இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாதி சான்றிதழ் கொடுப்பதில் சாதனை புரியும் அரசு அதிகாரிகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஜாதி சான்றிதழ் கொடுப்பதில் சாதனை புரியும் அரசு அதிகாரிகள்!
Permalink  
 


எனது மகள்  10ம்  வகுப்பு பரீட்சை எழுதுவதற்க்கு கண்டிப்பாக ஜாதி சான்றிதழ்  வேண்டும் என்று சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஆணை பிறப்பித்ததால் உடனடியாக அதற்க்கான ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிண்டி மாம்பலம் தாலுகா அலுவலகதில் கொண்டு சமர்பித்தேன். மறுநாள் ஒரிஜினல்  சற்றிதல்களுடன் வரும்படி  கட்டளையிட்டார்கள். அனால் மறுநாள்  போனபோது சம்பந்தபட்ட அதிகாரி விடுமுறை என்ற காரணத்தால் எதுவும் நடக்கவில்லை. அடுத்து தொடர்ந்து சுமார் ஐந்து நாட்கள் அங்கு சரிபார்க்க சம்பந்தபட்ட அதிகாரி வராத காரணத்தால் முக்கிய வேலைகளை விட்டுவிட்டு அலையும் எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 
 
இந்நிலையில் திடீர் என்று பள்ளி நிர்வாகமே சாதி சான்றிதழ் கொடுக்க போவதாகவும் அதற்க்கு தேவையான டாகுமென்ட் நகல்களை சமர்பிக்கவும் வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்கள். நாங்களும் நல்ல செய்தி என்று எண்ணி, தாலுகா அலுவலகம் போவதை நிறுத்திவிட்டு பள்ளியில் விண்ணப்பம் செய்தோம். சுமார் 1மாதம் கழித்து, பள்ளியில் சான்றிதல் கொடுக்க முடியாது, தாலுகா அலுவலகத்தில் சென்று உடனடியாக வாங்கி வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டளையிட, தாலுகா அலுவலகம் போய் பார்த்த போது எங்கள் விண்ணப்பம் எங்கு போனது என்றே தெரியாமல் போய்விட்டது.
 
அதன் பின்னர் சாதி சான்றிதல் இல்லாமலே 10 வகுப்பு பரீட்சை முடிந்துபோனது. 11ம்  வகுப்பில் சேர்க்க சாதி சான்றிதல் அவசியம் என்று சொன்னதால் மீண்டும் கடந்த மே  மாதம் புதிதாக ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து  தாலுகா அலுவலகம் போய் சமர்ப்பித்தோம் . மீண்டும் இரண்டு மூன்று முறை அலைந்த பின்னர் 
ஒரு வழியாக ஒரிஜினல் சரி பார்க்கபட்டு  வருவாய் ஆய்வாளர் கையெழுத்தும்  பெறப்பட்டு மே மாதம் ஒரு குறிப்பிட்ட தேதி வந்து ஜாதி சான்றிதழை பெற்று கொள்ளும்படி ஒரு சிறிய ஒப்புதல் சீட்டும் கொடுக்கபட்டது . அப்பட்டா என்று நிம்மதியுடன் இருந்தோம். 
 
அனால் அந்த தேதியில் போய் பார்த்தபோது BC ஜாதி சான்றிதல் எழுதும் அலுவலர் வரவில்லை எனவே வெள்ளிகிழமை வாருங்கள் / திங்கள் வாருங்கள் அடுத்த வாரம் வாருங்கள் என்று சுமார் 15 நாட்கள் அலைந்தோம். இறுதியில் அந்த சான்றிதல் எழுதுபவர் வந்தபோது நாங்கள் கொடுத்த விண்ணப்பம் அவரிடம் வரவே இல்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் எங்கள் கையில் இருக்கும் ஒப்புதலை காட்டியபோது பக்கத்தில் குவிந்து கிடந்த ஒரு காகித குவியலை காட்டி அதில் உங்கள் விண்ணப்பம் இருக்கிறதா  என்று தேடி எடுத்து தாருங்கள் என்று சொல்லிவிட்டார்.
 
எங்களைப்போல இரண்டு மூன்றுபேர் அந்த காகிதங்களை புரட்டி புரிட்டி தேட ,இறுதியில் கடவுள் காட்டியதுபோல எங்க விண்ணப்பம் கையில் கிடைத்துவிட்டது. அப்பாடா இன்றோடு பிரச்சனையை முடிந்தது என்று எண்ணி சான்றிதல் எழுதும் அந்த மேடத்திடம் கொண்டு கொடுத்தபோது நாளை வாருங்கள் தயாராகிவிடும் என்று சொல்லிவிட்டார்கள்.
 
மறுநாள் சென்று பார்த்தபோது  அந்த இருக்கையில் யாருமே இல்லை அதற்க்கு அடுத்த இரண்டு மூன்று நாங்கள் எங்களில் அவசர வேலையினிமித்தம் போக முடியாமல் அடுத்த நாள்  போய்  பார்த்த போது, நாங்கள் கஷ்டப்பட்டு தேடி எடுத்து கொடுத்த படிவத்தை வாங்கிய அதே மேடம் "நீங்கள் சொல்வது போல் ஒரு விண்ணப்பமே என்னிடம் வரவில்லை" என்ற பழைய பல்லவியையே சொல்ல, சாதியையும் வேண்டாம்  சான்றிதழும் வேண்டாம் என்று விரக்தியில் வெளியேறிவிட்டோம் .
 
ஆகினும் மக்கள் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை அப்படியே விட்டால் அநேகர் பாதிக்கபடுவார்கள் என்று எண்ணி இதை குறித்து CM செல் தனிப்பிரிவில் ஒரு புகார் ஒன்றை கொடுத்தேன்.
 
உண்மையிலேயே விரைந்து செயல்படும் அந்த செல்லில் உள்ள அலுவலர்கள் என்னை தொடர்பு கொண்டு மீண்டும் தாலுகா அலுவலகம் போய்  பார்க்கும்படி கூறினார்கள். அதற்குள் எனது மகனுக்கு கல்லூரி துவங்கிவிட்டது எனக்கும்  வேலைபழு அதிகமாகி விட்டது.  
 
ஆகினும் சிரத்தை எடுத்து ஒரு செவ்வாய் கிழமை போய்  பார்த்த போது, எதோ ஒரு காரணத்தால் அங்கு எல்லோருமே வேறு எங்கோ போய்விட்டார்கள்.  பின்னர் சிறிது நாட்கள் விட்டுவிட்டோம். இந்நிலையில் மீண்டும் CM செல் அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு,  தாலுகா அலுவலகத்தில் ஒரு அலுவலர் பெயரை குறிப்பிட்டு அவரை  சென்று பார்த்தால் உடனே உங்களுக்கு சான்றிதல் கிடைக்கும் என்று சொன்னார்கள். மறுநாள் அதேபோல் சென்று அந்த குறிப்பட்ட  அலுவலரை பாத்தபோது "நீங்கள் கொடுத்த விண்ணப்பம் எங்கு போனது என்று  தெரியவில்லை எனவே புதிதாக ஒரு விண்ணப்ப படிவம் வாங்கி தேவையான நகல்களை இணைத்து அதற்காக ஒரிஜினல்களையும் கொண்டு வாருங்கள். உடனே வருவாய் ஆய்வாளர் கையெழுத்து வாங்கி சான்றிதல் தந்துவிடுவேன் என்று கூறினார்.
 
அடுத்து இரண்டு மூன்று நாட்கள் எங்கள் பணியினிமித்தம் போக முடியாமல் போனது. அடுத்த நாள் அவரே போன்பண்ணி ஏன் வரவில்லை என்று விசாரித்தார். நானும் எனது வேலைப்பழுவை குறித்து சொல்லி, நாளை வெள்ளிகிழமை கண்டிப்பாக வருகிறோம் என்று சொன்னேன் அவரும் கடந்த ஜூலை19ம தேதி (வெள்ளிகிழமை)  வாருங்கள் என்று கூறினார். எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு ஜூலை 19ம தேதி சென்று பார்த்தபோது அவர் வேலைக்கு வரவில்லை. பக்கத்தில் இருக்கும் யாரும்  அதில் சம்பந்தமே இல்லை என்பதுபோல் சொல்லிவிட்டார்கள். 
 
மீண்டும் இந்த ஜாதி சான்றிதள  வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.  ஆனால் அவர்கள் என்னை விடவில்லை புதன் கிழமை(24/7) கலக்ட்ரேட் அலுவலகத்தில் இருந்து போன் செய்து சாதி சான்றிதல் வீங்கிவிட்டீர்களா? என்று கேட்டார்கள். நான் நாங்கள் வெள்ளிகிழை போனபோது அவர் விடுமுறையில் போய்விட்டார் எனவே கிடைக்கவில்லை என்று சொன்னேன். 
 
சம்பதபட்டவர்களிடம் போன் செய்து விசாரித்த அவர் நீங்கள் நாளை 25/07 அன்று அங்கு போய் அவரை பாருங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொன்னார். 25/07 அன்று  சென்று பார்த்தபோதும் அவர் வேலைக்கு  வரவில்லை என்றும் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறிவிட்டார்கள்.
 
உடனே நான் எனக்கு போன் செய்து போகச்சொன்ன அந்த அலுவலர் நம்பருக்கு போன் செய்து விசாரித்தபோது, போனை எடுத்த  ஒரு மேடம் "இது கலக்ட்ரேட் அலுவலகம் அங்கு ஆண்களே யாரும் கிடையாதே உங்களுக்கு யாரும்  போன் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று கூறிவிட்டார்கள். (போன்  பேசிய அதிகாரியின் பெயரை கேட்க தவறிவிட்டேன்) 
 
இத்தனை முறையும் கிண்டி தாலுகா அலுவலகத்துக்கு பொறுமையோடு அலைந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் என் மகன் உடனே வேறு ஒரு வேலையினிமித்தம் சென்ட்ரலுக்கு கிளம்பி போய்விட்டான். 
  
அனால் நான் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே கலக்ட்ரேட் எண்ணுக்கு தொடர்பு கொண்டு என்னுடைய நிலையை விளக்கமாக சொன்னபோது, சம்பந்தபட்ட என்னுடன் போன்  பேசிய அந்த அதிகாரியிடம் தொடர்பு கொடுக்கபட்டது. 
 
அவரிடம்  "ஐயா இன்றும் எங்களுக்கு சான்றிதல் கிடைக்கவில்லை காரணம் நீங்கள் சொல்லிய அந்த அதிகாரி இன்றும் விடுமுறையில் இருக்கிறார்" என்று சொன்னபோது. நான் விசாரித்து விட்டு சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி வைத்தார்.
 
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்ட அவர் வேறு ஒரு அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு நீங்கள் உடனே சென்று அவரை பாருங்கள் என்று சொன்னார். ஆனால் என் மகன் அந்த இடத்தைவிட்டு கடந்து தூரம் போய்விட்டதால் திரும்பி வர முடியவில்லை.
 
ஆகினும் அடுத்தநாள் 26/07/2013 அன்று தாம்பரத்தில் அவன் கல்லூரி சுமார் 1.30க்கு முடிந்ததும் மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று பார்த்தபொது குறிப்பிட்ட அதிகாரியை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கபட்டது. பின்னர் "CM செல் புகார் கொடுத்துள்ளோம்" என்றெல்லாம் கூறியபின்னர், அவர் வெளியே கிளம்புகிறார் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும், எனவே அப்புறம் வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளே இருந்த அவரை சந்திக்க விடாமல் வெளியிலேயே தடுத்துவிட்டனர்.
 
இன்னும் இந்த கதை நீண்டுகொண்டே போகும் ஆகினும் அடுத்து ஒரு வாரம் கழித்து சாதி சான்றிதழை வாங்கிவிட்டோம் என்று சொல்லி முடிக்கிறேன் 
 
ஒருமுறை பேருந்தில் ஏறி இறங்கினால் 11 ருபாய் வசூலிக்க படுகிறது போய் வர 22 ருபாய் சுமார் 20 முறை தாலுகா அலுவலகம் போய்வர செலவு என்ன? மூன்றுமுறை நகல்கள் எடுக்க மற்றும் படிவம் வாங்க பணம்.  எல்லாவற்றையும்விட எங்களுடைய உழைப்பு மற்றும் கால விரையம் இவற்றின் மதிப்பை கணக்கிடவே முடியாது!  
 
இதற்க்கெல்லாம் யார் பொறுப்பு? 
 
மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசு எந்திரம் மக்களை சோதனைக்குள் நடத்துகிறது. நான் மட்டுமல்ல எங்களைபோல் எத்தனையோ பேர் தினம் தினம் வந்து சண்டைபோட்டு போனார்கள். அன்றாடம் வேலை செய்து பிழைப்பை பார்ப்பதே கடினமான நிலையில் இருக்க, ஒன்றுக்குமே உதவாத இந்த சாதி சான்றிதழை அரசாங்கம் எதற்கு கேட்கிறது என்று புரியவில்லை. அந்த சாதி சான்றிதழால் எங்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை?
 
(சகோதரர்களே மேலே நான் எழுதியிருப்பது நடந்த ஒரு உண்மை சம்பவம். இதற்க்கு வசன ஆதாரம் எதுவும் கேட்க வேண்டாம்!)
     
 


-- Edited by SUNDAR on Tuesday 27th of August 2013 11:50:54 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard