பொதுவாக, இன்றைய உலகில் தன்னம்ம்பிக்கை (self confidence) என்பது மிக சிறந்த அம்சம் என கருத்தப்படுகிறது!! தன்னம்பிக்கை அற்றவன் என்றால் முதுகெலும்பு அற்றவன் என கூறுவோரும் பலர். தன்னம்பிக்கை அற்றவன் என படித்தவன் ஒருவன் தன்னை குறித்து கூறுவான் என்றால் அவன் எந்த நிறுவனத்திலும் பனி புரிய இயலாது.
இந்த தன்னம்பிக்கை என்பது ஒரு பரிசுத்த சுவாபமா? தேவன் கற்பித்ததா?
பொதுவாக, இன்றைய உலகில் தன்னம்ம்பிக்கை (self confidence) என்பது மிக சிறந்த அம்சம் என கருத்தப்படுகிறது!! தன்னம்பிக்கை அற்றவன் என்றால் முதுகெலும்பு அற்றவன் என கூறுவோரும் பலர். தன்னம்பிக்கை அற்றவன் என படித்தவன் ஒருவன் தன்னை குறித்து கூறுவான் என்றால் அவன் எந்த நிறுவனத்திலும் பனி புரிய இயலாது.
இந்த தன்னம்பிக்கை என்பது ஒரு பரிசுத்த சுவாபமா? தேவன் கற்பித்ததா?
பதில் தெரிந்தவர்கள் வசன ஆதாரத்துடன் பதியுங்கள்!!
GLORY TO LORD THE GOD
அன்பான சகோதரரே தங்கள் குறிப்பிடும் கருத்து உலக நிலைகளுக்க பயன்தரலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் தன்னம்பிக்கை என்ற பேச்சுக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். தன்னம்பிக்கை என்பது தற்பெருமையின் இன்னொரு பரிணாமம் என்பதே எனது கருத்து.
தன்மேல் நம்பிக்கை வைத்தால் தேவன்பேரில் உள்ள நம்பிக்கை நிச்சயம் குறையும்.
நமது விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்பேரில் மட்டுமே இருக்கவேண்டும். என்று வசனம் திரும்ப திரும்ப சொல்கிறது
I பேதுரு 1:21உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
சங்கீதம் 37:5உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 40:4கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
II கொரிந்தியர் 1:9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக,
தன்னம்பிக்கை உள்ள மனுஷனால் உலகத்தாருக்கு வேண்டுமானால் பல பயன்கள் இருக்கலாம். ஆனால் "தான் ஒரு பொருட்டே அல்ல" என்று தன்னை தரை மட்டும் தாழ்த்துகிரவனை கொண்டே தேவன் காரியங்களை செய்ய முடியும்.
மேலும் கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதுமே "நன் இந்த காரியத்தை சாதித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையாக பேசுவது நல்லதல்ல! அப்படி ஒரு காரியத்தை சாதிக்க நினைத்தால் "தான் ஒன்றுமே இல்லை தன்னால் ஒன்றுமே முடியாது" என்று உணரும் நிலை வரை தேவன் அவனை கடினமாக நடத்த கூடும்.
சில வேளைகளில் நமது தன்னம்பிக்கை மூலம் பல காரியங்களை சாதித்துவிட முடியும் ஆனால்அது தேவனுக்கு ஏற்றதுதான என்பதை நாம் நிர்மாணிக்க முடியாது!
நேபுகாத் நேச்சார் சொல்லும் இந்த வார்த்தைகளை சற்று கவனித்தால்
தானியேல் 4:30இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா
பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
அவன் செய்தது எல்லாமே தன்னம்பிக்கை மூலம் அவன் சாதித்ததுதான் என்பதை அறிய முடியும். ஆனால் தேவனோ அதை ஏற்க்கவில்லை.
ஆனால் "கர்த்தருக்குள் இதை செய்வேன்" என்று சொல்லி தேவன் பேரில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே தேவனுக்கு ஏற்றாற்போல் காரியங்களை சாதிக்க முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கும் தன்னம்பிக்கை இல்லை.ஏனென்றால் வேதம் இவ்வாறு சுய நம்பிக்கை இல்லாதிருப்பதை போதித்திருக்க, தன்னம்பிக்கை கொண்டு துணிகரம் கொள்வதை என்றோ விட்டு தொலைத்தேன் அனுதினமும் தொலைக்கவும் விரும்புகிறேன். ஏனென்றால்
நீதிமொழிகள் 28:26 தன் இருதயத்தைநம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
என வேதம் கூறுகிறது!!
ஆனாலும் .,கர்த்தர் என்னோடு இருக்கிறபடியால் மாத்திரம் என்மீது நம்பிக்கை கொள்கிறேன். இல்லையென்றால் என்னால் ஒரு வேலையும் (தேவ சித்தத்தையும் கூட!!!) செய்ய இயலாது என அறிந்திருக்கிறேன்.