இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்
Permalink  
 


இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்,டோனாவூர் பெல்லொசிப்பில் கார்மிக்கேல் அம்மையாரின் வளர்ப்பு பையன் Mr.ஜெயராஜ் அவர்கள் இன்றுவரை ஊழியம் செய்கிறார்கள் அவர்களிடம் போய் உங்களிடம் எவ்வளவு ருபாய் இருக்கிறது என்று கேட்டால் அவர் சொல்லுவார்.என்னிடம் பைசா அவ்வளவு இல்லை ,பெல்லோசிப் தரும் மாதம் 900 ருபாய்யும்,சிலநூறு ருபாயும் இருக்கும்,அதை வைத்து நான் என்ன செய்வேன் யாரவது ஒரு ஏழைக்கு கொடுப்பேன் அவ்வளவுதான் என்பார்,இப்போது அவர் நடக்க முடியாமல் இருக்கிறார்.அவருடைய வயது 76இருக்கும்,அவரிடம் மனந்திருந்து ஒருநாள் பேசும்போது ஒரு காரியத்தை என்னிடம் கூறினார் ‘தம்பி எனக்கு கொஞ்ச நாளா ஒரு ஆசை என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை இதனால் அநேக இடத்துக்கு போய் ஊழியம் செய்யமுடியவில்லை,இதனால் ஒரு tvs 50 வாங்கவேண்டும் என்று குறைந்தது 5வருடமாய் முயற்சி செய்கிறேன் முடியவில்லை ,நான் யாரிடம் கூறினால் எனக்கு வாங்கி தர அநேகர் முன் வருவார்கள் அப்படி என் தேவை சந்திக்க நான் விரும்பவில்லை.உன்னிடம் இதை கூறினது என்னவென்றால் நீ யாரிடமும் சொல்லாமல் ஜெபிக்கவேண்டும் என்பதால் தான் மனந்திறந்து கூறுகிறேன் எனறார்.ஆனால் இன்று வரை tvs 50 வாங்கவில்லை ,இப்போது அதற்கு தேவையும் இல்லை காரனம் அவருக்கு வயதாகிவிட்டது .பாருங்கள் தன் தேவை தேவனால் மாத்திரம் பூர்த்தியாகவேண்டும் என்ற பக்திவைராக்கியம்.ஆனால் அவருடைய ஆசை நிரைவேற முடியாம போனதுக்கு அவர் வருத்தமும் அடையவில்லை,அநேக வருடம் களித்து நான் கூறினேன் உங்களுக்கு tvs 50 வாங்க ஏற்பாடு செய்கிறேன் நானும் உதவிசெய்கிறேன் என்றேன் அவர் கூறின பதில் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது .அவர் சொன்னார் ‘நான் tvs 50 வாங்க தேவசித்தமில்லை ஆகையால்தான் என்னுடைய விருப்பம் நிரைவேறவில்லை .ஆகையால் இப்போது எனக்கு tvs 50 வேண்டாம் ,நீங்கள் சொன்னதுக்கு ரொம்பா நன்றி என்றார்.எனக்கு மிக கவலையாய் இருந்தது ஒரு தேவ ஊழியரின் ஆசை இப்படியாகிவிட்டதே என்று,அவர் தள்லாடி சைக்கிள் மிதித்து ஊழியம் செய்யபோவதைக்கண்டு அநேக நேரம் மனதில் வேதனைப்பட்டது உண்டு.இப்போது தேவை என்று கூறி கேட்கும் ஊழியர்கள் மத்தியில் இப்படியும் ஒருவரா இவர்தான் உண்மையான விசுவாச ஊழியார்
 


__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்
Permalink  
 


தங்களின் இந்த செய்தி மிகவும் அருமையானதும் கண்களை கலங்க வைக்கும்  செய்தியாகவும்  இருக்கிறது சகோதரரே.
 
ஒருவரும் சுத்தமில்லை ஒரு ஊழியரும் சுத்தமில்லை என்று சொல்லும் பலருக்கு இந்த சாட்சி நிச்சயம் ஒரு விழிப்பை தரும்.
 
தேவனுக்குரிய நல்லவர்கள் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை எல்லோரும் அறியவேண்டும்.     
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்
Permalink  
 


அருமையான பதிவு. 

(உண்மை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு என்பது எனது எண்ணம் !!)

கர்த்தர் நிச்சயம் அவர் விரும்புகிராதை விட அவர் தேவையை சந்திப்பாராக!! தேவன்  உண்மை ஊழியர்களை கனம்பன்னுகிறவர்,கடாட்சிகிற கர்த்தர்.

 
மத்தேயு 25:23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலேஉண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Praise the LORD


-- Edited by JOHN12 on Friday 3rd of May 2013 05:48:25 PM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard