இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் மனப்பூர்வமாக மனுஷர்களை தண்டிக்கிரவறல்ல!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவன் மனப்பூர்வமாக மனுஷர்களை தண்டிக்கிரவறல்ல!
Permalink  
 


தேவன் மனுஷர்களை மனப்பூர்வமாக சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துவது இல்லை என்பதை  கீழ்கண்ட வசனம் சொல்கிறது:
 
புலம்பல் 3:33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. 
 
ஆகினும் அவர் பாவம் செய்தவர்களை தண்டியாமல் விடுவது இல்லை என்றும் உறுதியாக சொல்கிறார். 
 
யோவேல் 3:21 நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்
ரேமியா 30:11 உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன். 
 
இந்நிலையில் தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு தண்டிக்கார் என்பதை நாம் பார்க்கலாம்!
 
தேவன் தாமே வேலியடைத்து, கற்களை பொருக்கி நற்குல திராட்சை செடியை நட்டு நல்ல பழங்களை தரும் என்று காத்திருக்க கசப்பான பழங்களை தந்த அந்த திராட்சை தோட்டத்துக்கு தேவன் செய்யும் காரியங்களை பாருங்கள்! 
 
அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்;
ஆம்! நம் தேவன் நம்மை தண்டிக்க தீவிரிக்கிறவர் அல்ல! ஆனால் அவருடைய பாதுகாப்பு வேலியை நம்மைவிட்டு அகற்றிவிட்டாலே போதும், கண்ட கண்ட காட்டெருமைகளும்  நம்மை மேய்ந்து போட்டுவிடும்!  
 
அதுபோல் இவ்வுலகில் தேவன் நம்முடை பாதுகாப்பை ஒரு நிமிடம் நம்மை விட்டு அகற்றினால் போலிஸ்/ அரசியல்வாதி/ரவுடி திருடன் என்று எல்லோருமே நம்முடைய வீட்டு பக்கம் வர ஆரம்பித்து விடுவார்கள்.
 
2. அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
அடைப்பு இல்லாத இடத்தில் பயிரை விதைத்தால் அதனால் எந்த பலனும் கிடைக்காது, நன்றாக விளைந்துள்ள ஒரு புன்செய் நிலத்தின் அடைப்பை தகர்த்தால் போதும் போகும் வரும் மனுஷன் மற்றும் மிருகங்களும் உள்ளே புகுந்து அனைத்தையும் மிதித்துபோட்டு விடுவார்கள் அதுபோல் எவ்வளவு புகழ்/வசந்தியுள்ளவனாக இருந்தாலும் கர்த்தர் அவன் அடைப்பை தகர்த்தால் அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்ச வாய்ப்பில்லை.
 
அதைப் பாழாக்கிவிடுவேன்; 
"அதை பாழக்குவேன்" என்று சொல்லும் தேவன் எவ்வாறு பாழாக்குவார் என்றும் சொல்கிறார்!
.
அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; 
.
மரங்களுக்கு தேவையற்ற கிளைகளை நறுக்குவதும், பயிர்களுக்கு களை கொத்தி விடுவதும் மிகவும் அவசியம். இல்லையெனில் தேவையில்லாத செடிகள் கூடவே முளைத்து நல்ல பயிரை நாசமாக்கிவிடும்.      அதுபோல் தேவன் நம்மோடு/ நம் பிள்ளைகளோடு பழகவும் நம்மை கவிழ்க்கவும் வரும் துன்மாக்கர்களை தேவன் வெட்டிவிடும் காரியங்களை செய்து நம்மை காத்து வருகிறார் அந்த காரியங்கள் செய்வதை தேவன் நிறுத்தினால் எந்த ஒரு உலக மனுஷனும் நம்மை ஏமாற்றி நமக்குள்ள அனைத்தையும் அபகரித்து விட வாய்ப்புண்டு! மேலும் நமது பிள்ளைகள் மோசமான நண்பர்களோடு பழகி பாழாகிபோகவும் வாய்ப்புண்டு 
 
அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
பயிர்களுக்கு மழை நீர் எவ்வளவு அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மழை இல்லை என்றால் பயிரை விதைப்பதால் பயன் ஏதும் இல்லை. பயிர்களுக்கு மழை நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு பணம் அவசியம். அதை தேவையான நேரத்தில் தேவையான அளவு அளந்து யார்மூலமாவது நமக்கு கிடைக்க செய்து நம்மை போஷிப்பது தேவன்!தேவன் போஷிக்கும் செயலை நிறுத்திவிட்டால் ஒரு மனுஷனின் குடும்பம் பாழாகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை!
 
எனவே அன்பானவர்களே தேவன் ஒரு மனுஷனை தண்டிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை! தன பாதுகாப்பு கரத்தை அவனைவிட்டு அகற்றிவிட்டாலே அவன் பாழாகி போய்விடுவான்.  
 
இந்த செய்தியின் மூலம் நான் இரண்டு காரியங்களை இங்கு வலியிறுத்த விரும்புகிறேன்.
 
தேவன் எந்த மனுஷரையும் தண்டித்து அதில் இன்பம் காண்பவர் அல்ல! யாரையும் அவர் தண்டிக்க விரும்புகிறவரும் அல்ல!   
 
அதே நேரத்தில் தனக்கு வேண்டியவர் என்பதால் யார் செய்யும் பாவங்களையும் கவனிக்காமல் விடுபவரும் அல்ல!   


 



-- Edited by SUNDAR on Friday 26th of April 2013 07:29:56 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard