இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்
Permalink  
 


சங்கீதம்-139 ;19-22 

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்., உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.

 

 நமது சத்துருக்களை நாம் சினேகிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் மக்களுக்கு விரோதமாக நடப்பவனையும், கர்த்தருக்கு விரோதமாக செயல்புரிபவனையும் மன்னிக்க நமக்கு உரிமையில்லை. அவர்கள் இரட்சிக்கப்படும்படி ஜெபிப்பது மட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து கொடுமை செய்யாதவாறு அவர்களை செயலிழக்க செய்யும்படியும், பதவியிழக்கும்படியும், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி நீதி நடக்கும்படியும் ஜெபிப்பது தவறு அல்ல. 

சகோதரர்களே கை்கருத்தை குறித்த தங்கள் கருத்“துகளை பதிவிடுங்கள் please



-- Edited by t dinesh on Tuesday 16th of April 2013 09:39:01 PM



-- Edited by t dinesh on Tuesday 16th of April 2013 09:42:06 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

t dinesh wrote:

சங்கீதம்-139 ;19-22 

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்., உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.

 

 நமது சத்துருக்களை நாம் சினேகிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் மக்களுக்கு விரோதமாக நடப்பவனையும், கர்த்தருக்கு விரோதமாக செயல்புரிபவனையும் மன்னிக்க நமக்கு உரிமையில்லை. அவர்கள் இரட்சிக்கப்படும்படி ஜெபிப்பது மட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து கொடுமை செய்யாதவாறு அவர்களை செயலிழக்க செய்யும்படியும், பதவியிழக்கும்படியும், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி நீதி நடக்கும்படியும் ஜெபிப்பது தவறு அல்ல. 

சகோதரர்களே கை்கருத்தை குறித்த தங்கள் கருத்“துகளை பதிவிடுங்கள் please


-- Edited by t dinesh on Tuesday 16th of April 2013 09:42:06 PM


அன்பான சகோதரரே தங்களின் ஆதங்கமும் வருத்தமும் எனக்கு புரிகிறது.  ஜனங்களை கொன்று குவிப்பவனும் அதற்க்கு துணை போனவர்களும் கொடூரமாக ஆட்சி செய்பவர்களும் அழிக்க பட்டுபோனால் ஜனங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்பது உண்மைதான்  

 
வேத வசனம்: 
நீதி 11:10 துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.
 
என்று சொல்வதோடு 
 
சங்கீதம் 145:20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
 
என்றும் சொல்கிறது.  எனவே தங்களின் எதிர்பார்ப்பில் எந்த தவறும் இல்லை என்பது உண்மைதான்! 
 
ஆனால் ஒரு துன்மார்க்கன் அழிந்துவிட்டால் அங்கு கிடைக்கும்  அமைதி/நிம்மதி  நிரந்தரமான ஒன்றுதானா? மீண்டும் ஒரு துன்மார்க்கன் எழும்ப எத்தனை நாட்கள் ஆகும்? அதை யார் தடுக்க முடியும்? மீண்டும் அங்கு துன்மார்க்கன் ஒருவன் எழும்பமாட்டான் என்பதற்கு எத்தனை உத்திரவாதம்? போன்ற கேள்விகளோடு உண்மையை  நாம் சற்று ஆழமாக ஆராய்ந்தால், மன்னிப்புக்கு புது இலக்கணம் வகுத்த இயேசுவின் வார்த்தைகளாகிய: 
  
மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
 
என்ற வசனங்களின் மேலான  உண்மை நமக்கு புரிவதோடு "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று சொல்லி, நம்மை  கொலை செய்ய துணிபவனுக்கு கூட மனதார மன்னிப்பை வழங்க முடியும்.  
  
தங்களின் இந்த கேள்விக்கும் இதற்க்கு முன்னர் நான் எழுதிஇருக்கும் "எப்பொழுதும் சாவையே விரும்பும் பெண்மணி" என்ற பதிவிற்கும் தொடர்பு இருக்கிறது.  
 
நாம் தொடர்ந்து உண்மையை ஆராயலாம்!  
 


-- Edited by SUNDAR on Thursday 18th of April 2013 09:07:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

 

அன்பு சகோதரரே!!

 

ஒரு குறிப்பிட்ட காரியத்தை முன்னிட்டு ஜெபித்து புலம்பிக்கொண்டு இருந்த பொது.. பின்வரும் வசனங்களை காண நேர்ந்தது. அதன் பின் ஒரு தேவ ஊழியரின் பிரசங்கத்திலும் இதனையே கேட்கவும் நேர்ந்தது!! 

 எரேமியா 12 

1 கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

2. நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

3. கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு கொலைநாளுக்கு அவர்களை நியமியும்.

4. எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

துன்மார்கர்கள் சுகித்திருக்கிறதைக்குறித்தும் அவர்களுக்கு நெடுநாளாய் நியாயத்தீர்ப்பு நேராமலிருக்கிறதைக் கண்டு  எரேமியா கர்த்தரிடத்தில் கேள்வி கேட்டு புலம்புகிறார்...

 இதற்க்கு என் தேவனாகிய கர்த்தரின் பதில் பின்வருமாறு உள்ளாது..

 

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

நாம் காலாட்கலோடும் ஓடவேண்டும், குதிரைகளோடும் ஓட வேண்டும். கடமை மாத்திரம் செய்துகொண்டே!!! ( இதை படிக்கும் பொது எலியா ஏன் 'இஸ்ரவேலருக்கு ரதமும் ,குதிரை வீரருமானவர்' என்றழைக்கபட்டார்  என்பதையும் கவனிக்க!!)

 கடமையை செய்து முடிக்காதிருக்கும் வரையில் 'அநாதி தீர்மானம்' தொடர்பான நேரடி கேள்விகளுக்கு பதில் கிடையாது  என்பது தெளிவானது!! 

 இப்போது இருக்கிற நிழலாட்டமான அறிவே நம் எல்லை என வேதமும் சொல்லுகிறது. இதற்க்கு விதி விளக்கு யாருமில்லை. ஓட்டத்தை முடிதிருக்கும்போது முகமுகமாய் பார்ப்போம். அனைத்தும் விளங்கும். இந்த பதில் சகோ.தினேஷின் பதிவிற்கும் பொருந்தும். 

 I கொரிந்தியர் 13:12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

 Glory to GOD!!!

 



-- Edited by JOHN12 on Friday 19th of April 2013 03:42:06 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
RE: தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்
Permalink  
 


நமக்கு குற்றம் செய்தவனை மன்னிக்க வேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் மற்றவர்களுக்கு விரோதமாக நடப்பவனையும், கர்த்தருக்கு விரோதமாக செயல்புரிபவனையும் மன்னிக்க நமக்கு உரிமையிருக்கிறதா?.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

t dinesh wrote:

நமக்கு குற்றம் செய்தவனை மன்னிக்க வேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் மற்றவர்களுக்கு விரோதமாக நடப்பவனையும், கர்த்தருக்கு விரோதமாக செயல்புரிபவனையும் மன்னிக்க நமக்கு உரிமையிருக்கிறதா?.


கர்த்தருக்கு விரோதமான பாவம் என்று தாங்கள் எவ்விதமான பாவங்களை குறிப்பிடுகிறீர்கள் என்பதை நான் அறிந்துகோள்ளலாமா? வேத புத்தகத்தில் அனேக பாவங்கள் கர்த்தருக்கு விரோதமான பாவங்கள் என்றே பதிவிடப்பட்டுள்ள: 

 
கானானை வேவு பார்த்து வந்தவர்கள் பரப்பிய துர் செய்தியை நம்பி  மோசம்போனவர்கள் அதை கர்த்தருக்கு விரோதமான பாவம் என்றே குறிப்பிட்டார்கள் (கீழ்படியாமை)  
 
உபாகமம் 1:41 அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்;
 
 
தாவீது தான் செய்த  கொலை பாவத்தை தேவனுக்கு விரோதமான பாவம் என்று குறிப்பிடுகிறான்! (விபச்சாரம்/கொலை)  
 
சங்கீதம் 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; 
 
ஏலி  என்னும் என்னும் ஆசாரியனின் மகன்கள் செய்த காரியங்களை கர்த்தருக்கு விரோதமான பாவம் என்று குறிப்பிடுகிறான் (கர்த்தரின் பலியை உதைத்தல்)   
 
I சாமுவேல் 2:25 மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; 
 
இதுபோல் இன்னும் அனேக பாவங்கள் "கர்த்தருக்கு விரோதமான பாவம்" என்றே வேதம் சொல்கிறது!
 
