தெரிவிப்போம். 
     
துணிச்சலான பிள்ளை எங்காவது ஓடிவிடும்! ஆனால் அப்பாவி பிள்ளைகள்  அழுவதை தவிர என்ன செய்ய முடியும்?  இதுபோல் நம் கண்களுக்கு  தெரியாமல்  எந்த வழியும் தெரியாமல் எத்தனை பெண் பிள்ளைகள் அழுது  தவித்துக்கொண்டு இருக்கிறதோ!!!! 
 
அப்படிபட்ட பிள்ளைகள் காமகயவர்களின் பிடியில் இருந்து விடுபடவும் நல்ல வாழ்க்கையை பெறவும்,  சிறுமைப்பட்டவர்களுக்கு உதவியாக செயலடும் நம் தேவன் அங்கே இடைபட்டு  ஆறுதல் படுத்தவும் வாஞ்சையோடு ஜெபிப்போமாக.
    
மீண்டும் இங்கு எழுதுகிறேன்,
 
இதை படிக்கும் அன்பு சகோதர சகோதரிகள் இதுபோன்ற சூழ்நிலையில் தவிக்கும் பெண்களுக்கு நம் ஆண்டவராகிய இயேசுவை அறிமுகம் செய்து, ஒரு தகப்பனிடம் சொல்வதுபோல் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லும்படி அறிவுரை சொல்லுங்கள். ஆண்டவர் நிச்சயம் நல்ல வழிகளை திறப்பார்! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard