இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’
Permalink  
 


ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’ புளித்த மாவுக்கு இன்னும் அதிகமாய் என்னிடம் கேள்வி உள்ளது விலையுர்ந்த நகைகள் போட்டு விலையுர்ந்த உடை உடுத்தி பிரசங்கம் பன்னுகிறீர்களே நீங்கள் அப்படியே பக்கத்து வீட்டு எழை பென்னுக்கு ஒரு பவுன் இல்லை என்று கல்யாணம் நின்றுவிட்டதாம் என்று அங்கு போய் ஆறுதல் என்ற போர்வையில் முதலை கண்னீர்விட்டு நிச்சயம் தேவன் உங்ளை கைவிடமாட்டார் என்று கூற எப்படி மனது வருகிறது ? பொருளாசையுடைய மனிதர்களாகிய உங்களுக்கு மாத்திரம் மற்றவர்கள் உதவி செய்யனும் ஆனால் நீங்கள் பிச்சைகாரனுக்கு ஒத்த ருபாய் கூட போடாமல் உழைத்து சாப்பிடவேண்டியதுதானே சோம்பேறிகள் என்று வசை பேசுகிறாய் இது நீதியா? அந்த பிச்சைகாரன் பரலோகத்துக்கு போவான் ,காரனம் அவன் எப்போதும் கஷ்டத்தோடு அந்தரங்கத்தில் தேவனை தேடி புலம்பும் அத்தனையும் இங்கே கேட்கப்படாம்ல் தேவனிடத்தில் கேட்கப்பட்டு அவன் மரித்தபின் பரலோகத்துக்கு போவான்.ஒருவேளை அவன் கைவிடப்படுவதாய் இருந்தால் அவன் தேவனைப்பார்த்து என்ன கேள்வி கேட்பான் தெரியுமா ,இந்தபூமியில் வாழ்ந்த நாளில் எனக்கு ஒருவரும் இயேசுகிறிஸ்துவாகிய உம்மைப்பற்றி ஒருவரும் எனக்குப் புரியும்படி கூறவில்லை ,எல்லா உம்முடைய ஊழியர்களும் பணக்காரர்களை பார்த்தே உம்மை பற்றி கூறினார்கள் ,நான் ஆலயத்திற்கு போனால் அங்கே உள்ளவர்கள் நான் பிச்சையெடுக்க வந்ததாக நினைத்து என்னை விரட்டியடித்தார்கள் இது நியாயமா ? என்று கேள்வி கேட்கும் பட்ச்சத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் உங்கள் நிலை என்னவாகும் ,நீங்கள் சொல்லுவீர்கள் நான் பாவம் செய்யவில்லையென்று. தேவன் உங்களைப் பார்த்து என்ன சொல்லுவார் இந்த சிரியவனுக்கு இடரலாய் இருந்தாய் போ பாதாளத்துக்கு என்பார் .ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’ —

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’
Permalink  
 


தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கும்படிதான் தேவனே ஒருவரை அபிஷேகம் பண்ணுகிறார்

லூக்கா 4:18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப்
பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்;
 
ஆனால் இங்கு நடப்பது என்ன?  ஒருமுறை ஒரு வீட்டுக்கு ஜெபிக்க வரும் பாஸ்டர் அந்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு பணம் எதுவும் தேறாது என்று தெரிந்தால் அடுத்தமுறை அந்த ஏழை வீட்டை  எட்டிகூட பார்க்க விரும்புவது  இல்லை.
 
"யாராவது என்னை பார்க்க வந்துவிட்டாலே என்னிடம் ஏதாவது பணம்/உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக
இருக்கிறது" என்று சொல்லி தம்மை பார்க்கவரும் மனுஷர்களை ஆள் வைத்து வடிகட்டி அனுப்பும்  பணக்கார பாஸ்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   
 
யாக்கோபு 2:6 நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?
 
காணிக்கை எவ்வளவு தேறும் என்பதன் அடிப்படையிலேயே பல சபைகளில் இன்று மனுஷர்கள் அங்கீகரிக்கபடுகிறார்கள் என்பது உண்மையே.   
 
இவர்களிடம் அதிகம் விசாரிக்கப்படும் என்று ஆண்டவர் நேரடியாகவே பேசியிருக்கிறார்!
 
ஏழைகளுக்கு இரங்குங்கள்! யாரையும் அற்பமாக எண்ணாதிருங்கள்.  
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

சகோ sunder அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard