ஆனால் ஆதாம் காலத்தில் கொடுக்கப்பட்ட அதே சாபம் இன்றும் இருக்கின்றது
ஆதியாகமம் : 3 16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?
இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?
இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக மரித்தார் ?
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 9th of April 2013 12:19:35 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஆனால் ஆதாம் காலத்தில் கொடுக்கப்பட்ட அதே சாபம் இன்றும் இருக்கின்றது
ஆதியாகமம் : 3
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?
இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?
இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக மரித்தார் ?
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 9th of April 2013 12:19:35 PM
இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?
இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?
இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக மரித்தார் ?
அன்பான சகோதர்களே,
பாவம் செய்த ஆதாம்/ஏவாளை தேவன் சபித்தார் என்பதும் அந்த சாபத்திநிமித்தம் துன்பமும் துயரமும் வேதனையும் இந்த உலகினுள் வந்தது என்பது உண்மை!
ஆதி 1: 16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
அதுபோல் தேவ குமாரனாம் இயேசுவானவர் எலும்பும் சதையும் உள்ள, நம்மை போன்ற மாம்சமாக தோன்றி நம்முடைய பாடுகள் துக்கங்கள் சாபங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டார் என்பதும் உண்மை!
ஏசாயா 53:11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
எனினும் இன்னும் பாவமும் சாபமும் தொடர காரணம் என்னவெனில் தேவனின் திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை!
யோபு 14:22அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
அதாவது இந்த பாவ மாம்சம் நமக்கு இருக்கும்வரை நமக்கு நோவும் துன்பமும் துக்கமும் இல்லாமல் போகாது.
ஓர் நாளில் நாமெல்லாம் மறுரூபம் ஆகி தேவனால் எடுத்துகொள்ள படுவோம்
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
அதன்பின்னர் தேவன் நம்மோடு வாசம் பண்ணுவார் அப்பொழுது
வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும்துடைப்பார்என்றான்.
வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
ஆம்! அதன்பின்னர்தான் மரணமில்லை என்று வேதம் சொல்கிறது! அதுவே தேவ திட்டத்தின் முடிவு! அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.
-- Edited by SUNDAR on Tuesday 7th of May 2013 09:05:57 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசுவின் பொன்னான 'ஆயிரம் கால அரசாட்சியில்' கூட சாபம் இராமல் போகும் என வேதம் சொல்லவில்லை. பின்வருமாறு அவரது அரசாட்சியை சித்தரித்தாலும் சாபம் அட்ட்ருபோனதாக கூறவில்லை!!!
தானியேல் 9:24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்தியநீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
புதிய பூமி சிருஸ்டிக்கபட்டிருக்கும் போது மாத்திரமே ஒரு சாபமும் இருக்காது!! என வேதம் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது !!!
இதனை வேதத்தின் கடைசி அதிகாரமாகிய வெளி 22 இல் காணலாம்.
வெளி 22:3இனிஒருசாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.