நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்பதனை மறுபதற்கில்லை. அன்றாடம் நிகழும் நிகழ்வுகளும் இதனை நமக்கு தெளிவாய் தெரிவிகின்றன. எது எவாரானாலும் வேத எழுத்துக்கள் நிறைவேறியே தீரும்..
அந்த வகையில், வேதம் இறுதி காலத்திற்கென முன்னறிவித்துள்ள மாற்றங்கள் நம் வாழ்விலும், நம் குடும்பத்தினர் மற்றும் சகோதர சகோதரிகளிடமும் ஏற்பட்டுள்ளதா என கண்டறிந்து உணர்த்துவது/உணர்வது சரியானதே.
வேதம் காட்டும் அறிகுறிகள் அனேக காரியங்களை இருந்தாலும் இயேசு கூறினது போல சுருங்க சொன்னோமானால் 'அன்பு தணிந்த பின் தான் முடிவு வரும் '.
இந்த அன்பு தணிகிறதற்க்கு காரணமும் வேதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கிரமங்கள் மிகுதியாகிறதினால் தான் அன்பு தணிகிறது என்று!!
இந்த அக்கிரமங்கள் நம்மிடம் அல்லது நம்மை சார்ந்தவர்களிடம் காணபடுகிறதா? அன்பு தணிந்திருகிறதா? என கண்டு தேவனிடம் திரும்புவதே இறுதிகாலத்தில் நாம் செய்யக்கூடிய பிரதான காரியமாய் இருக்கிறது என நம்புகிறேன்.
எனவே சகோதர, சகோதரர்கள்., அயலார் மீதும் நம் தேவன் மீதும் அன்பு தணியாதிருக்க, இக்காலவேளைகளில் என்ன என்ன செய்வது என்பதை விவாதித்து செயல்படுத்துவது சரியான பயிற்சியாய் இருக்கும் !!