தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த அனியாபுரம் நல்லூரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. சமையல் வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜெபக்கனி. இவர்களின் ஒரே மகன் செல்வின் (வயது 27).
இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு மனநலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அய்யாத்துரை மகனை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.
என்றாலும் செல்வினுக்கு நோய் குறையவில்லை. அப்போது சிலர் குமரி மாவட்டம் ராஜாவூரில் உள்ள ஆலயத்திற்கு அழைத்துச் சென்று பிரார்த்தனை செய்வதோடு நாகர்கோவிலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் இதற்காக சிகிச்சை பெறும்படி ஆலோசனை கூறினர்.
அதைக்கேட்டு அய்யாத்துரை குடும்பத்துடன் ராஜாவூர் சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அங்கிருந்தபடியே ஆலயத்திற்கும், நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்தார். இதில் செல்வினுக்கு பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரவு நேரங்களில் செல்வினின் மனநலச் சேட்டைகள் அதிகமாக இருக்கும்.
அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை கண்டிப்பார்கள். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் செல்வின் சேட்டைகளில் ஈடுபட்டார். அவரது கூச்சலும், சேட்டைகளும் அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிலர் செல்வினை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அவரது தந்தை அய்யாத்துரை கதறி அழுதார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை கண்டிப்பார்கள். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் செல்வின் சேட்டைகளில் ஈடுபட்டார். அவரது கூச்சலும், சேட்டைகளும் அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிலர் செல்வினை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அவரது தந்தை அய்யாத்துரை கதறி அழுதார்.
ரத்தக்காயத்துடன் கிடந்த மகனை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதும் செல்வின் நர்சுகளை சிகிச்சை அளிக்க விடாமல் சத்தம் போட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த அய்யாத்துரைக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
மகனின் நிலை கண்டு ஒருபுறம் மனம் கண்ணீர் விட்டாலும், அவனது எதிர் காலம் அவருக்கு கேள்விக் குறியாக இருந்தது. தனக்கு பிறகு மகனை யார்? கவனிப்பார் என்ற எண்ணமும் அவர் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் செல்வின் கழிவறைக்கு செல்ல வேண்டுமென தந்தையிடம் கூறினார். அவரை அய்யாத்துரை ஆஸ்பத்திரி கழிவறைக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து செல்வினின் அலறல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தம் நின்று போனது.
அதன் பிறகு அய்யாத்துரை மட்டும் கழிவறையில் இருந்து வெளியே வந்தார். செல்வினை காணவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த நர்சுகள், செல்வின் எங்கே? என்று கேட்டனர். அவர்களிடம், மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக அய்யாத்துரை கூறினார். திடுக்கிட்ட நர்சுகள் இது பற்றி பணியில் இருந்த டாக்டர் செந்தில்குமாரிடம் கூறினார்.
உடனே அவர், ஆசாரி பள்ளம் போலீசுக்கும், நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர் சுடலைமணி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் அய்யாத்துரை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் படும் வேதனையை பொறுக்க முடியாமல் அவனது கழுத்தை நெரித்து நானே கொன்று விட்டேன் என்று கூறினார்.அவரை கைது செய்த போலீசார், கழிவறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த செல்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் நாகர் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.