தாங்கள் குறிப்பிடும் பாவம் எவ்விதமானது? 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Dear brothers/sisters

 

//நமக்கு குற்றம் செய்தவனை மன்னிக்க வேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் மற்றவர்களுக்கு விரோதமாக நடப்பவனையும், கர்த்தருக்கு விரோதமாக செயல்புரிபவனையும் மன்னிக்க நமக்கு உரிமையிருக்கிறதா?.//

 

Lets listen..

யோவான் 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.


 
 நீதிமொழிகள் 16:6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
 
அபிரகாம் உண்டாகும் முன்பே இயேசு இருந்திருந்தாலும் கிருபையை பற்றியும்,சத்தியத்தை பற்றி தேவ ஜெனங்கள் அறிந்திருந்தாலும்.. 'பூரண ரட்சிப்பு' குமாரன் மாம்சத்தில் பூமியில் பிரவேசித்து தன் காரியத்தை செய்து முடித்த பிறகே உண்டானது.. 
 
அதை போலவே கிருபையும் சத்தியமும் குமாரன் வாயில் இருந்து உரைக்கபட்டபோது' தேவ சிந்தை' மனிதராகிய நமக்கு வெளியரங்கமானது. அந்த சத்தியம், தீயவருக்கும் நன்மை செய்வதாய் இருந்தது. இந்த வேத வெளிச்சம் இயேசு பிறக்காததற்கு முன் இல்லை. காரணம் கிருபையும் சத்தியமும் இயேசுவின் மூலமாய் மாம்சத்தில் வெளிபடுத்த படாதது தான்.
 
இக்காரணத்தினால் தான், தாவீது தேவதாசனாய்  இருந்திருந்த போதிலும்,தேவன் மனதில் உள்ளவை எல்லாம் அவனால் அறிய இயலவில்லை. பழிவாங்குதலை பற்றியும்,சரி கட்டுதலை பற்றியும் அதிகம் பேசி இருக்கிறார்!! பின் வரும் வசனம் அதற்க்கு ஒரு உதாரணம்.
சங்கீதம்-139 ;19-22 

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்., உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.



ஒரு தேவ மனுஷனானவன் , ஒரு மனுஷனை(துன்மார்க்கனை) சபித்தும் தேவ நீதியை செலுத்த முடியும். (வானத்தில் இருந்து அக்கினி இறக்கி சேவகர்களை பட்சித தீர்க்கதரிசி போல). மன்னித்தும் தேவ நீதியை கொண்டுவர முடியும்(இது மிக மிக மிக கடினம் தான்).

 

யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

தேவனக்கு அதிகம் பிடித்தது அவரது நியாயதீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன் மேன்மை பாராட்டும் இரக்கம் தான்!! பலி வாங்குதல் அல்ல!! (தேவனுக்கு எப்போதும் இது கடைசி option தான் ). பாருங்கள் என்ன சொல்கிறார்..

 

லூக்கா 13:34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

அவர் கிருபை செய்ய விரும்புகிற தேவன் என வேதமும் சொல்கிறது!!

மீகா 7:18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

 

நமக்கு மனதில்லாமல் போகிறபடியினால் தான் எழுதபட்ட நியாயத் தீர்ப்பை நம் மீது வரவழைத்துக்கொள்கிறோம். ஆக நாம் இப்பூமியில்  மன்னிகிறவர்களாக இருப்போமானால் பரலோகத்தில் மன்னிக்கபட்டவர்கலாக உலாவுவோம்.. அதற்க்கு மேற்பட்டது அவரவர் சவுரியம்!!

மத்தேயு 18:18 பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ராஜ பக்சேவை ஒரு தமிழனாய் நமக்கு மன்னிக்க கடினமாய் இருந்தாலும்,ஒரு பரலோகவாசியாய் நாம் ஒவ்வொருவரும்  மன்னிக்கத் தான் வேண்டும். கர்த்தர் ஒவ்வொருவரின் பாவத்தையும் நியாயத்தில் கொண்டுவரும் வரை தோற்றத்தின் படி  நியாயத்தீர்ப்பு செய்ய நமக்கு தெரிந்திருந்தாலும்,ஓய்ந்து மன்னிப்போம். அது தேவனுக்கு சித்தம்.

 

மஹா தேவனுக்கு மகிமை உண்டாகுக!!

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்
Permalink  
 


சிறந்த பதிவு

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard